Lankamuslim.org

One World One Ummah

‘கருப்பு ஒக்டோபர்’களின் அவலங்கள்

with one comment

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் கழிந்துள்தை நினைவு கூறும் நிகழ்வொன்றினை முஸ்லிம் கவுன்சில் ஒப்  ஸ்ரீலங்கா பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடத்தியது.

அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்த கொண்டு  முக்கிய உரையினையாற்றினார். அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா,பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஜவன்,பேராசிரியர் டாக்டர் ஹஸ்புள்ளா,ஆகியோரும் இங்கு உரைகளை ஆற்றினர்.

இடம் பெயர்வு குறித்து மாணவி நஹ்லா அனீஸ் ஆங்கிலத்தில் காத்திரமான உரையினை இங்கு முன் வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர், உறுப்பினர்கள், பன்னாட்டு துாதுவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்களும் இதன் போது கலந்து கொண்டனர்

Written by lankamuslim

நவம்பர் 16, 2012 இல் 11:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. இதுநாள்வரை தெருவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்துக்குச் சென்றது ஓர் முன்னேற்றகரமான நடவடிககையே!

    இப்படி இன்னும் எத்தனை வருடங்கள் நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் நடக்கப் போகின்றன‌வோ, யாமறியோம் பராரமே என் மக்கள் அங்கலய்ப்பது காதுகளில் விழத்தான் செய்கின்றது!

    பாவம் இப்படி அங்கலாய்த்தவர்களில் பலர் செத்து மடிந்து விட்டார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்!

    nizamhm1944

    நவம்பர் 17, 2012 at 12:22 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: