Lankamuslim.org

அப்துர் ரஹ்மான் காத்தான்குடி நகரசபையிலிருந்து மீளழைப்பு

with 2 comments

PMGG ஊடகப் பிரிவு: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மீளழைத்தல் கொள்கைக்கமைவாகவும், சூறாசபையின் தீர்மானத்துக்கமைவாகவும் காத்தான்குடி நகரசபை உறுப்பினராக கடமையாற்றி வந்த பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் அவர்கள் 28.09.2012 முதல் தனது நகரசபை பிரதிநிதித்துவத்தினை இராஜினாமாச் செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமாக் கடித்தத்தினை நேற்றிரவு இடம்பெற்ற மாதாந்த அங்கத்தவர் ஒன்று கூடலின்போது PMGGயின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தெளஸ் நளீமி அவர்களிடம் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து மேற்படி வெற்றிடத்திற்கு புதிய நகரசபை உறுப்பினராக காத்தான்குடி 06ம் குறிச்சியைச் சேர்ந்த சகோதரர் MHA.நஸீர் அவர்களை நியமிப்பதற்கு சூறாசபை முடிவு செய்துள்ளதாக சூரசபை அமீர் இதன்போது தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சகோதரர் MHA. நஸீர் அவர்கள் உரையாற்றினார். அவர் தமதுரையில், “தான் ஒரு சாதாரண அங்கத்தவராகவே இந்த இயக்கத்தில் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன். என்னை இப்பதவிக்கு இயக்கம் அடையாளம் கண்டு எனக்கு வழங்கியுள்ள அமானிதத்தினை மிகச் சரியாக நிறைவேற்ற அல்லாஹ் எனக்கு அருள் பாலிக்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

அத்தோடு இது படித்தவர்களின் இயக்கம் என்ற ஒரு மாயை இருக்கிறது, அப்படியல்ல கடந்த 6 வருடங்களாக இவர்களோடு இணைந்து சூறாவில் இருந்து நான் செயற்பட்டு வருகிறேன்.

இங்கு அவ்வாறான எவ்வித வேறுபாடுகளையும் நான் காணவில்லை. இரகசிய வாக்கெடுப்புக்கள் நடத்தப்படும் போதெல்லாம் நானும் வாக்குரீதியாக முன்னிலைப்படுத்தப்பட்டே வருகிறேன்.

இது சூறா என்மீது வைத்துள்ள நம்பிக்கையையும், என்னைச் சரியாக அடையாலங்கண்டுள்ளமையையுமே காட்டுகிறது. இன்ஷா அல்லாஹ் இவ் அமானிதத்தினை நான் சரியாக மேற்கொள்ள நீங்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, ஆலோனைகளையும் வழங்கவேண்டும் எனவும் வேண்டுகிறேன்.” எனத் தெரிவித்தார்.

 

 

 

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 30, 2012 இல் 5:48 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. அப்பாடா குற்ற சாட்டுகளுக்கு ஆப்பு வைக்கபட்டுள்ளது இதுவே தேர்தலின் முன் நடந்திருந்தால் சிலபேரின் சுட்டி காட்டலுக்கு இடம் வைக்காமல் இருந்திருக்கும் இன்னும் அதிகமான வாக்குகள் திரும்பும் நிலையும் உறுவாகி இருக்கும்!!!

  யார் பதவி வகித்தாலும் கட்சியை நம்பி வாக்களித்த மக்களுக்கு திட்டமிட்ட ஒழுங்கில் நகரசபையின் எதிர்கட்சியாக இருந்து கண்கானிக்கும் பனியும் நிழல் நகரசபை நிர்வாகமுமாக இருந்து நகரசபையை வழி நடத்தும் பொறுப்பும் எப்போதும் இருக்கிறது

  PMAMF Mohammed H.I.R.A.Z

  செப்ரெம்பர் 30, 2012 at 11:17 பிப

 2. appatha namma kky cairman utpatha anaivarukkum rampa happy nalla ulaikkalam

  farsath

  ஒக்ரோபர் 1, 2012 at 11:16 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: