Lankamuslim.org

பெண்ணியம் -அறிய வேண்டிய சில விடயங்கள்

leave a comment »

முஹம்மத் ஜான்ஸின்
இஸ்லாம் பெண்களுக்கு பொருளாதார ரீதியான உரிமைகளை வழங்கியது போலவே அவளுக்க பொருளாதார ரீதியிலான பொறுப்புக்களையும் கடமைகளையும் விதித்துள்ளதைக் காண்கிறோம். இந்த பொறுப்புக்களையும் கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றும்போது தான் இஸ்லாமிய சமூகம் அதன் மூலம் மகத்தான பயன்களை பெறுகிறது என்பதில் சந்தேகமில்லை. இதனையே நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள். ‘ஒரு பெண் தனது கணவனின் வீட்டு விவகாரங்களை கண்காணிப்பவளாகவும் அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றி வினவப்படுபவளாகவும் உள்ளாள்’.

இந்த அடிப்படையிலேயே பெண்கள் சிறுமிகளாக உள்ள காலம் தொட்டு பயிற்றுவிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கக் கூடிய அளவுக்கு கல்வியை இஸ்லாமிய ஒழுங்கிற்கு உட்பட்டு கற்றுக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது . அதேவேளை பிள்ளை பராமரிப்பு, உணவு சமைத்தல், வீடு பராமரிப்பு, உடைகளை சுத்தம் செய்தல் போன்ற விடயங்களையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தும் பயிற்சி அத்தியாவசியமானதா? பெண் பிள்ளைகளால் இவற்றைச் செய்ய முடியுமா? இதற்கான மார்க்கச் சட்டம் என்ன? போன்ற விடயங்களையும் சிந்தித்து சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

இன்று சிலர் எந்தச் செயலை எடுத்தாலும் அதற்கு வழிகேடு என்ற பெயர் சூட்டி செய்தவனின் மானத்தை விமானத்தில் ஏற்றி விடுகின்றனர். ஒரு செயலால் ஏற்பட்ட பாவத்தை விட ஒருவனுடைய மானத்தை அடைமானம் வைப்பது மார்க்கத்தில் மிகவும் வெறுப்பான செயலாக காணப்படுவதுடன் இட்டுக்கட்டுபவன் இனைவைத்தலைப் போன்ற பாவத்தைச் செய்கின்றான் என்று இஸ்லாம் வரையறுக்கிறது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை எடுத்த எடுப்பில் பத்வா கொடுக்க சொல்லும் முட்டாள்களின் மார்க்கமல்ல. அல்லது அவ்வாறான முட்டாள்களை ஆதரிக்கும் அறைகுறைகளின் மார்க்கமும் அல்ல. பொதுவாக பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டும். பெண்கள் மீது வீணான பழிகள் இட்டுக்கட்டள்கள் செய்வது அறவே கூடாது. எந்தளவுக்கெனில் ஒரு விடயம் உண்மையாயினும் நான்கு கண்ணால் கண்ட சாட்சிகள் இன்றி அதனை வெளிப்படுத்த முடியாது. இது தான் இஸ்லாம்.

மேலும் இஸ்லாம் ஒர் அழகிய மார்க்கம். பாவங்களைச் சுட்டிக் காட்டும் போதோ, தவறுகளைச் சுட்டிக் காட்டும் போதோ பொறுமையையும் நிதானத்தை கடைப்பிடிக்கும் படி இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகிறது. மேலும் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் அழகிய முறையில் அமைத்துக் கொள்ளுமாறு இஸ்லாம் எமக்கு கூறுகின்றது. இந்த அழகிய முறை தெறியாதவர்கள் எல்லாம் இன்று சமூகத்தில் காவலன் என்று வேடம் போடுகிறார்கள். ஸுன்னத்து தொழுகையை ஒருவன் தொழவில்லை என்று சைத்தான் ஒப்பாரி வைக்கும் செயலுக்கு ஒத்தது தான் சிலர் முன்வைக்கும் கருத்துக்கள் இருக்கின்றன. இவர்கள் என்ன தான் கூத்து போட்டாலும் இவர்களை சமூகம் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளாது.

அவை ஒரு புறமிருக்கட்டும். இன்று பாடசாலை மாணவ மாணவிகள் பல்வேறு போட்டிகளிலும் பயிற்சிநெறிகளிலும் கலந்து கொள்கின்றனர். பாடசாலை மாணவர்களாக இருந்தாலும் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் பெண்களாக இருந்தாலும் மணமுடித்த பெண்ணாக இருந்தாலும் அல்லது கிழட்டுப்பருவத்தை அடைந்துவிட்ட பெண்ணாக இருந்தாலும் இஸ்லாத்தில் பெண்களுக்கென கூறப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவானதாக தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் பற்றி இஸ்லாம் கூறும் சட்டங்கள் என்ன என்பவற்றை தருகிறேன் இவற்றை மையமாக வைத்து தமது பெண் பிள்ளைகளின் விடயங்களை பெற்றோரும் அதிபர்களும் ஆசிரியர்களும் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் இறையச்சமுள்ள , இஸ்லாத்தை சரியான வடிவில் விளங்கிக் கொண்டுள்ள இரண்டு உலமாக்களை அனுகி குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்து கொள்வது பற்றிய மார்க்கத் தீர்ப்புகள் பெறப்பட வேண்டும்.

பர்தாவின் பலன்கள்

ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்.அல்லாஹ் கூறுகிறான்: தானாக வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அப்பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் தங்கள் முன்றானைகளில் அவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: ”(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள்ää அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள்ää அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.” (அல்குர்ஆன்: 24:31)

”அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.” (அல்குர்ஆன்: 33:53) இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல் வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்ற வற்றை திரையாக்கி தன் உடலை மறைப்பதைக் குறிக்கும். மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்)அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும்.

ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற்குண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது ”அதுவே உங்களின் இதயங்களுக்கும் அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகும்.” (அல்குர்ஆன்:33:53) என்று குறிப்பிடுகிறான். இன்னும்அல்லாஹ் கூறுகிறான்: ”நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கை யாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!” (அல்குர்ஆன்: 33:59)

”நாம் இன்று பெண்களிடத்தில் பார்ப்பவற்றை நபி(ஸல்)அவர்கள் பார்த்திருப்பார்களானால் இஸ்ரவே லர்கள் தங்களின் பெண்களை பள்ளிவாசலுக்குச் செல்வதை விட்டும் தடுத்தது போன்று முஸ்லிம் பெண்களையும் தடுத்திருப்பார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி,முஸ்லிம்)

இந்த நபிமொழிக்கு விளக்கம் அளிக்கும்போது இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுகின்றார்கள். ஆடை அலங்காரம், நறுமணம்,உடலை வெளியில் காட்டுதல் போன்ற செயல்களைத்தான் ஆயிஷா(ரழி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடைகளையும் கடினமான ஆடைகளையுமே அணிந்துதான் பெண்கள் வெளியில் செல்லக் கூடியவர்களாக இருந்தனர்.

பெண்களைப் பொறுத்தவரை அவளுடன் துணை யாகச் செல்லக்கூடிய திருமண உறவு தடை செய்யப்பட்ட ஆண் இருக்கவேண்டும். அதாவது கணவன்,தந்தை மகன்,சகோதரன் போன்றவர்கள், அல்லது பால்குடி சகோதரன்,தாயின் கணவன் அல்லது கணவனின் மகன் போன்றவர்கள் உடன் இருக்கவேண்டும்.

”நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை பிரசங்கம் செய்யும் போது, திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்ட ஆண் அவளுடன் இருந்தேயன்றி எந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணுடன் தனித்திருக்கக் கூடாது. தனக்குத் திருமண உறவு தடுக்கப்பட்டுள்ள ஆண் துணையின்றி எந்த ஒரு பெண்ணும் தனிமையில் பயணம் செய்யக்கூடாது.’ என்று கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத் தூதர் அவர்களே! என் மனைவி ஹஜ் செய்வதற்காகத் தனியாகச் சென்றிருக்கிறாள். நானோ இன்ன யுத்தத்தில் பங்கெடுப் பதற்காக உள்ளேன்.’ எனக் கேட்டார். அதற்கு ‘நீ சென்று உன் மனைவியுடன் ‘ஹஜ்’ செய்துகொள்!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு பெண், திருமணம் செய்வது தடுக்கப்பட்ட நபர் துணையின்றி மூன்று நாட்கள் பயணம் செய்யக்கூடாது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரழி) அறிவிக்கிறார் (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

பார்வையை தாழ்த்துதல்

தன்னுடைய பார்வையைத் தாழ்த்தி,கற்ப்பைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இறைநம்பிக்கையுள்ள ஆண்களுக்கும், இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். கற்பபைப் பாதுகாப்பது என்பதில் விபச்சாரம், ஆண் ஓரினச் சேர்க்கை (ஹோமோ செக்ஸ்) பெண் ஓரினச் சேர்க்கை (லெஸ்பியன்),மனிதர்களிடத்தில் அருவெறுப்பாக நடப்பது, மர்மஸ் தலத்தை அவர்களிடத்தில் காட்டுவது ஆகியவை அடங்கும். இந்த வசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய ஆணுக்கும்,பெண்ணுக்கும் பாவமன்னிப் பையும், மகத்தான கூலியையும் கொடுப்பதாக அல்லாஹ் வாக்களித் துள்ளான். இதோடு அல் அஹ்ஸாப் என்ற அத்தியாயத்தில் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் பண்பு களையும் மனித இனம் செயல் படுத்துமாயின் மகத்தான நற்கூலி உண்டு.

”நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும் பெண்களும்ää இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் இறை வழிபாடுள்ள ஆண்களும், பெண்களும் உண்மையே பேசும் ஆண்களும்ää பெண்களும் பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்விடம் உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும்,பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும் நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும் தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் தியானம் செய்யும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் தயார் படுத்தி யிருக்கிறான்.” (அல்குர்ஆன் 33:35)

பார்வைதான் இச்சையின் வழிகாட்டியாகவும் அதன் தூதாகவும் இருக்கிறது. பார்வையைப் பாதுகாப் பதுதான் கற்பைப் பாதுகாப்பதற்கு அடிப்படையாகும். யார் பார்வையைத் திறந்து விடுகிறாரோ அவர் தன்னை நாசத்தில் ஆழ்த்திவிடுகிறார்.

”அலீயே ஒரு பார்வையைத் தொடர்ந்து இன்னொரு முறை பார்க்காதே! உனக்கு முதல் பார்வை மட்டும் தான். (குற்றமற்றதாக இருக்கும்)” என்று நபி(ஸல்) அவர்கள் தம் மருமகன் அலீ(ரழி) அவர்களிடம் கூறினார்கள்.அதாவது திடீரென விழும் பார்வையினால் குற்ற மில்லைமேலும் அவர்களைத் தொட்டும் அறிவிக்கப் படுகிறது. பார்வை என்பது இப்லீஸின் அம்புகளில் விஷ மூட்டப்பட்ட அம்பாகும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

மனிதனை வந்து சேருகின்ற எல்லாவிதமான பொதுவான சம்பவங்களும் பார்வையினால் தான். பார்வை உணர்வைத் தூண்டுகிறது. உணர்வு சிந்த னையைத் தூண்டுகிறது. சிந்தனை ஆசையைத் தூண்டு கிறது. ஆசை நாட்டத்தைத் தூண்டுகிறது. பின்னர் அது வலுவாகி உறுதியான எண்ணமாம் செயல் அளவில் நிகழக் கூடியதாக மாறி விடுகிறது. எனவே பார்வையைத் தாழ்த்திக் கொள்வதின் மீது பெறுமை செய்வதுபார்ப்பதினால் ஏற்படும் தீய விளைவுகளின் மீது பொறுமை செய்வதை விட இலேசானதாகும் என்று சொல்லப்படுகிறது.

இஸ்லாமியப் பெண்ணே! அன்னிய ஆண்களைப் பார்ப்பதை விட்டும் உன் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்! தொலைக் காட்சியிலும்ää பத்திரிக்கைகளிலும் காட்டப் படும் மோசமான படங்களைப் பார்க்காதீர்கள்! மோசமான முடிவை விட்டும் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்! பார்வைகள் பல மனிதர்களை கைசேதத்தில் தள்ளியுள்ளது. ஏனெனில் பெரிய தீ சிறிய தீப்பொறியிலிருந்து ஏற்படுகிறது.

இசை மனிதர்களிடத்தில் பாவங்களை வளர்க்கும்

அறிவும் புத்தியும் குறைந்தவர்களை தன்வசம் இழுப்பதில் ஷைத்தானின் சூழ்ச்சியில் நின்றும் உள்ளதுதான் கைதட்டுதலும் சீட்டி அடித்தலு மாகும். குர்ஆனை விட்டும் திசை திருப்பும் இசைக் கருவிகள் மூலம் இசைக்கப்படும் பாடல்கள் இவை பாவத்தின் மீதும் தவறின் மீதும் படிய வைத்து விடுகிறது. இவை ஷைத்தானின் வாக்குகளாகவும் அல்லாஹ்வை விட்டும் தடுக்கக் கூடியதாகவும் உள்ளன. அவை ஓரினச் சேர்க்கை மற்றும் விபச்சாரத்திற்குரிய மந்திரமாகவும் உள்ளன. இதன் மூலம் கெட்ட காதலன் தன் காதலியிடம் தன் தேவையைப் ப10ர்த்தி செய்யும் நிலை ஏற்படுகிறது.

அதே நேரத்தில் இசை கருவிகளுடன் பாடல்களை பெண்களிடமிருந்தும், முடி முளைக்காத இளைஞர் களிடமிருந்தும் செவியுறுவது மிகப்பெரிய தவறானதாகவும் விலக்கப்பட்டதாகவும் இருக்கிறது. மார்க்கத்தைக் கெடுப்பதாகவும் உள்ளது. மார்க்கத்தின் மீது பற்றுள்ள வன் இசைக்கருவிகளைக் கேட்பதை விட்டும் தம் குடும்பத்தை தடுத்து நிறுத்தட்டும். அதற்குக் காரணமான வற்றை விட்டும் தடுக்கவேண்டும். சந்தேகத்திற்குரிய காரியங்களை விட்டும் அவர்களைத் தடுப்பது மார்க் கத்தின் மீது ரோஷம் கொண்ட ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்..

ஒரு பெண்ணைத் தன் வசப்படுத்துவது ஆண் மீது சிரமமாகும்போது அந்தப் பெண்ணுக்கு இசைப்பாடல் களை கேட்கச் செய்யமுயற்சிப்பான். அப்போது அவளுடைய மனம் இளகும். ஏனெனில் பெண்களைப் பொறுத் தவரை இராகங்களுக்கு விரைவாக வசப்பட்டு விடுவார்கள். ராகம் இசையோடு இருக்கும் போது அவளுடைய உணர்வுகள் இரண்டு விதத்தில் அதிகரிக்கிறது. ஒன்று இசை சப்தத்தின் மூலமும், மற்றொன்று அதில் நிறைந் திருக்கும் பொருள் மூலமும் இதோடு கூட ஆடலும் பாடலும் சேரும்போது இன்னும் அதிகமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.

இஸ்லாமியப் பெண்ணே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! மிகவும் விபரீதமான இந்த கெட்ட குண நோயி லிருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! இது பல விதத்தில் முஸ்லிகளுக்கிடையில் பரப்பி விடப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பற்றிய அறிவு ஞானம் இல்லாத எத்தனையோ இளம் பெண்கள் அந்த பாடல்களை அது தயாரிக்கப்படும் இடங்களிலிருந்தே பெற்று அதை ஒருவருக்கொருவர் அன்பளிப்பும் செய்கின்றனர்.

கற்பிற்கு ஆபத்து ஏற்படும் காரணங்களில் ஒன்று அன்னிய ஆணும் அன்னிய பெண்ணும் தனிமையில் இருப்பதாகும். ”அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பும் ஒருவர் அவளிடம் திருமணம் தடைசெய்யப்பட்ட நபர் இல்லாத நிலையில் எந்தப் பெண்ணுடனும் தனிமையில் இருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் ஓர் ஆணுடன் தக்க துணையின்றி தனிமையில் இருக்கவேண்டாம். ஏனெனில் அங்கு மூன்றாவது நபராக ஷைத்தான் புகுந்துவிடுவான்.’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (நூல்: அஹ்மத்)

”எந்த ஓர் ஆணும் எந்த ஒரு அன்னியப் பெண்ணுடனும் தனிமையில் இருக்கவேண்டாம். ஏனெனில் ஷைத்தான் மூன்றாவது நபராக வந்து விடுகின்றான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என ஆமிர் இப்னு ரபீஆ(ரழி) அறிவிக்கிறார். (நூல்: அஹ்மத்)

எல்லாப்புகழும், அகிலங்களைப் படைத்து வளர்த்து இரட்சிக்கின்ற அல்லாஹ்வுக்கே! நம் நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்களின் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக!

Advertisements

Written by lankamuslim

ஜூன் 26, 2012 இல் 12:51 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: