Lankamuslim.org

One World One Ummah

சிறகு முளைத்த விபச்சார அங்கீகாரம் ?

with 7 comments

சுவைர் மீரான் 
ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் எழுத்தாளர் (?) எழுதிய ‘சிறகு முளைத்த பெண்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு வைபவம் சென்ற 18.11.2012, ஞாயிற்றுக்கிழமை மாலை 04.15 மணிக்கு டீ. ஆர். விஜேவர்த்தன மாவத்த, கொழும்பு 10 இல் அமைந்துள்ள தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் டாக்டர் தி.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். புரவலர் ஹாஷீம் உமர் அவர்கள் முன்வரிசை அழைப்பாளராக அமர்ந்திருந்தும், வழமைக்கு மாறாக, முதல் பிரதியை வைத்திய கலாநிதி தாசீம் அகமத் பெற்றுக்கொண்டார்.

மேற்படி நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், பிரபல சமூக ஆர்வலருமான என்.எம்.அமீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத், கலாபூஷணம் நஜுமுல் ஹுசைன் போன்றவர்களும் கூட கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் டெயிலி மிரர் தமிழ் பதிப்பின் இணையத்தில் வெளியான செய்தியின் பத்தாவது புகைப்படத்தில், முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களில் காரசாரமான வார்த்தைகளில் நறுக் என அறிக்கை விடுபவரான, உலமாக் கட்சியின் தலைவர் மெளலவி முபாரக் அப்துல் மஜீத் அவர்களை ஒத்த ஒருவர் சிறப்புப் பிரதி பெற்றுக் கொள்ளும் புகைப்படம் வெளியாகியுள்ளது. எனினும், முபாரக் அப்துல் மஜீத் என்ற பெயரை ஊடகங்களில் காணக் கிடைக்கவில்லை.

மீள்பார்வை, நவமணி, விடிவெள்ளி போன்ற அச்சு ஊடகங்கள் முதல் யாழ் முஸ்லிம், காத்தான்குடி இன்போ போன்ற இணைய ஊடகங்கள் வரை, மேற்படி நிகழ்வை முஸ்லிம்களுக்கு பெருமை சேர்க்கும் ஓர் நிகழ்வு போன்று கருதி முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு இருந்தன.

முஸ்லிம் பெண்கள் பொதுவாகவே ஒழுக்கமாக வெளிக்கிளம்பும் இன்றைய நாட்களில், மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் எழுத்தாளர் (?) சில ஆண்டுகளுக்கு முன்னர் டாக்கா வீதிகளின் பெண்களைப் பற்றி ஒரு இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய விவரணத்தில் காட்டப்பட்ட பங்களாதேஷ் பெண்களை ஒத்த முறையிலான ஆடையிலே சமூகமளித்திருந்தார். குரைந்தத பட்சம் ஹபாயா கூட அணிந்திருக்கவில்லை, அவ்ரத்தைக் கூட முறையாக மறைத்திருக்கவில்லை.

20.11.2012 செவ்வாய்க்கிழமை, லண்டன் BBC யின் தமிழோசைக்கு ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் எழுத்தாளர் (?) வழங்கிய சர்ச்சைக்குரிய பேட்டி குறித்து அலசுவதற்கு முன்னர், ‘சிறகு முளைத்த பெண்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ரவூப் ஹக்கீம், தனது உரையில் தெரிவித்த சில விடயங்களை சற்று நோக்குவோம்.

“பெண்கள் கவிதை எழுதும் பொழுது அதற்கு கடிவாளம் இடுவதற்கு பலதரப்பினர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்ணொருவர் கவிதை எழுதும் பொழுது இஸ்லாமிய சமூகம் அவரை உற்றுநோக்குகின்றது” என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தனது அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டார்.

மேலும், “இவரது துணிகரம், அதுவும் சொல்ல நினைக்கின்ற விஷயத்தை அச்சமின்றி கூற விளைகின்ற துணிச்சல் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதனை ஒவ்வொருவரும் பார்க்கின்ற பார்வை வித்தியாசமானதாய் இருக்கலாம். அவரது ஆக்கங்களுக்கு அளவுக்கதிகமான கடிவாளங்களை போடவேண்டிய அவசியமில்லையென கருதுகிறேன்.” என்று சர்மிளா செய்யத்திட்கு உற்சாகமூட்டுகின்றார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்.

“பெண் கவிஞர் ஒருவர் யதார்த்தபூர்வமாக ஏதாவது ஒன்றை நோக்குகின்றார் என்றால் அதில் ஏதோவொன்று தொக்கி நிற்கலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு அவரது கவிதையொன்றில் தத்ரூபமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது” என்று ஒருவனுக்கு ஒருத்தி என்ற  சடவாதக் கோட்பாட்டை ரவூப் ஹக்கீமும் தத்ரூபமானது என்று கிலாகிக்கின்றார். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு இஸ்லாத்திற்கு முரணான ஒன்றாகும்.

“விலைமாது பற்றிய அவரது கவிதையொன்றும் என்னைக் கவர்ந்தது. என்னில் எதைத் தேடுகிறாய் என்று ஒரு விலைமாது கேட்கும் போது, அவளது அவலம் நன்கு புலப்படுவது அந்தக் கவிதை எடுத்துக்காட்டுகிறது. முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் இலக்கிய ஆர்வம் கரைபுரண்டோடுவதை அண்மைக்காலமாக நன்கு அவதானிக்க முடிகிறது.” இது ரவூப் ஹக்கீமின் வார்த்தைகள்.

இது, எங்கேயோ பாரிய கோளாறு இருப்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. மேற்படி விலைமாது தொடர்பான ரநூப் ஹக்கீமின் வார்த்தைகளை வாசிக்கவே மனம் கூசுகின்றது. விலைமாது பற்றி ஒரு முஸ்லிம் பெண் “என்னில் எதைத் தேடுகின்றாய்” என்ற ரேஞ்சில் எழுதியுள்ளார், இலங்கையின் நீதியமைச்சர் விலைமாதுவின் மீது முஸ்லிம் பெண்களின் இலக்கிய ஆர்வம் புரோண்டோடுவதை விரும்புகின்றார்.

BBC யின் பேட்டிக்குள் நுழைய முன்னரே, ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் எழுத்தாளர் (?) சிந்தனை எங்கே போய்க் கொண்டிருகின்றது? என்ற கேள்வியைக் கேட்க வேண்டி இருக்கின்றது.

கர்ப்பப்பை சுதந்திரம் கேட்டு, குர்ஆனில் குறை கண்ட குறைமதியாள், பங்களாதேஷின் எழுத்தாளர் (?) தஸ்லீமா நஸ்ரினை ஆதரிக்க, அந்நாட்டில் ஒரு முஸ்லிம் அரசியல் வாதி கூட இருக்கவில்லை. தஸ்லீமா நஸ்ரின் இலங்கையில் இருந்திருந்தால், நம்நாட்டு நீதி அமைச்சரே மாலை போட்டு இருப்பாரோ?

தென் மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்ன என்பவர், சுற்றுலாப் பிரயாணத் துறையை ஊக்குவிப்பதற்கான பிரேரணை ஒன்றை மாகாண சபை மூலம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளமை தொடர்பில், BBC யின் தமிழோசை, சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் எழுத்தாளர் (?) தொடர்பு கொண்டு கருத்துக் கேட்ட பொழுதே, இஸ்லாத்திற்கு முரணான விதத்தில், விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்படுவதை சரிகாணும் விதத்திலான தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இவரது சர்ச்சைக்குரிய கருத்துக்களை http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121120_sharmila.shtml இல் கேட்கலாம். இஸ்லாம் பெரும் பாவமாக வகைப்படுத்தியுள்ள விபச்சாரத்தை நல்ல விடையமாக பார்க்கின்றார் இவர்.

இவரது கருத்துக்கள் பாரதூரமானவையாகவும், கேவலமானவையாகவும் உள்ளன, அதிலும் குறிப்பாக தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் பெண் ஒருவரிடமிருந்து இவ்வாறான கருத்துக்கள் வெளிப்பட்டிருப்பது அருவருப்பானதாகும். கவிதையிலே விலைமாது சார்பில் “என்னில் எதைத் தேடுகின்றாய்” என்று அங்கலாய்த்த இவரின் தமிழோசை பேட்டி விபச்சாரத்துரை குறித்து இவருக்கு இருக்கும் ஆழமான அறிவை கோடிட்டுக் காட்டுகின்றது.

இஸ்லாம் பெரும் பாவமாக வரையறை செய்துள்ள விபச்சாரம் என்கின்ற மானக் கேடான செயல், சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப் பட்டு, குடும்ப வாழ்க்கை மேம்படுத்தப் பட வேண்டுமே தவிர, நொண்டிச் சாட்டுக்களைக் கூறிக் கொண்டு வளர்த்தெடுக்கப்படக் கூடாது.

தஸ்லீமா நஸ்ரினும், சல்மான் ருஸ்தியும் முஸ்லிமாகப் பிறந்த, தென்னாசிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் (?) என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் எழுத்தாளர் (?) நூல் வெளியிட்டில் முன்னணியில் இருந்த ரவூப் ஹக்கீம், ஹாஷீம் உமர், பசீர் சேகுதாவூத், என்.எம்.அமீன்,முபாரக் அப்துல் மஜீத் போன்றவர்கள், இவரின் மேற்படி தறிகெட்ட சிந்தனைப் போக்குக் குறித்து கவனம் செலுத்தி, உரிய வைத்தியம் செய்ய இப்பொழுதே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதவிடத்து, இந்தப் போக்கு, இலங்கை முஸ்லிம்களுக்கே பாரிய அவமானத்தைத் தேடித்தர கூடியதாக அமைந்துவிடும்.

கடைசியாக, டெயிலி மிரர் இணையத்தின் செய்தியின் கீழ் தாஹா முஸம்மில் (உடகவியலாளர் தாஹா முஸம்மிலா என்று தெரியவில்லை) என்பவர், அஜித் பிரசன்னவின் கருத்துக் குறித்து பதிந்துள்ள நெற்றியடியான பின்னூட்டத்தை, சிந்தனைக்காக வழங்குகின்றேன்.

Thaha Muzammil2012-11-20 13:57Let him first put his mother, sisters, daughters and wife to the market.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 21, 2012 இல் 8:00 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

7 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. well said writer I agreed 200%

  S.Niyas

  நவம்பர் 22, 2012 at 12:36 முப

 2. இந்தளவு மோசமான, தரங்கெட்ட கவிதை நூலுக்கு அரசியல்வாதிகள் முதல் கல்விமான்கள்வரை, கூடிக் குலாவி பாராட்டி விட்டு, விசிலடிச்சான் குஞ்சுகள் மாதிரி பறந்ததனால்தான், தற்போது வெட்கமில்லாமல் துணிவுடன் bbc க்கு அறிக்கை வெளியிட்டிருக்கிறா..

  யாரும் அந்த நூலை விலை கொடுத்து வாங்கி, அவ..ன் வருமானத்தை உயர்த்த வேண்டாம்.

  வாசிகசாலையிலோ அல்லது எந்த பொது இடங்களிலோ அந்த .. புத்தகத்தை வைப்பதைத் தடை செய்யுங்கள்.

  thalabaan

  நவம்பர் 22, 2012 at 5:39 முப

 3. முடியுமானால் ஏறாவூர் சம்மேளனம் ரவூப் ஹக்கீமை அழைத்து விசாரிக்க வேண்டும்

  Omar Mohamed

  நவம்பர் 22, 2012 at 10:09 முப

 4. “என்னுள் எதைத் தேடுகின்றாய்” என்ற வார்த்தைப் பிரயோகமே “கண்ணுக்கு மை அழகு…. கவிதைக்குப் பொய் அழகு” என்ற தத்துவ வார்த்தையை கோடிட்டுக் காட்டுகின்றது. இட்டுக் கட்டிப் பொய்யை அழகாக கூறும் கலை தான் கவிதை என்பது. எந்த விலை மாதுவாவது என்னிடம் எதைத் தேடுகின்றாய் எனக் கேட்பாளா ? அது தான் எல்லோருக்கும் தெரிந்த தேடலே…மாறாக அவளே வந்தவனிடம் எதையோ தேடுவாள்….காரணம் அவளுக்கு பொருள் அல்லது பணமே முக்கியம்……இந்தப் பெண் கவிஞரும் தஸ்லிமா மற்றும் ருஷ்தி வரிசையில் யூத சீ ஐ ஏ ஏஜென்டுகளிடம் விலை போன மாதுவாக இருக்கலாமோ என்ற ஐயம் ஏற்படுகின்றது. போதாக் குறைக்கு கவிஞரின் புழுகை விட வெளியீட்டு விழாவுக்கு வந்த மாபெரும் புழுகர்கள் அதை விட புழுகிவிட்டுச் சென்றுள்ளார்கள்….பொய்யிலே புரளும் அமைச்சர் அல்லது போலி முஸ்லிம் தலைவர்கள் அங்கு பொய்க்கு ஒத்தடம் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்கள்…..இந்தப் பொய் ….இல்லை இல்லை…. போலிக் கவிஞர்களுக்கு அல்குர்ஆனின் 26 வது அத்தியாயமான “கவிஞர்கள்” (அஷ்ஷுஅரா) என்ற ஸூராவின் வசனம் 221 லிருந்து 227 வரை இறைவன் கூறும் அறவுரையைப் பார்த்து விட்டு கவிஞர்களும் இவர்களுக்கு சான்றிதழ் வழங்க வரும் மேடையின் அண்டப் புழுகர்களும் இனிமேல் வருமாறு வேண்டுகின்றேன்..காரணம் வல்ல அல்லாஹ்வே இவர்களைப் பொய்யர்கள் என்று சான்றிதழ் வழங்கி விட்டான்………….கவிஞரே உம் திறமையை பெண்களின் வாழ்வை தீன் வழியில் நின்று உயர்த்தப் பாடுபடுவதில் காட்டு…..மாறாக போலிக் கவிதை பாடுவதில் காலத்தை வீணடிப்பதில் காட்டாதே…………

  Ossan Salam - Doha

  நவம்பர் 22, 2012 at 10:11 முப

  • சீறாப்புராணம் பாடிய உமறுப் புலவரும் ஒரு அண்டப் புளுகர் தானே!

   thalabaan

   நவம்பர் 22, 2012 at 2:53 பிப

 5. கவிதை: இட்டு கட்டிய பொய்களை இதமாக கூறும் கலையின் பெயர்?

  கலைஞனால் உலம் வாழ்வதில்லை

  உலகத்தாலேயே கலைஞன் வாழ்கிறான்

  கலைஞர்கள் உலகத்தின் அச்சாணிகள் என்ற பொய்யை சொல்லி சொல்லியே!!!

  pmamfmohammedhiraz

  நவம்பர் 22, 2012 at 3:49 பிப

 6. …………………………………………………………………………………………………………………………………………………….. முன்னோட்டம் பார்க்கிறதோ.வியாபாரத்திற்கு இலவச விளம்பரம் BBC வடிவில்.விபச்சாரத்தை எல்லா மதங்களும் தடுக்குது.அப்படி இருக்கும் போது அது சம்பந்தமாக பேட்டி கொடுக்க வேண்டிய தேவை ஏன் வந்தது.வாயை கொடுத்து நன்றாக வாங்கி கட்டிக் கொண்டிருக்கிரா. கவிதை அம்மணமாகி விட்டது.

  ayman muhsi

  நவம்பர் 22, 2012 at 11:19 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: