Lankamuslim.org

One World One Ummah

ஹக்கீமின் வழியில் ஹிஸ்புல்லாவும்: முஸ்லிம் முதலமைச்சர் சி சீ இந்த பலம் புளிக்கும் !

with 7 comments

 ஏ.அப்துல்லாஹ் : கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் மாகாண சபை வேட்பாளர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் வெற்றிக்காக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமை தாங்கி கிராம் கிராமமாக சிறிய சிறிய குழுக்களை அமைத்து அதனை பரவலாக்கி தீவிர பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். அதேவேளை அப்படி ஈடுபட்டு வரும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் முதலமைச்சர் என்ற விடயத்தை தற்போது பேச வேண்டியதில்லை என்று கூறி கடந்த மாகாண சபை தேர்தலில் தான் போட்டியிட்ட போது கூறியவற்றுக்கு எதிர்மாற்றமாக கூறியுள்ளார். இந்த கூற்று விமர்சங்களை பெற்றுள்ளது.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தற்போது மேற்கொண்டு வரும் பிரசாரத்தில் முஸ்லிம் முதலமைச்சர் என்ற விடயத்தை தற்போது பேச வேண்டியதில்லை ஏனெனில் அங்கு மூவின மக்களும் வாழ்கின்றனர். இந்தக் கோஷத்தின் மூலம் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் மனக்கசப்புக்களும், பிளவுகளும் ஏற்படக்கூடாது’ என்று தெரிவிக்கிறார் . இவரின் தற்போதைய இந்த கூற்று கடந்த 2008 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் பிரசார கூற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ‘முஸ்லிம் முதலமைச்சரைப் பெறுவது கிழக்கு முஸ்லிம்களின் உரிமையாகும்’ என்றும் ‘இந்தக் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்பது ஒரு சாதாரணமான தேர்தல் அல்ல. என்றும் கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் பூர்வீகத் தாயகம். இம்மாகாணத்தில் முஸ்லீம்கள் 40.1 வீதமாகப் பெரும்பான்மையாக வாழுகிறார்கள் என்றும் இம்மாகாணத்தில் முஸ்லிம்களே முதலமைச்சர் ஒருவரைத் தெரிவு செய்யக்கூடிய வகையில் பெரும்பான்மையாக வாழுகின்றனர் என்பதை அனைத்துத் தரப்பினரும் உறுதிப்படுத்திக் கூறவும், முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்பினை உத்தரவாதப்படுத்திக் கொள்ளவும் வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளன் மீதுமுள்ள தலையாய கடமையாகும். என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் ‘அதையே நான் செய்யத் துணிந்து இன்று எத்தனையோ எதிர்ப்பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் இந்த சமூக உரிமைக்கான களத்தில் இறங்கி இருக்கின்றேன்.’என்றும் தெரிவித்திருந்தார் .

ஆனால் தற்போது இந்த மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ‘முஸ்லிம் முதலமைச்சர் எனும் விடயம் ஒரு பாரிய பிரச்சினையில்லை. இதனை பூதாகரமாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். இதனை பெரிதாக தூக்கி பிடித்து அரசியல் பிரச்சினையாக்க நான் விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.  ஹக்கீமின் வழியில் தற்போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான எமது முந்திய கட்டுரை:

அமைச்சர் ஹக்கீமும் முஸ்லிம் முதலமைச்சர் தெரிவுக்கு பின்னால் உள்ள அரசியலும்

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 10, 2012 இல் 1:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

7 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. அன்று என்ன நடந்தது ஏன் ஹிஸ்புல்லாஹ் முதல் அமைசர் பதவியை பிச்சை வேண்டாம் நாயைபிடி என்ற கதையாக துக்கி எரிந்துவிட்டு மாகாண அமைசராக பொறுபேற்றுகொண்டார்???

  மக்கள் வாக்களித்து சொன்னபடி தேர்தலில் வெற்றியையும் ஆளும் கட்சிக்கி வழங்கியிருந்தார்கள் அதில் முஸ்லிம்களே அதிகம் தெறிவாகி முதல் அமைசராக முஸ்லிமே நியமிக்கபடும் அரசியல் நிலமை ஆனால் அந்த அரசியல் நிலமை புலிகளாலும் தமிழ் தேசிய கூட்டமைபாளும் தமிழ் மக்கள் விடுதலைபுலிகளான பிள்ளையன் அணியினாலும் எவ்வளவு வேகமாக மாற்றபட்டன??? கிழக்கில் தமிழரே பெரும்பான்மை தமிழரே முதல் அமைசராக நியமிக்க படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் அறிக்கைகளாலும் தமிழ் ஓசை தொட்டு ஊடக பேட்டிகளாலும் தமிழ் இளைஞர்களை ஆவேசபடுத்த அங்காள புலிகள் முஸ்லிம் முதல் அமைசரை தடுக்க சாந்தனை காதான்குடி மண்னில் வைத்து சுட்டு கொலை செய்து மிக திட்டமிட்டும் கச்சிதமாகவும் பழி ஒருவாரமுதலே சாந்தனோடு கொடுக்கள் வாங்கள் விடயத்தில் சண்டைசெய்த ஊர் இளைஞர்கள் மேல் விளவைத்து இரண்டு முஸ்லிம்களையும் அநியாயமாக சுட்டு கொலை செய்துவிட்டு சென்றுவிட

  அங்காள பிள்ளையன் அணி இதுதான் சாடென புலிகுடும்பதை சேர்ந்த தமிழ் இளைஞர்களை காதான்குடி மண்ணில் வைத்து கடத்திவிட ஆரயம்பதி தமிழர்களோ தங்கள் இளைஞர்களை கடத்தியது காதான்குடி ஆயுத குழுவே என ஒட்டு மொத்த ஊருமாக சேர்து ஆவேசத்துடன் ஆர்பரிக்க அதட்கு அந்த ஊர் கோயில் தர்ம கர்தாகளே தமிழ் ஓசைமுதல் ஊடகங்களுக்கு உதியோக பூர்வமாக காதான்குடி மக்கள் மேல் குற்றம் சாட்டி பேட்டிகள் கொடுத்து இன மோதலுக்கும் இனகுரோததிட்கும் வழி சமைக்க

  சுட்டதட்கு பழிவாங்க நூற்றுகணக்கான முஸ்லிம்களின் கடைகள் பிள்ளையன் தரப்பால் மட்டு நகரில் உடைத்து நாசமாக்கபடு காத்தான்குடி சகோதரகள் நூற்றுகணக்கில் பிள்ளையனின் ஆயுதபடையால் பொல்லடியும் வால் வெடுக்கும் இலக்காக அங்கால கண்ட இடங்களில் எல்லாம் தமிழ் இளைஞர்களால் காதான்குடிமக்கள் ஊருக்கு வெளியில் பயணத்திலும் வியாபர இடங்களிலும் தாக்கு படவும் வால் வெட்டுக்கு இழக்காகவும் நேர காத்தான்குடி மக்களின் நிலை மிக நிர்கதியாகி விட்டது உதவ எந்த அரசியல் வாதியும் தயார் இல்லாத நில்லை ஆயிரகணக்கான வீடுகளில் வாரமாக அடுபெரியவில்லை ஏனெனில் தொழிலுக்கு வியாபாரதிட்கு தமிழ் பிரதேசங்களுக்கு செல்ல முடியாத நிலை!!! வாகனங்களில் பயனிக்க முடியாத நிலை அப்படி பயணித்தால் தமிழ் பிரதேசங்களில் ஆயுத தாரிகளால் அடையாள அட்டை பரிசோதிக்க பட்டு காதான்குடி வாசிகள் மட்டும் பேரோந்தில் இருந்து இரக்கபட்டு தாக்கி கைகால்கள் உடைக்கபடும் நிலை

  புலிகளை அழிக்க இந்த ஆயுத குழுக்களின் அட்டகாசங்களை அரசபடைகள் கண்டும் கானாத நிலை கருனா இலன்டன் சிறையில் இருந்ததாலும் பிள்ளையன் கட்சியிலேயே அப்போது இருந்ததாலும் அவர் ஆதரவாளர்களும் சேர்து பிள்ளையனோடு இருந்ததால் அட்டகாசம் மிக பயங்கரமாக இருந்தது மக்களுக்கு மீண்டும் அந்த கருப்பு ஓகஸ்ட் ஐ நாபகபடுத்தும் நிலமை ஒரு வாரமாக இருக்கையில் எந்த அரசியல் ஆதரவும் அற்றவர்களாக 2002 முதல் இருக்கும் இந்த மக்கள் தனக்கு வாக்களித்த ஒரே காரணதிட்காக இவ்வளவு நெருக்குவாரங்களை சந்திக்கும் நிலையை எப்படி தகர்பது மீண்டும் எப்படி சுமுக நிலையை உருவாக்குவது என்பதே ஹிஸ்புல்லாஹ் முன் இருந்த முதல் சவால் !!!

  அவர் அரசியலில் இருந்து எல்லாவற்றையும் உதரி தள்ளி விட்டு ஒதுங்கி இருந்தால் நிலமை அந்நேரம் தணிந்திருக்கும் ஆனால் சுனாமியால் மிகவும் பாதிக்கபட்ட காத்தான்குடி பிரதேசம் எந்த மீள் கட்டுமானமும் இல்லாமல் அரசியல் பிரதி நிதித்துவம் இல்லா நிலமையில் 2002 முதல் இருந்து வருவதால் பல்வேறு புறகனிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலமையும் அவர் முன்னே ஒரு சவாள்

  ஆக அவர் அவருக்கு வாக்களித்த மக்களின் ஆலோசனைகமைய எடுத்த முடிவால் மக்களின் இயல்பு வாழ்வும் திரும்பியது எதிரிகள் நிரந்தர நண்பர்களாகியும் போனார்கள் சுனாமிக்கு பின்னரான மீள் கட்டுமான வேலைகளையும் மிக திறமையாக பூர்தி செய்ய காரணமாக இருந்தது தனக்கு வாக்களித்த மக்களின் நிம்மதிக்கும் சந்தோசமான வாழ்வுக்கும் இருப்புக்கும் அச்ச மற்ற சூழலுக்கும் வழிகோலிய அவரது அந்த நேர அரசியல் நிலைபாடு ஏனையோருக்கு பிழையாக படுவதால் எந்த நஷ்டமும் அவருக்கோ அவருக்கு வாக்களித்த மக்களுக்கோ வந்து விடாது ஒரு அரசியல் வாதி எப்போதும் தனக்கு வாக்களித்த மக்களின் நிம்மதியையும் சந்தோசதையும் இயல்பு வாழ்வையும் உறுதி செய்யவே முதலிடம் கொடுக்க வேண்டுமே ஒழிய தனக்கு அவமானமே தன் இப்படி பேசி விட்டு இப்படி நிலைபாடு எடுப்பதா என்று தன் சுய நலதிட்கும் தன் கவுரவதிட்கும் முதலிடம் கொடுத்து தீர்மானம் நிலைபாடு எடுபவனாக இருக்க கூடாது ஆக நன்றாக துன்பம் அனுபவித்த மக்களுக்கு சீ..சீ.. இந்த பழம் புளிக்கும் என இனி எபோதும் புளிப்பது நியாயமான உணர்வே

  Mohammed Hiraz

  ஓகஸ்ட் 10, 2012 at 8:09 முப

  • ஹிராஸ் உங்களின் commnet தெளிவான தலைவர் வக்காலத்து -சற்றாவது நடுநிலையாக யோசிக்க பழகுங்கள்

   KKboy

   ஓகஸ்ட் 10, 2012 at 10:18 முப

   • நான் எழுதியது அத்தனையும் நடக்கவில்லை வெறும் இட்டுகட்டிய பச்சை பொய் என அல்லாஹ்வின் ஆணை இட்டு கூற முடியுமா உங்களால்??? உண்மையை சொன்னால் அதட்கு பேர் உங்க அகராதியில் வக்காளத்தா???

    Mohammed Hiraz

    ஓகஸ்ட் 10, 2012 at 1:57 பிப

    • சம்பவங்கள் நிகழ்ந்ததை யாரும் மறுக்கவில்லை. அதை கண்டு நேரில் அனுபவித்தவர்கள் நாங்கள் ஆனால் அதை ஹிஸ்புல்லாவின் அரசியல் பல்டிக்கு சாதகமாக திரித்து வக்காலத்து வாங்குவதைத்தான் நிராகரிக்கிறேன் .
     இன்று ஹிஸ்புல்லாஹ் மட்டகளப்பு மாவட்டத்தின் பிரதான வேட்பாளராக களம் இரங்கி இருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பது எங்களுக்கு தெரியும் அதை எவரும் எமக்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை . ஹகீமை போன்று , தனது இருப்பை பாதுகாக்க சமூகத்தின் விருப்பத்தை புறம்தள்ளும் மாமனிதர்தான் இவரும்

     KKboy

     ஓகஸ்ட் 10, 2012 at 3:16 பிப

     • அத்தனை துன்பங்களுக்கும் காரணம் முஸ்லிம் முதல் அமைசர் கோஷ்ம் என்பதும் ஹிஸ்புல்லாஹ் முதல் அமைசர் போட்டியில் இருந்து விலகியதும் அத்த்னை துண்பங்களும் பணிபோல் உருகி காணாமல் போனதையும் ஏன் மறந்தோம் தான் அவமானபட்டாவது தம் சமூகத்தை காத்த சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வின் தியாகம் பச்சை கண்ணாடி அணிந்தல் விகாரமாக உங்களுக்கு தெறிவதில் தப்பில்லை ஆனால் உண்மை உங்கள் பார்வை அல்ல

      Mohammed Hiraz

      ஓகஸ்ட் 10, 2012 at 3:44 பிப

 2. வேறு ஒன்றுமில்லை பொறியலாளர் சிபிலி முதல்வராக உருவானால் தனது கட்டுபாட்டில் இருக்கமாட்டார் என்பது அவரின் கணக்கு

  KKboy

  ஓகஸ்ட் 10, 2012 at 10:33 முப

 3. அந்தர் பல்டி என்பது இதுதானோ !!!???????? சபாஸ் ஹிஸ்புல்லா முன்னாள் தலைவரின் வழியில் பயணமா??? வேற்றுமையில் ஒன்றுமை என்பதும் இதுதானோ !!!???. தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் காவிய நாயகன் அதாவுல்லா பரவாஇல்லை போலும் !!! அன்றும் வேண்டாம் என்றார் !!! இன்றும் வேண்டாம் என்கிறார்!!! .

  khan -kalmunai

  ஓகஸ்ட் 10, 2012 at 3:22 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: