Lankamuslim.org

One World One Ummah

CID முஸ்லிம் சமய கலாசார திணைக் களத்திக்கு செல்லவில்லையாம்

with one comment

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திக்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர் மஸ்ஜித்துகள், தைக்கியாக்கள், அவற்றின் நிர்வாகிகள் தொடர்பான தகவல்களை சேகரித்து சென்றமைக்கு சிரேஷ்ட அமைச்சர் எம்.எச்.எம்.பௌசி தனது கண்டனத்தை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசெள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .

அவர் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தேவையாளால் அவற்றை புள்ளிவிபரவியல் திணைக்களதிடம் இருந்து பெறமுடியும் என்று தெரிவித்துள்ளார் . அதேவேளை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் நவவி குற்றப்புலனாய்வு பிரிவினர் மஸ்ஜித்துகள், தைக்கியாக்கள், அவற்றின் நிர்வாகிகள் தொடர்பான தகவல்களை பெற்று சென்றுள்ளனர் என்று தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது . அதேவேளை மேலும் அந்த செய்தியில் போலீஸ் ஊடக பேச்சாளர் எஸ். பி அஜித் ரோகன குற்றப்புலனாய்வு பிரிவினர் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பாக அலவி மௌலானா , பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் ஆகியோரும் அரசரின் உயர் மட்டத்திடம் இது தொடர்பாக முறையிடப்படும் என்று தெரிவித்துள்னர். அதேவேளை பள்ளிவாசல்களின் தகவல்களை கோருவது உரிமை மீறலாகும் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார் .

அதேவேளை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையிலுள்ள அனைவரினதும் பெயர் முகவரி உள்ளிட்ட தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியதாக வெளியான தகவல்களை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தி உயர் அதிகாரி நிராகரித்தார் என்று  செய்தி வெளியானமை குறிப்பிடத்தக்கது .

Advertisements

Written by lankamuslim

ஜூன் 4, 2012 இல் 8:01 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. ஒவ்வொரு வெப் சைட்டுகளும் முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வாந்தியெடுத்துக் கொண்டிருக்கின்றன. ஒன்று சீஐடியினர் வந்து பள்ளிகள் குறித்த தகவல்களை பெற்றுச் சென்றதாக நமது முஸ்லிம் கலாசார இயக்குனர் சன்டே டைம்ஸ்க்கு தெரிவித்ததாக சொல்கின்றது. ஆனால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அப்படி குற்றப் புலனாய்வுத்தறை செல்லவில்லையென மழுப்பகின்றார். (மேவேயள்ள செய்திகளின் படி இப்பொழுது முஸ்லிம் கலாசார நிலையத்திலுள்ள உயர் அதிகாரியும் அப்படி வரவில்லையென மறுக்கின்றார். அப்படியானால் யார் சொல்வது உண்மை என்பதை கூறமுடியாதா? போகவில்லை என்றால் அவர்கள் சென்றது எங்கே? காமினி தியேட்டரில் படம் பார்க்கவா ? போகவில்லையென்றால் அமைச்சர் பௌசி போன்ற ஒரு முக்கியஸ்தர் பொலிஸில் முறைப்பாடு செய்யவிருப்பது ஏன்? இந்த நாட்டில் நடப்பது எல்லாம் புரியாத புதிர்கள் தான் ? குற்றப்புலனாய்வுத்துறை நமது பள்ளிவாயல்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள அவர்களுக்குள்ள தார்மீக உரிமை என்ன ? ஏன் பள்ளிவாயல்களில் ஏதும் குற்றச் செயல்கள் நடக்கின்றனவா? அதற்குத் தானே புள்ளிவிவரத் திணைக்களம் என்று ஒன்றைக் கட்டி வைத்துள்ளார்கள். அங்கு போய் விவரங்களை அறிய வேண்டியது தானே ?

    Ossan Salam - Doha

    ஜூன் 4, 2012 at 7:33 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: