Lankamuslim.org

தொழுகைக்காக வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் பிரதேசம் மற்றும் முதல் முஸ்லிம் பாடசாலை

with 19 comments

அஸ்லம் அலி: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம்கள் செறிவாகவும் அதிகமாகவும் வாழும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசதில் முஸ்லிம் வர்த்தகர்கள் தொழுகைக்காக தமது வர்த்தகங்களை இடைநிறுத்தி தொழுகையில் ஈடுபட தீர்மானித்தனர். அதற்கு அமைவாக தற்போது அந்த தீர்மானம் ஏழு மாதங்களை அடைந்துள்ள நிலையில் தற்போதும் அந்த தீர்மானம் மிகவும் உச்சாகத்துடன் தினமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. என்பதுடன் அக்குரணை மத்திய (அல் அஸ்ஹர்) கல்லூரியிலும்  கல்வி அமைச்சின் அனுமதியுடன் இமாம் ஜமாத்துடன் லுகர் தொழுகை இடம்பெற்று வருகிறது .

அக்குரணை பிரதேசம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும், அங்கு 99 வீதமான வர்த்தக நிலையங்கள் முஸ்லிம்களுக்கு உரியதாகும். அங்குள்ள மஸ்ஜிதுகளில் பாங்கு -தொழுகைக்கான அழைப்பு- செய்யப்படும்போது முஸ்லிம் வர்த்தகர்கள் தமது கடைகளை குறித்த நிமிடங்கள் தொழுகைக்காக மூடிவிட ஏகமனதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்மானித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

தினமும் வர்த்தகம் சூடுபிடிக்கும் நேரங்கலான லுஹர், மற்றும் அஷர் நேரங்களில் தொழுகைக்காக முழு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு முதலாளி , தொழிலாளி உட்பட அனைவரும் மஸ்ஜிதுகளுக்கு சென்று வருகின்றனர். தினமும் அக்குரணை பிரதேச மஸ்ஜிதுக்களில் லுஹர், மற்றும் அஷர் நேரங்களில் ஜும்மாஹ் தொழுகைக்கு கூடும் தொகைக்கு நிகரான மக்கள் கூட்டத்தை காணக்கூடியதாக இருப்பது சிறப்பம்சமாகும் .

இந்த நடைமுறையின் மூலம் ஏனைய மதத்தவர்களுக்கு சிரம்பங்கள் ஏற்படாதவாறு சில விசேட வழிமுறைகளும் கையாளப்படுகிறது . தற்போது அக்குரணை பிரதேச அரச தேசிய முஸ்லிம் பாடசாலையான அக்குரணை மத்திய (அல் அஸ்ஹர்) கல்லூரியிலும் மாணவர்கள் லுகர் தொழுகையை இமாம் ஜமாத்ஆக பாடசாலையின் மைதானத்தில் பல மாதங்களாக நிறைவேற்றி வருகிறார்கள் .

இதன் பிரகாரம் தொழுகைக்காக தமது வர்த்தகத்தை இடை நிறுத்தும் முதல் முஸ்லிம் பிரதேசம் என்ற பெருமையை அக்குரணை பிரதேசம் பெற்றுகொண்டுள்ளதுடன் லுகர் தொழுகையை இமாம் ஜமாத்துடன் நிறைவேற்றும் முதல் முஸ்லிம் அரச பாடசாலை என்ற பெருமையை அக்குரணை (அல் அஸ்ஹர்) மத்திய கல்லூரி பெற்று கொண்டுள்ளது . தொழுகைக்காக செலவு செய்யப்படும் குறித்த நிமிடங்கள் மேலதிகமாக கல்லூரியால் பெறப்படுவாதல் குறித்த பாடசாலை 10 நிமிடங்கள் தாமதித்தே நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான எமது முந்திய செய்திகள்:

தொழுகைக்காக கடைகளை மூட அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்

Advertisements

Written by lankamuslim

ஜூன் 19, 2012 இல் 10:57 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

19 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. Alhamdulillah

  Nasir

  ஜூன் 19, 2012 at 3:19 பிப

 2. அக்குறணையில் தோற்றம் பெற்றுள்ள இந்த நல்ல முன்மாதிரி நடவடிக்கை இலங்கையின் சகல பாகங்களிலும் கடைக்கப்பிடிக்க முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். எந்த நல்ல விடயங்களையும் மாணவப் பருவத்திலிருந்தே ஆரம்பிப்பது அதற்கான பயிற்சிகளை வழங்கி அவர்களை ஊக்குவிப்பது ஒரு சிறந்த முன்மாதிரியாகும். ! ஆனால் ஒன்று இதனுடன் கூடுதல் அக்கறை கல்வியிலும் செலுத்த வேண்டும். மார்க்கமும் சிறந்த கல்வியும் நமக்கு இரு கண்கள் போன்றவை. அத்துடன் வர்த்தக நிலையங்களையும் தொழுகைக்காக நகர வர்த்தகர்கள் மூடிவிட எடுத்துள்ள முடிவானது நிச்சயமாக தொழில் வியாபாரங்களில் அல்லாஹ் அதிக பரக்கத்தினை அருளச் செய்வான். இதனை ஆரம்பித்து வைத்த அனைவருக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக !!

  Ossan Salam - Doha

  ஜூன் 19, 2012 at 3:29 பிப

 3. I am from hemmathagam and studied in Madulbowa muslim Maha Vudiyalaya, I did O/L in 1988, since my grade 1 in our school, it was compulsory to perfom the luhar prayer with Jamath.

  Falulur Rahuman

  ஜூன் 19, 2012 at 5:24 பிப

  • We must appreciate your school too for the same virtuous conduct….but we see the difference between yours or other schools and Akurana school since it has been taken official prior approval from the education department. It doesn’t mean that we should take prior approval for our compulsory prayers from someone. But we should seek permission from the department since it is a governmental school. We need a model city or model village which could fervently adopt a complete Islamic way of life. No matter that will be Akurana, Madulbowa or Kattankudy.

   Ossan Salam - Doha

   ஜூன் 23, 2012 at 10:18 முப

  • our comment is awaiting moderation.
   0 0 Rate This
   We must appreciate your school too for the same good deeds….but we see the difference between yours or other schools and Akurana school since it has been taken official prior approval from the education department. It doesn’t mean that we should take prior approval for our compulsory prayers from someone. But we should seek permission from the department since it is a governmental school. We need a model city or model village which could fervently adopt a complete Islamic way of life. No matter that will be Akurana, Madulbowa or Kattankudy.

   Ossan Salam – Doha
   June 23, 2012 at 10:18 am
   Reply

   Ossan Salam - Doha

   ஜூன் 23, 2012 at 6:45 பிப

 4. maasha allah this is absolutely great

  Mohamed

  ஜூன் 19, 2012 at 10:58 பிப

 5. Masha Allah

  Nishath

  ஜூன் 20, 2012 at 11:36 முப

 6. Masa allah..

  mrmsafran

  ஜூன் 20, 2012 at 12:06 பிப

 7. masa allah..unmayileye varevetke vendiya vidayam..

  mrmsafran

  ஜூன் 20, 2012 at 12:07 பிப

 8. mashallah, It will models to all other muslims.

  rikan

  ஜூன் 20, 2012 at 7:11 பிப

 9. Akurana is good roll model for every muslim majority area

  Gafoor Husain

  ஜூன் 20, 2012 at 7:42 பிப

 10. tholuhaikku mukkiyaththwam kodukkum inth nallamal kaala kalathukkum thodara walla naayan allah wai pirarthippom

  mohamed safran

  ஜூன் 22, 2012 at 3:53 பிப

 11. meendum siru makkaththai nokiya paathai

  mohamed safran

  ஜூன் 22, 2012 at 3:57 பிப

 12. எல்லா புகழும் புகழ்ச்சியும் அந்த​ அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும் “அல்ஹம்துலில்லாஹ்”

  Student
  Batch OF 2012
  Azhar College Akurana
  Kandy Sri Lanka – 20850

  MOhamed Fazary Fazal

  ஜூலை 1, 2012 at 11:19 முப

 13. Alhamdulliah

  Ali.sm

  ஓகஸ்ட் 25, 2012 at 4:47 முப

 14. maasha allah

  Munshif Meo..

  ஒக்ரோபர் 28, 2012 at 7:58 பிப

 15. Alhamthulillah shall we follow dear brothers and sisters?

  Mohammed iyoob

  மார்ச் 5, 2013 at 12:20 பிப

 16. அமல்களைக்கொண்டு பெருமை கொண்டவர்களில் எம்மை காத்துக்கொள்ள அவசியமான ஒரு காலம்.

  Minhaj

  மே 31, 2016 at 5:47 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: