Lankamuslim.org

One World One Ummah

கனிசமான ஆசனங்களை வென்றால் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி :TNA

with 3 comments

கிழக்கு செய்தியாளர் : கனிசமான ஆசனங்களை பெறும் பட்சத்தில் கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நேற்று (14.8.2012)மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடாந்து உரையாற்றிய இரா.சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கனிசமான ஆசனங்களை பெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்போம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நாங்கள் ஏற்னவே பேசினோம். ஏங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது. அந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் கனிசமான ஆசனங்களை பெற்று ஆட்சியமைப்போம்.

தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்துடன் பல சுற்றுப்பேச்சுவார்த்ததைகளில் ஈடுபட்டிருந்தோம்.

இந்த பேச்சு வார்த்தைகளில் இருந்து அரசாங்கம் நழுவிச்சேன்றதே தவிர நாங்கள் இதிருந்து நழுவிச் செல்லவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினை சர்வேதசத்திற்கு சென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கும், ஜெனிவாவுக்குமாக தமிழ் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந் நிலையில் அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரவணைக்க வேண்டிய நிலையிலுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் அதற்கு முழுக் காரணமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பது அனைவருக்கும் தெரியும் .

கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் 85 வீதம் வாக்களிக்க வேண்டும் அவ்வாறு வாக்களிக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 உறுப்பினர்களையும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களையும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

கிழக்கு மாகாண சபை தேர்தலி ஏன் நடாத்தப்படுகின்றது எதற்காக நடாத்தப்படுகின்றது என்பது மக்களுக்கு நன்கு தெரி யும் ஆகவே தான் இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார் .

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 15, 2012 இல் 1:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. yes we will rule the east

  Pasha

  ஓகஸ்ட் 15, 2012 at 2:38 பிப

 2. எதட்கு மன்னார் உப்புகுளத்தை போல் முஸ்லிம்களிடம் இருந்து சட்டபடியே வளங்களையும் காணிகளையும் பறித்து அபகறித்து உங்களின் நிறந்தர அடிமைகளாகவே மாற்றுவதட்கா??? நீங்கள்தான் இப்படி சொல்கிறீர்கள் உங்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கபடும் என்று மரகட்சிகாரர் முழங்கி அறிக்கைவிட்டால் போதும் அப்புரம் மரதிட்கு ஆயிரம் வாக்கு கூட கிடைக்காது கிழக்கு மாகாணசபை தேர்தலில்???

  PMAMF Mohammed H.I.R.A.Z

  ஓகஸ்ட் 15, 2012 at 8:59 பிப

 3. சம்பந்தனையா! தலைவர் ஏற்கனவே வெத்திலைபோட்டுக் கொண்டு போராளிகளை மரத்துக்கு போடச் சொல்லிக் கொண்டிருக்கின்றார். நீங்களோ தலைவரிடம் அடித்து சத்தியம் வாங்கியவர் போல கக்கீம் வருவார் எம்மோடு இணைவார் ஆட்சியமைப்போம் என்கிறீர்கள். ஒரவருக்கொருவர் என்ன சிக்னலைக் காட்டிக் கொண்டீர்கள்?
  அல்லது உங்கள் இருவருக்கும் என்ன சிக்னல் எங்கிருந்து காட்டப்பட்டது. ஏன் கேட்கிறேனென்றால், எல்லாம் கடந்த கால அனுபவம் கலந்த அனுமானம் தான். அதாவது,
  பொன்சேக்கா ‘சிறுபான்மை மக்களை சவுதிக்கும், இந்தியாவுக்கும் அள்ளி அனுப்புவேன்’ என்று கூறியபோது நீங்கள் இருவரும் போட்டிபோட்டுக் கொண்டு பொன்சேக்காவை ஒரு கை பார்த்தீர்கள். ‘ஆகா…தலைவர் உரிமையை கட்டிக் காக்கும் அழகு பாரீர்’ என போராளிகள் புல்லரித்துப் போனார்கள்.ஆனால் அப்புல்லரிப்பு மாறுவதற்கிடையில்,
  பொன்சேக்கா அNNNமேரிக்கா போய்வந்ததும் தலைவர்த hன் ஓடிப்பொய் கட்டுநாயக்காவில் மாலைமரியாதையோடு வரவேற்றார். ;தலைவரின் இந்த திடீர் திருப்பத்தின் பின்னணியாது,? யார் என்ன சிக்னலைக் காட்டினார்கள்’ என சர்வம் தலைவர்மயம் என வழிபடும் போராளிகளைத்தவிர சமூக உணர்வு கொண்ட சில போராளிகள் கேள்வி கேட்கத் துணிந்தனர்? இருப்பினும் தொண்டைவரை வந்த கேள்வியை (அவர்கள் துரோகிப்பட்டம் கிடைத்தவிடுமோ என அஞ்சி ) விழுங்கி சிறந்த போராளியாக ஒத்தாதிக் கொண்டிருக்கின்றனர்.
  பொன்சேக்காவைப் பார்த்து ‘காக்கி உடைக்குள் ஒரு இனவாதி’ என உரிமைக் குரல் விட்ட தலைவரின் தொண்டை திடீரெனக் கம்மி சுருதி விலகி ஒலித்தது. மட்டுமல்லாமல் காட்டப்பட்ட சிக்னலின் வலிமை யாதெனில், தலைவரே ஒருங்கை ஒழுங்கையாக வந்து அன்னத்துக்கு கென்வசிங் செய்தார்.
  ஆனால் இந்த திடீர் திருப்பம் பற்றி எந்தப்போராளியும் கேள்வி கேட்கவோ. எதிர்க்கவோஇல்லை. ‘தலைவர் எதைக்காட்டி ஓட்டுப்போடச் சொல்கிறாரோ அதற்கு பொது மக்களை ஓட்டுப் போட வைப்பதே பிறவிப்பயன்’ என போராளிகள் துடிப்போடு இருக்கும் வரை தலைவர் எத்தகைய சிக்னலுக்கும் திடீர் திருப்பங்களை மேற் கொள்ளத்தயங்கார்!!!இது தான் தலைவரின் பலமும், தைரியமும்.
  இந்தப்பலத்தை எந்தச்சிக்னல் வலுப்படுத்தியதையறிந்து சம்பந்தன் இவ்வளவு தைரியாகக் கதைக்கின்றார்?!

  roshaen

  ஓகஸ்ட் 16, 2012 at 1:48 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: