Lankamuslim.org

One World One Ummah

முஸ்லிம்களின் அதி கூடிய கவனத்தை பெற்றுள்ள கிழக்கு மாகாணத் தேர்தல்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
நாளை இலங்கையின் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது அதிலும் கிழக்கு மாகாண சபை தேர்தல் பெரிதும் உள்நாட்டினதும் வெளிநாட்டினதும் கவனத்தை பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் இலங்கை மாகாணங்களில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள மாகாணம் என்பதாலும் அது முஸ்லிம்களின் பெரும் கவனத்தை பெற்றுள்ளது இயல்பானது. இலங்கையின் 2011 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் இன்னும் முழுமையாக உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத போதும் கிழக்கில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 42 வீதத்தை விடவும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் பற்றியும் சுருக்கமாக விளங்குவோம்.

அம்பாறை மாவட்டம்

அம்பாறை மாவட்டம் 17, பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்ட நான்கு தேர்தல் தொகுதியை உள்ளடக்கிய 18, உள்ளூர் பிரதேச சபைகளை கொண்டுள்ளது . கல்முனை மாநகர சபையையும் அம்பாறை நகர சபையையும், அட்டாளைச்சேனை தொடக்கம், உகணவரை 16 பிரதேச சபைகளும் கொண்டது.

அம்பாறை மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடைய நிலையில் அம்மாவட்டத்தின் முஸ்லிம்கள் பெரும்பாலும் செறிந்து வாழ்கிறார்கள் இன விகிதாசாரம் அடிப்பையில் முஸ்லிம்: 44 வீதம், சிங்களவர்: 37.46 வீதம் தமிழர்: 18.33 வீதமும் என்ற எண்ணிகையை மாவட்டம் கொண்டுள்ளது .  தொகை அடிப்படையில் முஸ்லிம்கள் 268,630 ,சிங்களவர் 228,938, தமிழர் 111,948 என்ற எண்ணிகையை கொண்டுள்ளது.

1963 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளுக்கான மக்கள் தொகை பதிப்பீடுகள் அம்பாறையில் முஸ்லிம்கள் 46.35% என்ற எணிக்கையில் பெரும்பான்மயாக இருந்ததை காட்டுகிறது. தமிழ் மக்களின் தொகையும் பெரிதும் குறைவடைந்துள்ளது .ஆனால் புதிய மதிப்பீடு இன்னும் வெளிவரவில்லை. இந்த மாவட்டத்தில் வரலாற்று ரீதியாக முஸ்லிம்களே பெரும்பான்மை ,

திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை பதினொரு செயலாளர் பிரிவுகளைக் கொண்ட நான்கு தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய 13, உள்ளூராட்சி அமைப்புகளைக் கொண்ட மாவட்டம். இதில் முஸ்லிம்கள், செறிந்து வாழும் சபைகளாக கிண்ணியா நகர சபை, கிண்ணியா பட்டணமும் சூழலும் பிரதேச சபை, குச்சவெளி, தம்பலகாமம், மூதூர், சிங்கள, முஸ்லிம் ஓரளவு தமிழ் மக்கள் கலந்து வாழும் சபைகளாக, கோமரங்கடவல, கந்தளாய், மொறவெவ, பதவி ஸ்ரீபுர சேருவில ஆகிய பிரதேச சபைகள் காணப்படுகின்றது.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் சபைகள் கொண்டதாக இரண்டு நகர சபைகளும் ஏனைய 11, பிரதேச சபைகளும், திருமலை நகர சபை, வெருகல் பிரதேச சபை, திருமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைகள் உள்ளது . திருகோணமலை சனத்தொகைப் பரம்பல் (2007) முஸ்லிம் 152,019 ( 45.47%) ,தமிழர் 96,142  (28.75%) சிங்களவர் 84,766 (25.35%)  என்ற எண்ணிகையை கொண்டுள்ளது . இங்கும் முஸ்லிம்கள் மாவட்டத்தின்  பெரும்பான்மை என்றபோதும் குறைந்த நிலப்பரப்பில் வாழ்வதாகவும் சொல்லப் படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் 14, பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று (3) தேர்தல் தொகுதிகளில் (கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு) ஒரு மாநகர சபை, இரண்டு நகர சபை, (காத்தான்குடி ஏறாவூர் நகர்) ஒன்பது (9) பிரதேச சபைகள் உட்பட 12, உள்ளூராட்சி சபைகளை கொண்டுள்ளது.

இம் மாவட்டத்தில் 598265, சனத்தொகை பின்வரும் இன விகிதாசார அடிப்பையில் காணப்படுகிறது. தமிழர் 381,984 (74.05%) வீதம் முஸ்லிம் 129,045 (25.02%) வீதம் சிங்களவர் 2,397 (0.46%) வீதம்  தமிழர்கள் 74 வீதமாகவும் 25.00 வீதம் முஸ்லிம்களும் 0.46 வீதம் சிங்களவர்களும் காணப்படுகின்றனர்.

மட்டகளப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள 42.23% வீதமும் , தமிழர்கள் 50.33% வீதமும் , சிங்களவர்கள் 5.83% வீதமும் இருததாக 1921 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பீடு தெரிவிக்கிறது. இந்த மாவட்டத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை பெரியளவில் குறைவடைந்துள்ளது.

இந்த தேர்தல் முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியமான வரலாற்றுத் தேர்தலாக உள்ளது. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் புதிய பக்கங்கள் பல உருவாகப்பட இந்த தேர்தலை முறையாகப் பயன்படுத்தப்படமுடியும். அதற்கான சந்தர்பங்கள் இன்னும் தவறிப் போகவில்லை என்றே சமூக ,அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர் .

இது தொடர்பான முந்திய கட்டுரை:

கிழக்கு எதார்த்த அரசியல் சொல்லும் பாடம்

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 7, 2012 இல் 10:56 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: