Lankamuslim.org

இணைந்த வடக்கு கிழக்கில் தங்களைத் தாங்களே ஆளும் தீர்வே தமிழருக்குத் தேவை: இரா.சம்பந்தன்

with 4 comments

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு நடத்தும் பேச்சு நேர்மையானதாக இருக்க வேண்டும் எனவும் அது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நேற்றுமுன்தினம் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. திரியாயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவிததார்.

அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு
அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பேச்சை அரசுடன் மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால், பேச்சு நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதான பேச்சாக இருக்கக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விழிப்புடன் இருக்கின்றது.

அண்மையில் கொழும்பில் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து நடத்திய கலந்துரையாடல்களின் போதும் இது பற்றி நாம் தெளிவாகக் கூறியிருந்தோம்.

அரசுடன் இதுவரை நடத்திய பேச்சுகளின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான தனது அடிப்படை நிலைப்பாட்டைத் தெளிவாக எழுத்து மூலம் முன்வைத்தது. அரசு தனது பதிலைத் தருவதாகத் தெரிவித்தது. இன்னும் அதற்கான பதிலைத் தரவில்லை. அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கமுடியாத நிலையில் உள்ளது.

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக்கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்ககூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை இன்று நாட்டின் எல்லைகளை தாண்டி சர்வதேசத்தின் கூர்மையான பார்வைக்கு சென்றுள்ளது என்றார்.

திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நடைபெற்ற இக்கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தகவல் உதயன்

 

 

 

Advertisements

Written by lankamuslim

ஜூலை 31, 2012 இல் 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மரணத்தில்தான் இனி இணைந்த வடகிழக்கு சாத்தியம் முஸ்லிம்கள் என்ன ஏமாந்த சோனகிரியா இனிமேலும் உங்க பசப்பு வார்தைகளை நம்பி ஏமாற இப்படியே பேசிக்கிட்டு இருந்தால் கிழக்கில் போல வடக்கிலும் மூன்றாம் இனமாக நீங்கள் மாற வெகுகாலம் எடுக்காது

  Mohammed Hiraz

  ஜூலை 31, 2012 at 6:02 பிப

 2. அய்யா ஏன் அநியாயம்செய்கின்றீர்கள்,யாழில் நடந்த சம்பவம் ஒ்ன்றின் போது,நிதிமன்றத் தீர்ப்பை மீறி இனி செயற்படப் போவதாக சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கூறிய போது,தமிழ் சட்டத்தரணிகள்,மன்னார் சம்பவத்துடன் முஸ்லிம்கள் தொடர்புபட்டு்ளதால்,அவர்களை அநியாயமாக பலிவாங்கும் நிலை நடக்கின்றது.நீங்களும் தமிழ் பேசும் ஒருவர் தானே,தமிழன் தமிழன் என்று பேசும் நீங்கள்,இந்த விடயத்தில் என்ன செய்ய உத்தேசம்,,இப்பவே வெல்வம் அடைக்கலநாதன் அறிக்கை விட்டுப் போட்டாறே ,காட்டிக் கொடுப்பது அவரது தொழிலி்ல் தானே…….வடக்ககை- கிழக்குடன் இணைத்து தீர்வை தந்தால் போதும்,இப்பவே புலி ஆட்சிகள் நடக்கின்றது……..இறைவன் தான் எல்லோரையும் காப்பத்த வேண்டும்….

  முஸ்லிம்களுக்கு தொடராக செய்யும் அநியாயத்துக்கு இறை தண்டனையுண்டு என்பதை மறந்தவிட வேண்டாம்,உங்களுக்கு தீர்வு வேண்டும் என்றால்,போராடுங்கள்,இனி மெல் முஸ்லிம்களை பற்றி பேச உங்களுக்கு அருகதையில்லை,,ஏனெனெில் நீங்கள் எமது முஸ்லிம் சகோதரர் அல்லவோ…உங்களுக்கு உங்களது மாரக்கம்,எங்களுக்கு எங்களது இஸ்லாம் மார்க்கம்,எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டுக்கு நாங்கள் வரமுடியாது..ஏனெனில் இறை நிராகரிப்பாளர்கள் என்றும் எங்களுக்கு எதிரகள் தான்…..

  zeenath

  ஓகஸ்ட் 1, 2012 at 12:27 முப

 3. நல்ல கருத்து முஸ்லிம் சமூகம் ஒன்றுபட வேண்டும்,இலங்கையில் 22 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்வதாக தகவல் வந்துள்ளது.அப்படியெனில் முஸ்லிம் விரோத போக்குக்கு எதிராக எமது கண்டனங்களை வெளியிடுவோம்….

  kinniya

  ஓகஸ்ட் 1, 2012 at 12:41 முப

 4. அய்யா சம்பந்தன் அவர்களே குட்ட குட்ட குணிந்ததால் தான் நீங்கள் முஸ்லிம்கள் மீது ஏறி சவாரி செய்ய பாரக்கின்றீர்கள்,கிழக்கை நீங்கள் இணையுங்கள்,முஸ்லிம்கள் ஒரு போதும்,வடக்குடன் இணைக்க விடமாட்டார்கள்.அன்று கிழக்கை வேறாக பிரிக்க வேண்டும் என்று பாராளுமன்ற்த்தில் கூறிய அதனை செய்ய உதவிய ஜே.வி.பி
  .சோமவன்ச போன்றவர்கள்.உங்களுக்கு இன்று சிம்ம சொற்பணம மனதர் என்றால்
  கொஞ்சமாவது இருக்க வேண்டும்….அது தேசியத்துக்கு இல்லையென்பதை பரிய வைத்துவிட்டீர்கள்,இனியும் பிரி..பிரி…என்று கூறி வயதை போக்கி கொள்ள வேண்டாம் சம்பந்தன் அய்யா அவர்களே….

  sabee

  ஓகஸ்ட் 1, 2012 at 12:47 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: