Lankamuslim.org

வபாத்தான ஊடகவியலாளரின் மறுமை வாழ்வுக்காக பிராத்திப்போம்

leave a comment »

ggM.ரிஸ்னி முஹம்மட், நூர்தீன் , அஸ்ரப் கான் ,   சஹீத் அஹமட்,சௌஜீர் ஏ முகைடீன் : நேற்று நள்ளிரவு வபாத்தான காத்தான்குடி சிரேஷ்ட ஊடகவியலாளரும் எமது காத்தான்குடி செய்தியாளர் எப்.எம்.பர்ஹானின் தந்தையுமான ஏ.எல்.எம்.பளுலுள்ளாஹ்வின் மறைவு குறித்து Lankamuslim.org ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன். அவரின் மறுமை வாழ்வுக்காகவும் இறைவனிடம் பிராத்திக்கிறது.அவரின் மறைவு குறித்து அவரின் குடும்பத்திற்கும் அவரின் பிரிவால் துயர் அடையும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறது .

அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் சிரேஷ்ட பிராந்திய ஊடகவியலாளர் பளுலுள்ளாவின் வபாத் செய்தியை கேள்யுற்று அதிர்ச்சியும் கவலையும் அடைகிறோம். பளுலுள்ளாஹ்வின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக பிராத்திக்குமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கேட்டுள்ளது .கடினமான காலத்தில் தனது ஊடகப்பணியை முன்னெடுத்தவர். இவரின் மறைவு அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என காத்தான்குடி மீடியா போரம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி மீடியா போரத்தின் சார்பாக அதன் தலைவா; எம்.எஸ்.எம்.நுர்தீன் அதன் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்த்தபா ஆகியோர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது யுத்தமேகங்கள் சூழந்திருந்த காலத்தில் தனது ஊடகப்பணியை மிகவும் சிறப்பாக செய்த ஒருவரே சிரேஷ்ட ஊடகவியலாளர் பளுள்ளாவாகும் என்று தெரிவித்துள்ளது .

இவரின் மறைவுச் செய்தியை வெள்ளிக்கிமை(30.11.2012) அதிகாலை கேள்வியுற்றவுடன் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தோம். ஒரு சிறந்த பிராந்திய ஊடகவியலாளராக செயற்பட்ட ஊடகவியலாளர் பளுள்ளாஹ் இந்தப்பிராந்தியத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுடனும் நெருக்கமான உறவையும் இணைப்பையும் வைத்திருந்தார்.

1990ம் ஆண்டு காத்தான்குடியில் இடம் பெற்ற பள்ளிவாயல் படுகொலை சம்பவம் உட்பட இந்த பிராந்தியத்தில் அன்று நடந்த பல் வேறு சம்பவங்களை வெளியுலகுக்கு தனது ஊடகப்பணியினால் கொண்டு சென்றவர் மர்ஹும் பளுள்ளாவாகும். என்று தெரிவித்துள்ளது .

இவரின் மறைவு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் உப தலைவராக இருந்த ஊடகவியலாளர் பளுலுள்ளாஹ் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒருவராகும்.சிறந்த நற்குணமும் ஊடக ஆற்றலும் கொண்ட ஊடகவியலாளர் பளுலுள்ளாஹ்வின் மறைவு தமிழ் முஸ்லிம் ஊடக சமூகத்திற்கு பேரிழப்பாகும்.என்று தெரிவித்துள்ளார் .

சிரேஷ்ட ஊடகவியலாளரும் இலங்கை போக்குவரத்து சபை காத்தான்குடி டிப்போவின் முகாமையாளருமான ஏ.எல்.எம்.பழுலுள்ளாஹ்வின் மறைவு ஊடகத்துறையினருக்கும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கும் பாரிய பேரிழப்பாகும் என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்

பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் ஷேகுதாவூத் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் வேகமாகவும் விவேகமாகவும் நடு நிலையாகவும் பனிவுத்தனமையுடனும் செய்பட்ட ஒரு பிராந்திய ஊடகவியலாளராக நான் ஊடகவியலாளர் பளுலுள்ளாவை பார்க்கின்றேன். ஒரு ஊடக வியலாளருக்கு நடு நிலைமை மற்றும் சகிப்புத்தன்மை விமர்சனம் உள்ளிட்ட குணாம்சங்கள் இரக்க வேண்டும். இந்த குணாம்சங்களை கொண்டவராவ ஊடகவியலாளர் பளுலுள்ளாஹ் விளங்கினார். அவருக்காக பிரத்திப்போமாக என தெரிவித்துள்ளார்.

இதே போன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியும் தனது அனுதாபச் செய்தியை வெளியிடடுள்ளார்.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 30, 2012 இல் 3:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: