Lankamuslim.org

One World One Ummah

முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் இரண்டரை ஆண்டுகள் என்பதை எவரும் மீறமுடியாது

with 7 comments

 F.M.பர்ஹான், அஸ்லம் அலி : கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் 2 1/2 வருட காலம் பதவி வகிப்பார் உடன்பாடு மீறப்பட முடியாது என செயலாளர் நாயகம் உறுதிபட தெரிவிப்பு கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவி சுதந்திர கட்சியைச்சேர்ந்த நஜீப் ஏ மஜீதுக்கு முஸ்லிம் காங்கிரஸின் சிபாரிசின் பெயரிலேயே வழங்கப்பட்டுள்ளது, அவர் முதல்மைச்சராக் தெரிவு செய்யப்பட்டுள்ள விடயத்தை நான்தான் நஜீப் ஏ மஜீதுக்கு முதன் முதலாக தெரிவித்தேன்.

இரண்டாவது பகுதி பதவிக்காலத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினர் ஒருவரே முதலமைச்சராக இருப்பார், இதற்கான உடன்பாடு பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்டுள்ளது. அது மீறப்படுமானால் மிகவும் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹஸன் அலி எச்சரித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகவியலாளர் மாநாடு ஞாயிற்று கிழமை (23) கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற போது அதற்க்கு தலைமைதாங்கி, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் களான பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக், எம்.எஸ்.எம்.அஸ்லம், எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான ஹாபிஸ் நஸீர் அஹமட், ஹஸன் மௌலவி, எம்.ஐ.எம்.மன்சூர், ஆர்.எம்.அன்வர், ஏ.எல்.தவம்,ஏல்.எல்.எம்.நஸீர், கட்சி முக்கியஸ்தர்கள் தமிழ், ஆங்கில, சிங்கள், இலத்திரனியல்,அச்சு ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தோடும், தமிழ் தேசிய கூட்டமைப்போடும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட போதிலும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் அனைவருமாக மேற்கொண்ட முடிவின்படியே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததாகவும், அது சில ஊடகங்களும், தனியார்களும் தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றதாக தலைவர் அமைச்சர் ஹக்கீம் மட்டும் மேற்கொண்ட முடிவு என கூறுவது தவறானது என்று இம்மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.

உடன்படிக்கையின் உள்ளடக்கம்பற்றி அறிந்து கொள்ள ஊடகவியலாளர் சிலர் அதிக ஆர்வம் செலுத்திய போதிலும், சில தீய சக்திகளினதும், சந்தர்ப்ப வாதிகளினது தேவைக்கு தீனி போடுவதாக அது அமைந்து விடும் என்பதால் சமூக நலன் சார்ந்த உடன்பாடுகளை பகிரங்கபடுத்தவேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

கிழக்குமாகாணசபை அமைச்சர்களாக சிங்களவர் ஒருவரும், தமிழர் ஒருவரும், நிச்சயம் இடம்பெற வேண்டும் என்பதை முஸ்லிம் காங்கிரஸ், கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்க அமைச்சர்களிடன் மிகவும் திட்ட வட்டமாக கூறியிருக்கிறது. வலிந்துபோய் அரசாங்கத்தின் காலடியில் விழவில்லை என்றும், வேண்டுகோளின் நிமித்தம் சுயகௌரவத்தை இழக்காமல் மிகவும் முக்கியமான கோரிக்கைகளுடனேயே ஒத்துழைப்பு வழங்க முன்வந்ததாகவும் கூறப்பட்டது.

அமைச்சர் அதாவுல்லா பற்றி கேட்கப்பட்ட போது அவரை கணக்கில் எடுக்கவே இல்லை என்றும் அவரின் கோட்டை என்று தம்பட்டம் அடிக்கும் அக்கரைப்பற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள மாகாணசபை உறுப்பினர் தவம் மாகாணத்திலேயே முஸ்லிம் காங்கிரஸில் கூடுதலான வாக்குகளைப்பெற்று வெற்றியீட்டி இருப்பது அதாஉல்லாக்கு ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

 

 

 

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 23, 2012 இல் 4:44 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

7 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. முஸ்லிம் கொங்கிரஸ் … ஹசன் அலி சொல்… அதாஉல்லாஹ் பத்தி கனக்கில்லயம் தவம் ….. அக்கரபத்து மக்கள் வெல்ல வச்சதம் என்று.. அப்படி என்ற …… ஹசன் அலியும், …… பைசல் ஹாசிமும் , ..ஹாரிசும் இருக்கிற ஊர்லதான் ஆரிப் சம்சுதீன் என்கின்ற லோயர் அதாஉல்லாஹ் வின் தேசிய கொங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்று இருக்கறே …!! அதா என்னனு சொல்ற ?? …

  nisfi

  செப்ரெம்பர் 23, 2012 at 10:19 பிப

 2. எல்லா அமைசரும் அதாவுல்லாஹ்ட சம்மததோடதான் எதையும் செய்ய முடியும் அம்பாரையில் அபிவிருத்தி குழு தலைவரை தேர்தல் அல்லாத காலங்களிலாவது அனுசரித்துபோய் இனியாவது உருபடியா வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்யபாருங்க???

  PMAMF Mohammed H.I.R.A.Z

  செப்ரெம்பர் 23, 2012 at 11:04 பிப

 3. அபிவிருத்தி குழு தலைவரா அவ்வாறில்லை அம்பாரை மாவட்டத்துக்கு மாவட்ட இணைப்புக்குழு இணைத்தலைவா்கள் 3 போ் உள்ளனா். இத்தலைவா்களுக்கு ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கும் சிறப்பு தவிர எந்த அதிகாரமுமில்லை. கிழக்கு மகாணத்தில் யாரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைத்தான் அனுசரித்துபோயாகவேண்டும். SLMC is the King maker of the eastern province. நம்ம Hiras குழம்பியிருப்பது மட்டுமல்ல சும்மா நம்மளையும் குழப்புறாரில்ல.

  Jsu

  செப்ரெம்பர் 24, 2012 at 12:35 பிப

  • என்னது மூன்று அபிவிரித்திகுழு தலைவரா??? அந்த தலைவரால் ஒன்றும் செய்யமுடியாதா??? ஹ..ஹ..ஹ… அதுதான் அவற மீறி கிங்கேகர்கள் ஒரு செங்கல்லையும் இதுவரை வைக்கவில்லையாக்கும்???

   PMAMF Mohammed H.I.R.A.Z

   செப்ரெம்பர் 24, 2012 at 1:26 பிப

 4. ‘மடியில் கனமில்லையேல் வழியில் பயமெதற்கு?’
  ‘கிழக்குமாகாண சபை அமைப்பதில் முஸ்லிம்களின் நலன்சார்ந்த ஒப்பந்தங்களைச் செய்துள்ளோபம.; ஆனால் சொல்லமாட்டோம்.சொன்னால் அது தீய சக்திகளுக்கு தீனியாகிவிடும்’ என்று செயலாளர் நாயகம் சொல்கின்றார்.
  செ.நாயகம் அவர்களே!
  ஓட்டுப்போட்டு பா.உ என்றும் தே.பட்டியல் என்றும் வாழ்வு தந்த மக்களின் சர்பாக செய்து கொள்ளப்பட்டள்ளதா?!க சொல்லப்படுகின்ற ஓப்பந்தத்தை பார்க்க மக்களுக்கு உரிமை இல்லையா? அப்படியென்ன விளங்கமுடியாத பாஸையிலா எழதியுள்ளீர்கள்? அல்லது வாசித்து விளங்கும் அறிவு மட்டம் மக்களுக்கு இல்லை என்கிறீர்களா? அல்லதுமக்கள் நலன் சார்ந்து ஒப்பந்தம் செய்ததாக சொல்வது பொய்யா?
  ‘என்ன பொய்?’ என்று என்னோடு சண்டைக்கு வந்து விடாதீர்கள். நீங்கள் ஒப்பந்தம் செய்திருக்கலாம். கொஞ்சம் பொறுங்கள் நான் சொல்லவருவதைக் கேளுங்கள்.
  ‘அத்தனை முழுமினிஸ்ட்ரி,இத்தனை பாதிமினிஸ்ட்ரி,மச்சானுக்கு தாபனத்தலைவர்,(தலைவரது)மாமாவுக்கு மீண்டும் ஓமானில் தூதுவர்பதவி என்ற வகையறாக்களை ‘மக்கள் நலன் சார்ந்தது’? என நான் சொல்லவரவில்லை.
  மக்களது உரிமைகளை ஒப்பந்தமாக பேரம் பேசி வென்று வர ஆணைதாருங்கள். தாருங்கள் என தேர்தல் சீசனில் கேட்டீர்களல்லவா? அதனைக் குறிப்பிடுகின்றேன்.
  உண்மையில் மக்கள் நலன் சார்ந்த ஒப்பந்தங்கள் ஏதும் செய்திருந்தால், அதனை பகிரங்கமாக வெளியிடுவதில் என்ன தயக்கம்?
  துலைவர் கட்சியைப் பொறுப்பேற்று சீசனுக்கு சீசன் உரிமை வெல்ல ஆணைதாருங்கள் தாருங்கள்; எனக்கேட்க கேட்க மக்களும் தரத்தர இந்தப்பன்னிரென்டு வருடத்துக்கும் தலைவர் எங்கள் கிழக்குக்கு வென்றுதந்த உரிமைகளின் பட்டியலையும், இதோ இப்போது சுடச்சுட உரிமைகேட்டு செய்து கொண்டுள்ள உரிமைப்பட்டியலையும் பகிரங்கப்படுத்த முடியுமா?…….?அப்படியேதும் செய்யப்பட்டிருந்தால்.

  roshaen

  செப்ரெம்பர் 24, 2012 at 5:36 பிப

 5. Rosan தம்பி பள்ளியை உடைத்தது ஏன் எனக் கேட்டால் நம்மை அல் கைதா என்று சொல்கின்றனா். தனி மாவட்டம் கொடுக்கப்படப்போகின்றது என அறிந்தால் என்ன பண்ணுவார்கள்.
  இப்போது சுடச்சுட உரிமைகேட்டு செய்து கொண்டுள்ள உரிமைப்பட்டியலையும் பகிரங்கப்படுத்த முடியுமா?…….?அப்படியேதும் செய்யப்பட்டிருந்தால்

  Jsu

  செப்ரெம்பர் 25, 2012 at 1:11 பிப

 6. YANNA UTTARAVATAHAM YATHUN UTAN PATTIKKAI ULLATHA YAN YANRAL NAJEEP A MAJEET 2 ARAI VARUTHAM PIN SLMCUKKU C.M KOTHUPPATHU PATTI YANAKKU YATHUHUM TARIYATHU YANRU SOLLI IRUKKURAR 2 ARAI VARUTATIN PIN UNKALITAM MINCUM M, P 2 FAR SUMMA KATHAI SOLLA VANAM

  farsath

  செப்ரெம்பர் 25, 2012 at 3:15 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: