Lankamuslim.org

One World One Ummah

வித்தியாசமான அரசியல் சூழ்நிலை: அது சர்வதேசத் தினுடைய அரசியல் அழுத்தங்களாகும்

leave a comment »

 எஸ்.அஷ்ரப்கான்: மாகாண சபைத் தேர்தல்களினுடாக இலங்கையில் இப்போது வித்தியாசமான அரசியல் சூழ்நிலையொன்று தோன்றியுள்ளது. அது சர்வதேசத்தினுடைய அரசியல் அழுத்தங்களாகும். அதனுடாக முஸ்லிம் சமூதாயம் இலங்கையிலே சிறுபாண்மையிலும் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படும் ஆபத்து இருக்கின்றது. என முன்னாள் பிரதி அமைச்சரும், வேட்பாருமான எஸ். நிஜாமுதீன் தெரிவித்தார்.

நேற்று (04) செவ்வாய் கிழமை சாய்ந்தமருது பிரதான வீதியில் எஸ். நிஜாமுதீனை ஆதரித்து இடம்பெற்ற மாபெரும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது, யுத்தத்தால் சீரழிந்த நாட்டை எமது ஜனாதிபதி அவர்கள்யுத்தத்தைமுடிவுக்குக்கொண்டுவந்ததன் மூலம் அபிவிருத்தி செய்து வருகிறார். இன்றுதமிழ் மக்கள் இழந்தவற்றை மீளப் பெற்றுக்கொடுப்பதற்கான வழிகளில் இன,மத பேதமின்றி அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதற்கு வலுச்சேர்க்கும் ஒரு கட்டமே இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் பெறப்போகும் வெற்றிலையின் வெற்றியாகும்.தமிழ் மக்கள் விடுதலை போராட்டத்தினால் பெற முடியாமல் போனதை நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபை தேர்தல் மூலம் பெற்றுக் கொள்ளப் போகின்றோம் என்று தமிழ் கூட்டமைப்பு கூறி வருகின்ற நிலைமையில், அதனை செய்து கொடுப்பதற்கு மரம் தனியாக நின்று இந்த தேர்தலில் போராடுகின்றது. இதனால்தான் சர்வதேச வலைப்பின்னலில் எமக்கு எழுந்துள்ள ஆபத்தை முறியடிப்பதற்காக நாம் ஒன்றிணைந்து அரசுக்கும், அரசு பங்காளிக்கட்சிகளுக்கும் தமது ஆரவை வழங்குவதன் மூலம் மட்டுமே எமகு முன் உள்ள ஆபத்தை தடுக்க முடியும். வன்முறை அரசியலிலே நாட்டமில்லாத நான் மிகவும் சாதுரியமாக முஸ்லிம்களின் எதிர்கால ஆபத்தை முன்வைக்கின்றேன்.

கிழக்கு மாகாண அரசியலிலே வடக்கு கிழக்கு இணைவு என்பது இன்று நடக்க முடியாத காரியமாகும். அந்த தெளிவான சிந்தனையை ஏற்படுத்துவதற்கு எவரும் எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் சாதாரண மக்கள் தேர்தல் வரும் போது மட்டும் எவரிடமிருந்து என்ன வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியுமோ அதற்காக வாக்குப் போடுகின்ற நிலமையொன்று காணப்படுகின்றது. இந்த விடயம் கிழக்கு மாகாணத்தின் தலைவிதியினை மாற்றப் போகின்றது என்பதை மக்கள் இன்னும் அறியாதவர்களாகவே இருக்கின்றனர்.

என்றும் கூறினார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அங்கு உரையாற்றும்போது தெரிவித்தவை வருமாறு, கிழக்கு மாகாணம் அரசோடு இல்லை என்பதை சர்வதேசத்துக்கு காட்டி, வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தந்திரோபாயத்துடன் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் களமிறங்கியுள்ளது. இதற்காக முஸ்லிம் முதலமைச்சரைத்தானும் கொடுத்தாலும் பரவாயில்லை என்ற தனது நிலைப்பாட்டை உறுபதிப்படுத்தி, தமிழரை விட முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரின் மூலமாக வடக்கு கிழக்கு இணைப்பைஏற்படுத்துவதென்பது இலகுவாகும் என்பதை புரிந்து கொண்டு தமிழ் தேசியகூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது. இதற்காக பகடைக்காயாக மு. கா. வை அது பயன்படுத்த முனைகிறது.

வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கின்ற இந்த காலகட்டத்தில் அது நிரந்தரமானபிரிவாக இருக்கின்றபோது மட்டுமே முஸ்லிம்களுடைய அரசியல் இருப்பு 42 வீதமாக அமையும். வட கிழக்கு இணைகின்றபோது 17வீதமாக குறைவடையலாம். இந்த நிலை ஏற்பட்டால் முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கிழக்கு தேர்தல் முடிவுகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு சாதகமாக அமைந்தால் மீதியை சர்வதேச சமூகம் பார்த்துக் கொள்ளும். என்பதன் உள்நோக்கத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். கிழக்கு மாகாணம் அரசுடன் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, கிழக்கானது வடக்குடன் இணைவதற்கு தயாராக உள்ளது. என்பதை சொல்வதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நோக்கமாகும். இந்தத் தொடரில்தான் இன்றும் ருத்ரகுமாரன் என்பவரை தலைவராகக் கொண்ட கடல் கடந்த சக்தியொன்று தமிழர்களுக்காக போராடி வருகிறது. 30 வருடகால யுத்தத்தால் பெறமுடியாததை சர்வதேசத்தின் ஆதரவுடன் அமைக்க முடியும் என இவர்கள் அணைவரும் நம்பியிருக்கிறார்கள்.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் காலத்தில் இணைந்த வடகிழக்கில் தென்கிழக்கு அலகைக் கோரியதை பலர் தெளிவாக விளங்கிக் கொள்ளவில்லை. எமது மறைந்த தலைவருடைய காலத்தில் இணைந்திருந்த வட கிழக்கில் குறைந்தது தென்கிழக்கு அலகையாவது பெற்றுக் கொள்வோம். பின்னர் மற்றயதை பார்த்துக்கொள்ள முடியும் என்றுதான் யோசித்தார்.

ஆனால், தற்போதைய நிலையில், தனித்திருக்கும் வடக்கு கிழக்கில் தலைநிமிர்ந்து இருக்கின்ற முஸ்லிம்களின் பெரும்பாண்மைப்பலத்தை இழக்கச்செய்யும் வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இதற்காகவே நாம் இன்று வெற்றிலைக்கு வாக்களிக்கக்கோருகின்றோம். அத்துடன் எமது சமூகத்திற்காக்க் குரல் கொடுத்து பல்வேறு பிரச்சினைகளில் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கின்ற எமது கட்சியின் தலைவர் றிஸாட் பதியுதீனுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் நாம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Advertisements

Written by lankamuslim

செப்ரெம்பர் 5, 2012 இல் 3:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: