Lankamuslim.org

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்

leave a comment »

 இர்ஷாத் றஹ்மத்துல்லா: சிலர் பதவிகளுக்கு வருவது தங்களது வசதி வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கும்,சொகுசு வாழ்க்கைக்குமாக இருக்கலாம்,ஆனால் எமது கட்சி முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்திற்கும் விடிவுக்குமாகத்தான் இருக்கின்றது என்பதை தெளிவாக கூறுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளரும்.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,கிழக்கில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக இருக்க வேண்டும் அந்த பதவிக்கு சகல வழிகளிலும் தகுதியுடையவர் முன்னால் அமைச்சர் அமீர் அலி என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை வானொலியின் தென்றல் அலை வரிசையில் இடம் பெற்ற 7 வது நாள் நேரடி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டு பேசும் போது,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் மேலும் கருத்துரைக்கையில் கூறியதாவது –

இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் 7 மாகாணத்தில் சிங்களச் சகோதரர்களே முதலமைச்சராக வரமுடியும்,வடக்கில் ஒரு தமிழரே முதலமைச்சராக வரலாம் என்ற நிலையில் கிழக்கில் 42 சதவீதமாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.அப்படியெனில் இந்த மாகாணத்தில் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரே வர வேண்டும் என்பது யதார்த்தமாகும்.

தமிழ் அரசியல் வாதிகளை நம்பி இன்னும் மக்கள் இருப்பார்கள் என்றால் இன்னும் அந்த மக்கள் பாவம் என்று தான் சொல்ல வேண்டும்.தமிழ் கூட்டமைப்பின் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள்,உரிமைகளை பற்றி பத்திரிகையில் மற்றும் பேசுகின்றனர்.இன்று தமிழ் மக்களுக்கு அவர்கள்?பெற்றுக் கொடுத்த உரிமையென்ன? என்ன என்று கேட்க விரும்புகின்றறேன்.

மன்னார் மறிச்சுக்கட்டியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான குடியிறுப்புக்கள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து எடுக்க வேண்டிய அனைத்த நடவடிக்கைகளும்,எமது கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன். மற்றும் நான் அங்கு சென்று எடுத்துள்ளேன். அதே போன்று முல்லிக்குளம் தமிழ் மக்களின் தேவையான பாடசாலையினை ஆரம்பித்தும் வைத்துள்ளோம்.

இ்ன்று எமது மக்களுக்கு தேவையானது நிம்மதியான வாழ்வும்,அச்சமற்ற சூழலும், அதனை தற்போது இந்த ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். கடந்த 3 தசாப்த காலம் நாம் அனுபவித்த துன்பங்கள் பற்றி மீள பார்க்க வேண்டியுள்ளது. ஏன் தமிழ் கட்சிகள், ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக நின்று தான் உரிமையினை பேசிவருகின்றனர். அதற்கு மாறாக ஏன் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அந்த உரிமைகள் பற்றி பேசி அவற்றை பெற்றுக் கொள்ளும் ஒரு இனக்கப்பாட்டு அரசியலுக்கு வரமுடியாது? என கேட்கவிரும்புகின்றேன்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.முதலில் ஏமாறுபவர்களை மாற்ற வேண்டும்.அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வைத்து கொண்டு,தேர்தல் லாபங்களுக்காக அரசாங்கத்தை விமர்சிப்பதும்,பேசுவதும்,மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ளுவதுமான ஒரு அரசியல் கலாசாலரத்தை தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்துவருகின்றது.

இணைந்த வடகிழக்கை மீள ஏற்படுத்த துடிக்கும் சக்திகளின் எடுபிடிகளுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை வழங்கக் கூடாது என்பதை மக்கள் அரசாங்கத்திற்கு அமோக வெற்றியினை வழங்கி நிரூபித்துள்ளனர். எனவே இணைந்த வடகிழக்கு என்பது தோற்கடிக்கப்பட்ட ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கோறிக்கை வடக்கையும்,கிழக்கையும் இணைக்க வேண்டும் என்பது அதனோடு ஒரு போதும்,முஸ்லிம் சமூகம் இணைந்து செல்ல முடியாது என்பதை வலியுறுத்தி கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலத்தில யுத்தத்தை காட்டி தமது அரசியல் வாழ்வை முன்னெடுத்தார்கள்.இன்று தமிழ் மக்களுக்கு உரிமை தேவை என்று கூறி அரசியல் செய்கின்றார்கள்.பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தீர்வு காத்திருக்கின்றது.ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை புறந்தள்ளி,கால தாமதத்தை ஏற்படுத்தி வருகி்ன்றத.இங்கு ஒரு தீர்வு வரும் எனில் தமிழ் மக்கள் நன்மையடைந்து விடுவார்கள் என்தை தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகவே இந்த கூட்டமைப்பு இருக்கின்றது. இதற்கு தமிழ் மக்கள் முழுமையான தமது அளுத்தத்தை தமிழ் கூட்டமைப்புக்கு கொடுக்க வேண்டும்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் குறித்து தெளிவான பார்வையில் பார்க்கும் போது தான் அவரது பணிகளின் பெறுமதியினை அறிந்து கொள்ள முடியும்.ஆனால் அவருக்கு எதிரான பார்வையுடன் அவரது பணியினை நோக்கினால் அது எதிராகவே இருக்கும். இன்று வடக்கில் அதிமாக கிறிஸ்தவ மதத் தலைவர்கள், குருமார்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணியினை பாராட்டியுள்ளனர். முஸ்லிம்களின் மீள்குடிறே்றத்திற்க எதிராக செயற்படுபவர்கள் குறித்தும் எமக்கு தெரியப்படுத்திவருகின்றனர்.

இ்வ்வாறு பாதிக்கப்படு் எந்த ஒரு சமூகமாக இருந்தாலும் அந்த சமூகத்திற்காக குரல் ஒடுக்கும் ஒரு தலைவராக இன்று மக்கள் அவரை ஏற்றுக் கொண்டுள்ளதுடன்,ஆசிய கண்டத்தின் சிறந்த மக்கள் சேவகனாகவும் அவர் பாராட்டுப் பெற்றுள்ளார் என்பதையும் தெரிவிக்கவிரும்புகின்றேன்.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2012 இல் 5:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: