Lankamuslim.org

One World One Ummah

ரிஷாத் , பஷீர் முஸ்லிம் அரசியல் ஒன்றுமைக்கான பேச்சில்

with 8 comments

ஷஹீட் அஹமட் :  முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமைப்பட்ட செயலாற்றலை ஏற்படுத்தும் முகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகப் பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவுத் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் . இதன் ஒரு கட்டநகர்வாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீனுடன் விரிவான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இரவு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீனுடன் விரிவான பேச்சுவார்த்தை பரஸ்பரம் நம்பிக்கைந தரக் கூடியதாக அமைந்திருந்தது . மேலும் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகப் பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்த தகவலில் .அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இல்லத்தில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தைகளின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து செயலாற்றுவதற்கு ஏதுவான வகையில் பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாகவும் பேச்சுவார்த்தைகள் பரஸ்பரம் நம்பிக்கையும் பயனையும் அளிக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தற்போது வெளிநாடு சென்றிருப்பதால் அவர் நாடு திரும்பியதும் அவருடன் தன் முயற்சிகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக பசீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்தார்.

இவரின் இந்த முயற்சிக்கு முஸ்லிம் சிவில் சமூகத்திடம் இருந்தும் , முஸ்லிம் நிறுவங்கள் ,அமைப்புகளிடமிருந்தும் பாராட்டும் , ஆதரவும் கிடைத்துள்ளது என்று அறிய முடிகிறது.

Advertisements

Written by lankamuslim

ஜூன் 29, 2012 இல் 9:51 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

8 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. இருவரும் சிறந்த முஸ்லிம் தலைவர்கள்

  Jsu

  ஜூன் 29, 2012 at 11:05 முப

 2. பரஸ்பர விட்டுக்கொடுப்புகளுடன் சமூக நலன்களுக்காக முஸ்லிம் தலைமைகள் எனக்கூறும் அதிகாரிகள் ஒற்றுமைப்பட வேண்டும்… இது பர்ளு ஐன்…இல்லாத விடத்து இவர்கள் சுயநல வாதிகளே அன்றி வேறில்லை.. இஸ்லாத்தை பிரதிநிதிப்படுத்தும் இவர்கள் இவ்வாறு முரன்பட்டுக்கொண்டிருப்பது மிகவுமே வேதனைக்குரிய விடயம். . இஸ்லாம் ஒற்றுமையை எனும் கயிற்றை பலமாக பற்றிக் கொள்ளுமாறு குர்ஆனில் வலியுறுத்துகிறது. இத்தனையும் மீறி முரன்படுபவகள் குஆனுக்கு மாறு செய்பவர்கள்… இதற்குரிய தண்டனையை மிகவிரைவில் அடைவார்கள்…
  அல்லாஹ் இவர்களை நல் வழிப்படுத்துவானாக…!!!

  mohamed

  ஜூன் 29, 2012 at 2:04 பிப

 3. dambulla pallivaayal vivakaaram, enaiya muslimkalin urimai piratchinaikalil onru padaatha ivarkal inru electionil votes eduppatharkaaka intha muslim viroatha perinavaatha arasukku votes eduththu kodukka mun varuthaanathu evaalavu thooram kapada thanam enpathai muslim samookam purinthu kondaal sari!!

  ameen

  ஜூன் 29, 2012 at 4:17 பிப

 4. He will request for post of Leader or dep.Leader of SLMC.
  if he is really loving Muslim community,
  He will joint in SLMC to increase the power of Muslim community
  But he will never do that and never loose a ministry from this government like SLMC leader Hakeem

  Anyway the SLMC gates are open all the time to who ever cares Muslim community, SLMC leader said many times in past.

  Avathaani

  ஜூன் 29, 2012 at 4:52 பிப

 5. முஸ்லிம் கட்சிகள் தேசிய ரீதியில் பிரிந்து செயல்பட்டார்கள் மூன்று அமைச்சுக்கள் கிடைத்தது . ஆனால் கிழக்கில் முஸ்லிம் கட்சிகள் கண்டிப்பாக ஒன்றுமைபட்டு அரசியல் வியூகம் அமைக்கத் தவறினால் முஸ்லிம் முதலமைச்சர் வெறும் கனவாக மட்டும் இருந்து விடுமோஎன்ற ஐயப்பாடு வலுப் பெறுகிறது .

  கிழக்கில் முஸ்லிம் கட்சிகளின் ஒன்றுமைதான் முஸ்லிம் முதலமைச்சரை பெற ஒரே உபாயம் . சிங்கள பேரினவாதம் தமிழ் முதலமைச்சரை சகித்து ஏற்றுக்கொண்டுள்ளது அதற்கு காரணங்கள் பல உண்டு ஆனால் முஸ்லிம் முதலமைச்சர் என்பதை சிங்கள பேரினவாதம் எந்த அளவுக்கு ஏற்றுகொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் . கிழக்கு நேரடியாக ஆளும் தரப்பின் கையில் விழாதவாறு வியூகம் அமைப்பது இன்றிருக்கும் அரசியல் கடமை .

  M.shamil mohamed

  ஜூன் 29, 2012 at 5:04 பிப

 6. ameen i a have accepted ur opinion.

  msabras314@gmail.com

  ஜூன் 30, 2012 at 11:11 முப

 7. நண்பன் பசீரின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்

  கிழக்கில் முஸ்லிம்களதும் தமிழரதும் தலைமைகள் அரசியல் ரீதியாக குறைந்த பட்ச உடன்பாட்டுக்கு வந்தேயாகவேண்டும். அதுவரைக்கும் கிழக்கின் முதலமைச்சர் யார் என்பது திருமலையிலோ மட்டக்களப்பிலோ அக்கரைப் பற்றிலோவல்ல அம்பாறையிலும் கொழும்பிலுமே தீர்மானமாகும். எல்லா விடயங்கலிலும் இதுதான் எங்கள் தலையெழுத்தாக சிதையும்.

  முதலமைச்சர் பதவி ஏனைய முக்கிய பதவிகள் என இரண்டு கூறுகளாக சுளற்ச்சி சக குலுக்கல் முறையில் முஸ்லிம்களும் தமிழரும் மாகாணசபை வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். அதற்க்கான வாய்ப்புகளை நண்பன் பசீர், சம்பந்தர் போன்றவர்கள் ஆராயவேண்டும்.

  வரலாற்று வாய்ப்புகள் இரவில்வரும் கடைசி பஸ்வண்டிபோன்றது.

  வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

  ஜூன் 30, 2012 at 4:43 பிப

 8. really we are happy

  ameer

  பிப்ரவரி 25, 2013 at 2:26 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: