Lankamuslim.org

One World One Ummah

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் ஒன்றியத்துக்கு ஜனாதிபதி அங்கீகாரம்

with one comment

கொழும்பு செய்தியாளர்: பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் சந்திப்புஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் ஒன்றியக் குழு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்தது.

மாகாண சபை, உள்ளூராட்சி சபை முஸ்லிம் உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

சு. கட்சி செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஏறத்தாழ 105 உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன. விஷேடமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும், கட்சியினரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள், முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு சூழ்ச்சிகள், கல்வி மற்றும் அபிவிருத்தி விடயங்கள் ஹஜ் விடயம் ஆகியன இங்கு கலந்துரையாடப்பட்டன. இவற்றை கவனமாக செவிமடுத்த ஜனாதிபதி அவர்கள்,

இவ்வாறான ஒரு அமைப்பு முஸ்லிம் களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்க விடயம் எனவும் இவ்வமைப்பு மூலம் ஸ்ரீ. ல. சு. கட்சியின் வளர்ச்சியும் முஸ் லிம்களினதும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் உறுதுணையாக அமையுமெனவும் கூறினார். இன்று முஸ்லிம்களையும் அரசாங்கத் தினையும் வேறுபடுத்த பல்வேறு சதி முயற்சிகள் இருந்தாலும் அவை எமது பொறுமையான செயற்திட்டங்களினால் முறியடிக்கப்பட்டு வருவது தற்போது முஸ்லிம்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பதே, இந்தளவு சரித்திரம் காணாத அளவு முஸ்லிம் பிரதி நிதித்துவம் ஏற்படக் காரணமாக உள்ளது.

எனவே முஸ்லிம்கள் பொறுமையாக ஏனைய இனத்தவருடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எனது ஆவலாக உள்ளது எனவும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 28, 2012 இல் 11:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. iiya kanavaankale neengal pesikkondirukkum pothe kinniyavil varavetpu valaivu amaippathai seenakkuda pouththa theevuravathi oruvan athiharihalai payanpaduththi thaduththuvittan. neengal aaruthala pala suttru pechchuwarthai nadaththi ifftharum kondaadivittu vaarungal.

    roshaen

    ஜூலை 30, 2012 at 9:53 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: