Lankamuslim.org

தேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ஹக்கீம் ‘போராளிகளுக்கு’ பயிர்ச்சி

with 2 comments

பளுலுல்லாஹ் பஹ்ஜான்: கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்ற முடிவை தொடர்ந்து கட்சியின் வேட்பாளர்களை அறிவுறுத்தும் நிகழ்வொன்று கொழும்பிலுள்ள ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (24) மாலை நடைபெற்றுள்ளது.

முன்னதாக நோன்பு திறக்கும் வேளையில் இப்தாரைத் தொடர்ந்து இந்த நிகழ்வு அங்குள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தலைவர் , அமைச்சர் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹஸனலி, எம்.பி, பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமத், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக், எச்.எம்.எம் ஹரீஸ், எம்.எஸ். அஸ்லம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. மூன்று மாவட்டங்களிலுமிருந்து வந்திருந்த முஸ்லிம் காங்கிரஸின்  வேட்பாளர்களும் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் அஸாத்சாலி, திருகோணமலையில் போட்டியிடும் ஹஸன் மௌலவி ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.

பிரஸ்தாப தேர்தலில் நடந்து கொள்ளக்கூடிய செயல்திட்டம் குறித்து கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் விரிவான விளக்கமொன்றை அதன் போது அளித்துள்ளார். ஏனைய வேட்பாளர்களையும் தமது கருத்துக்களை அங்கு தெரிவிக்குமாறு அவர் வேண்டியுள்ளார்.

வேட்பாளர்கள் பலர் தமது அபிப்பிராயங்களை அங்கு தெரிவித்துள்ளனர். வெற்றிகரமான முறையிலும், தனிப்பட்ட வேட்பாளர்களுக்கிடையில் முரண்பாடுகளும், சர்ச்சைகளும் தோன்றாதவாறு வியூகத்தின் அடிப்படையில் செயல்படுவதன் அவசியம் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கு கட்சியினால் வழங்கப்படும் அடையாள அட்டைகளுக்கான படங்களும் அன்றைய வைபத்தின் போது தனித்தனியாக பிடிக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களுக்கும், அவர்களுடன் வந்திருந்த ஆதரவாளர்களுக்கும் இரவு உணவும் தாருஸ்ஸலாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 26, 2012 இல் 4:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. தவிசாளர் இல்லாமல் ஒரு இப்தாரா .அவரிடம் இருந்து அல்லவா தேர்தல் தந்திரங்களை வேட்பாளர்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கவேண்டும் . தேர்தலில் போட்டியிடாமல் எவ்வாறு தெரிவுசெய்யப்படமுடியும் என்ற நுணுக்கங்களையெல்லாம் சொல்லிக்கொடுத்திருப்பார்.ஆமா இப்ப எங்க ஒரு நிகழ்விலும் காணவில்லை.கட்சியில் இருந்து ஒதுக்கிவிட்டீர்களா .அப்படிச்செய்தால் கட்சிக்கு இழப்பாகிவிடும்.அவர் ஒருஅரசியல் ஞானி.

    jesmin

    ஜூலை 27, 2012 at 9:28 பிப

  2. SLMC CONDIDATE VETRY PERUVATHU EPPADY ENDRU PAYITCHIYELLAM ETHATKU? VALAMAIPOLA PARAMPARIYA MURIPPADY ASHRAFFIN KAVITHAIYAI AUTO MUNNE MULANGICHELLA NARETHAKKUPPEEEER PORALI THILAHANGALL PINNE MULANGIWARA SUWARELLAM MARHOOM ASHRAFF SIRITHTHUKKONDIRUKKA KANDYMANN THANTHA THALAIVAR KALUTHTHIL MANJAL THUNI SUTTRIVARA NAMATHU MUSLIM KATCHIYALLAVA ENE NAALU SANTHUYIL MULANGINAL NJAFAHA MARATHIYAL PATHIKKAPPATTU UNARCHI VASAPPADA MATTUM THAYAR SEIYAPPATTULLA KOOTTAM THARALAMAHA OOTTALLIPPODUM. AATHALAL PORALIHALE!!! PUNITHAPPATHAIYIL UDANE PURAPPADUNGAL. OOIVEDUKKA NERAMILLAI THALAIWAR AWASARAMA OODIPPOI MATHTHIYARASIL OTTIKKOLLA VENDUK. ILLAYANAL SEETTIL YARUM KUNTHIVIDUVAARHAL.

    roshaen

    ஜூலை 28, 2012 at 11:39 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: