Lankamuslim.org

One World One Ummah

தெஹிவளை தாருர் ரஹ்மான் மஸ்ஜித் மற்றும் மதரஸா வழமை போன்றே இயங்கிவருகிறது

with one comment

M.ரிஸ்னி முஹம்மட்:  தாருர் ரஹ்மானில்  ஜமாஅதுத்டனான ஐந்துவேலை தொழுகை மற்றும் சிறுவர் மதரஸா ஆகியன இன்றுவரை வழமை போன்று இயங்குவதாக ஷபாஹ் நிறுவத்தின் பணிப்பாளரும் , அகில இலங்கை ஜம்இயத்துள் உலமாவின் துணை செயலாளருமான தாசீம் மௌலவி lankamuslim.org க்கு தெரிவித்தார்.

கடந்த வெள்ளிகிழமை பெளத்த தீவிரவாத தேரர்கள் தலைமையில் தாருர் ரஹ்மான் சட்டவிரோதமான கட்டடம் என்றும், அனுமதி பெறாமல் மஸ்ஜித்தாக இயங்குவதாகவும் அது மாடுகளை பலியிடும் மடுவமாக இயங்குவதாகவும் குறித்த மஸ்ஜிதை அகற்ற வேண்டும் என்றும் ஆர்பாட்டம் மேற்கொள்ளபட்டது. இதபோது மஸ்ஜித் மீது சில கல் வீச்சும் இடம்பெற்றது.

இதை தொடர்ந்து தெஹிவளை பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் கடந்த ஞாயிற்று கிழமை மாலை நான்கு மணி தொடக்கம் இடம்பெற்றது அதில் முஸ்லிம் தரப்பும் , ஆர்பாட்டகாரர்கள் தரப்பும் கலந்துகொண்டன .

மதரஸாவாக இயங்க அனுமதி வழங்கப்பட்ட போதும் மஸ்ஜிதாக இயங்க நீதி மன்றம் மூலம் தீர்வை பெறுவது என்றும் . மஸ்ஜிதில் கூட்டமாக தொழுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. தாருர் ரஹ்மான் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையில் மஸ்ஜித்தாகவும், ஆரம்ப பாடசாலையாகவும் 2002 ஆண்டு தொடக்கம் பதியப் பட்டுள்ளது.அதேபோன்று வக்பு சபையில் மஸ்ஜித்தாகவும் 1999 ஆம் ஆண்டு மஸ்ஜித்தாக பதிவு செய்யப்பட்டு அவற்றுக்கான ஆதாரங்கள் முஸ்லிம் தரப்பில் இருந்தபோதும் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையில் மஸ்ஜித்தாகவும், ஆரம்ப பாடசாலையாகவும் 2002 ஆண்டு பதிவு செய்யப்பட்டமைக்கான பதிவுகள் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையின் ஆவணங்களில் இல்லை என்று மாநகர நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்று ஏற்கனவே நாம் செய்தி பதிவு செய்திருந்தோம் .

ஆனாலும் இது வரை தாருர் ரஹ்மானுக்கு எதிராக நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று அகில இலங்கை ஜம்இயத்துள் உலமாவின் துணை செயலாளர் தாசீம் மௌலவி இன்று தெரிவித்தார் . பெளத்த தேரர்கள் வழக்கு தாக்கல் செய்தால் அவற்றை அதை எதிர்கொண்டு வெற்றி கொள்வதற்கு சகல ஏற்பாடுகளையும் தாருர் ரஹ்மாம் நிர்வாகம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார் .

மேலும் அவர் வழங்கிய தகவலில் இந்த நாட்டில் முஸ்லிம்கள் மிக நீண்ட வரலாற்றை கொண்டவர்கள் என்றும் முஸ்லிம்கள் இந்த நாட்டில் மற்ற சமூகங்களை போன்று சகல உரிமையும் கொண்டவர்கள் என்றும் இந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் என்றும் ,இந்த நாட்டில் சகல உரிமைகளையும் கொண்ட நாட்டின் சட்டத்தை மதிக்கின்ற இலங்கையின் குடிமக்கள் என்றும் நாட்டில் உள்ள மஸ்ஜிதுக்கள் இந்த நாட்டின் சமாதானத்தையும், அபிவிருத்தியையும் சகல சமூகத்திற்கும் அமைதியையும் வேண்டி பிராத்திக்கும் தலங்களாகும் அவற்றுக்கு எதிரான ஆர்பாட்டங்களுக்கு யார் அனுமதி வழங்குகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் தெரிவித்தார் .

Advertisements

Written by lankamuslim

மே 31, 2012 இல் 9:44 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. ஆயினும் இதுபோல் தம்புள்ளைப் பள்ளியிலும் தொழுகைகள் தற்போது வழமைபோல் இடம்பெற்று வந்தாலும் இன்றைய (01-06-2012) லக்பிம பத்திரிகையில் உள்ள செய்தியின் படி “புனித நகர அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்தும் வகையில் உரிய அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களையும் அகற்றிக் கொள்ளுமாறு அதன் உரிமையாளர்களுக்கு எழுத்து மூலமாக அறிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக” கூறப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் நாம் என்ன தான் குரல் எழுப்பினாலும் எமது தலைமைகள் மேலிடத்து உத்தரவுக்கு தலைசாய்த்துவிட்டார்கள் என்பது தான் உண்மை. சாதாரண முஸ்லிம்கள் பொங்குவதால் எந்த நன்மைகளும் இல்லை. மற்றுமொரு பொங்கலில் மீண்டும் நாம் பொங்குவோம்.
    எம்மவர்கள் பள்ளிவாயல் தைக்காக்கள் கட்ட முதல் அதற்குரிய சரியான சட்ட ஆலோசனைகளைப் பெற்று வக்பு சபையின் அனுமதியையும் முதலில் பெற்ற பின்பே அடிக்கல்லையே நாட்ட வேண்டும். ஊருக்கு முன் நமக்கு பள்ளிவாயல்கள் வேண்டும் என்பதற்காக நாட்டின் சட்டதிட்டங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல் மதிக்காமல் கிராமங்களில் மற்றும் நகரங்களில் கட்டட நிர்மாணங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அறிவினைக் கூட பெற்றுக் கொள்ளாமல் நாம் தான்தோன்றித் தனமாக பள்ளிவாயல்களை அமைத்துக் கொள்வதால் தான் இத்தகைய பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளோம். இது குறித்த விளக்கங்களை சகல பள்ளிவாயல்களிலும் வெள்ளிக் கிழமைகளிலும் தூக்கம் தரும் குத்பாக்களையே ஓதிக் கொண்டிருக்காமல் மக்களை அந்நிய மக்கள் மத்தியில் எப்படி வாழ வேண்டும் என்பதை விளக்கும் விதத்தில் அதனை ஊக்கப்படுத்தும் விழிப்படையச் செய்யும் குத்பாக்களை ஓதுவது தான் சிறப்பாகும்.

    Ossan Salam - Doha

    ஜூன் 1, 2012 at 10:41 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: