Lankamuslim.org

One World One Ummah

முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்படுத்துவதுதான் அரசியல் சமநிலையை ஏற்படுத்தும்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ் : கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் என்பது மிகவும் அவசியமானது. தமிழர்ளை பெரும்பான்மையாக கொண்ட வடக்கில் தமிழ் முதலமைச்சர் என்று வரும் போது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்படுத்துவதுதான் அரசியல் சமநிலை பேணுவதாக அமையும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவித்த தகவலில் . வடக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது அங்கு முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர் , அதேவேளை கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் அங்கு தமிழ் மக்கள் சிறுபான்மையாக வாழ்கிறார்கள் கிழக்கில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை ஏற்படுத்துவதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மத்தியில் ஒரு அரசியல் சமநிலையை ஏற்படுத்தலாம் அது அவசியமானது. அதனால் நாம் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை வேண்டுகிறோம் .

தெரிவு செய்யப்படும் மாகாண சபை உறுப்பினர்கள் , முதலமைச்சர் என்பவர்கள் மக்களுக்கு உரிமைகளை வென்று கொடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் . கிழக்கில் வரும் முதலமைச்சர் ஆளுநருக்கு அவரின் அதிகார வரம்பு பற்றி கூறுபவராகவும் தனது அதிகாரத்தை சரியாக விளங்கி செயல்படுபவராகவும் இருக்கவேண்டும் .

கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் வருவது முஸ்லிம்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பட்டியலிட்டு தீர்வுக்கான உதவும் . இன்று திருகோணமலை மாவட்டத்தின் கருமலையூற்று பள்ளிவாயலுக்குள் இராணுவத்தினர் முகாமிட்டு இருக்கிறார்கள், அதேபோன்று புல்மோட்டையில் முஸ்லிம் கிராமம் ஒன்று புராதன பிரதேசமாக எல்லையிடப்பட்டு அங்கு அவர்கள் அங்கு மீள்குடியேறமுடியாத இடமாக உள்ளது . இது போன்ற பிரச்சினைகளுக்கு எல்லாம் சோரம்போகாத , துணிவுள்ள ஒரு முதலமைச்சரை தெரிவு செய்வதன் மூலம் தீர்வுகளை பெறமுடியும் என்று தெரிவித்தார் .இன்று இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

Advertisements

Written by lankamuslim

ஜூலை 28, 2012 இல் 8:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: