Lankamuslim.org

One World One Ummah

காத்தான்குடி மஸ்ஜிதுல் அக்ஸா நிர்மாணம் விரைவு பெறுமா ?

with 3 comments

ஏ.அப்துல்லாஹ் : காத்தான்குடியில் முகைதீன் பெரிய ஜூம்மாப் மஸ்ஜித் உடைக்கப்பட்டு அந்த இடத்தில் ஜெரூசலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலின் (Dome of the Rock) தோற்றத்தில் பலகோடி ரூபாக்கள் செலவில் நிர்மாணிக்கப் பட உத்தேசிக்கப்பட்ட புதிய காத்தான்குடி முகைதீன் பெரிய ஜூம்மாப் மஸ்ஜிதுக்கு அதன் ஆரம்பகட்ட வேலைக்காக ரூபா 8கோடியே 70இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்நிதியினை 18 மாதத்திற்குள் செலவுசெய்யப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மஸ்ஜிதுக்கான முன்மொழிவு கடந்த 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தல் ஆகியன நடைபெற இருக்க முன்னர் முன்வைக்கப்பட்டது. எனினும் பல ஆண்டுகளாக நிர்மாணம் முறையாக இடம்பெறாமை மக்களின் விமர்சங்களை பெற்றுவந்தது. தற்போது கிழக்கு மாகாண தேர்தல் பற்றிய தகவல்கள் சூடு பிடித்துள்ள நிலையில் ஆரம்பகட்ட வேலைக்காக ரூபா 8கோடியே 70இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற நல்ல செய்தி வெளியாகியுள்ளது .

நாடளாவிய ரீதியில் சகல மதத்தவர்களுக்கும் புனிதஸ்தலங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் காத்தான்குடி முஸ்லிம்களுக்கென மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலின் Dome of the Rockதோற்றத்தில் குறித்த மஸ்ஜித் நிர்மாணிகாப்பட்டு வருகிறது. இதற்கான முயற்சிகள் வேலைத்திட்டங்கள் என்பன சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் மேற்கொள்ளப் பட்டு வருகிறது

மூன்று அடுக்குகளை கொண்டு பைதுல் முகத்தஸ் கட்டிட (Dome of the Rock) அமைப்பில் நிறுவப்படவுள்ள இப்பள்ளிவாயல் சுமார் ஐயாயிரம் பேர்களை ஓரே நேரத்தில் தொழுகைக்காக உள்ளடக்கக்கூடிய வகையில் அமைய இருப்பதுடன், இதற்காக வெளிநாட்டு உதவிகளும் பெறபடவுள்ளதாகவும் இதனை பூரணப்படுத்த 200மில்லியன் எதிர்பார்ப்பதாகவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார் .

குறித்த மஸ்ஜிதுக்கான முன்மொழிவு கடந்த 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தல் ஆகியன நடைபெற இருக்க முன்னர் முன்வைக்கப்பட்டது இருந்த போதும் ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் அமைப்பதற்கான உடன்படிக்கை நேற்றே பிரதமர் மாளிகையில் இடம்பெற்றுள்ளது . அதில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள பணிப்பாளர் நவவி மற்றும் அமைச்சின் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர் ,புத்தசாசன அமைச்சின் செயலாளர் கேஸியன் ஹேரத், மகாவலி அமைச்சின் தலைவர் நிஹால் ரூபசிங்க ,திறைசேறி பணிப்பாளர் ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர் என்று தெரிவிக்கப் படுகிறது .

இது தொடர்பான எமது முந்திய செய்திகள:

1காத்தான்குடி ‘மஸ்ஜிதுல் அக்ஸா’ கட்டுமான பணிகள் இடைநிறுத்தம் !

2.காத்தான்குடியில் பைத்துல் முகத்தஸ் வடிவில் மஸ்ஜித்

Advertisements

Written by lankamuslim

ஜூன் 21, 2012 இல் 10:29 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. According to my knowledge dome of rock and baithul muhataz are not same.

    nawa

    ஜூன் 21, 2012 at 6:15 பிப

  2. Sri Lankan Muslim what r u doing but Hon Hizbullah only doing Big Big Big,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, vote bank this man one of the our community poltical man ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, good joke this year,,,,,,,,,,,,,

    youth congress

    ஜூன் 24, 2012 at 7:37 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: