Lankamuslim.org

One World One Ummah

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்மைக்கு அமைச்சர் கண்டனம்

with 5 comments

இர்ஷாத் றஹ்மத்துல்லா: அமைச்சர்  றிசாத் பதியுதீன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோரின் கண்டனங்கள் : தெஹிவாளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற விடிவெள்ளி பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் பௌத்த மத பிக்குகளால் சுற்றிவளைக்கப்பட்டு, அவர்களது கமரா கருவிகளுக்கு இழைக்கப்பட்ட சேதங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதொன்று என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானதொன்று மக்களுக்கு எதிராக சில இனவாதிகளால் மேற்கொள்ளப்படும் நேரடி மற்றும் மறைமுகமான அடக்கு முறைகளை வெளிக் கொண்டு வந்து அதனை மக்களின் முன் நீதிக்காக சமர்ப்பிக்கும் உண்ணத பணியினை ஊடகங்கள் செய்கின்றன.

ஊடகவியலாளர்களை பொறுத்த மட்டில் அவர்களது தியாகம்,அரப்பணம் சமூகம் சாரந்த சிந்தனை  என்பது மிகவும் பெருமதியானது,அவர்கள் செய்யும் பணிகள் போற்றப்பட வேண்டும்.விடிவெள்ளி பத்திரகை என்பது மிகவும் நேர்மையான முறையில் சகல தரப்புக்களின் செய்திகளை வெளிக் கொண்டுவருவதிலும்,முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை சுட்டிக்காட்டுவதிலும் முன்னின்று செய்றபடும் ஒரு ஊடகமாகும்.தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தில் முழுமையாக உண்மை நிலையினை வாசகர்களுக்கு துணிந்து வழங்கியதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இவ்வாறான நிலையில் தெஹிவளை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற விடிவெள்ளி ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டமை,அவர்கள் அவமதிக்கப்பட்டமை தகவல் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகவே கருதுகின்றேன் என்றும் அமைச்ர றிசாத் பதியுதீன் வெளியிட்டு்ள்ள அறி்க்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்

விடிவெள்ள பத்திரகையின் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலை தாம் வண்மையாக கண்டடிப்பதாகவும்,இநத செயலை செய்தவர்களுக்கு எதிராக ஒட்டு மொத்த ஊடக அமைப்பும் தமது எதிர்ப்பபை வெளியிட வேண்டும் என்றும் வ்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த நாட்டில் முஸ்லிம்களுக்காக பேசவலிமை கொண்ட பத்திரகைகளில் விடிவெள்ளியும் இணைந்துள்ளமை எமது மக்களுக்கு பெரும் பலமானதாகவுள்ளது.இவ்வாறு செயற்படும் பத்திரிகையின் முக்கிய செய்தியாளர்கள் அச்சுறுத்தப்பட்டதை அனுமதிக்க முடியாது.இது குறித்து எமது கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஊடக ஊடக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன்,அந்த சம்பவத்துடன் தொமர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்க ணேவடும் என்பதையும் வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Advertisements

Written by lankamuslim

மே 28, 2012 இல் 12:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

5 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. aahaa very good ungal kadamai mudinthu vittathu!!! vetkamillayaa evvalavu kaalam thaan ippadi arikkai vittu kaalaththai oattappokinreerkal? ithil sambanthappattvarkalaI ARREST PANNA VAIKKA UNGALUKKu THILLU IRUNTHAAL PANNUNGA PAARPOAM….

  ameen

  மே 28, 2012 at 1:06 பிப

 2. அமீன் ஒரு முஸ்லிம் கஸ்டப்படும் போது குறைந்தது அவனுக்கு ஆறுதல் சொல்வது தான் மற்றொரு மனிதனின் கடமை .இது தங்களுக்கு தெரியாது போலும்,அமைச்சர் றிசாத் அதனை தான் செய்துள்ளார்.அடுத்த கட்டமாக நீங்கள் எதிர்பார்ப்பதை செய்வார் என நம்பலாம்,எல்லாவற்றிற்கும் ஒரு வழி உண்டு,உங்கட தில்லைப் போல வெற்று காற்றாக போய்விடக் கூடாது

  நஸ்ருள்ளா

  nazrulla

  மே 28, 2012 at 1:35 பிப

 3. minister very good your the first and fast we muslim community appreciate you statement alhamdu liillah

  sham

  மே 28, 2012 at 1:37 பிப

 4. kovra amaichar avarhala muslim oruwarukku thunbam wanthal neegal sollum aarudalhal varevetka vendiyathu..idu nalla panbu..thalaivarhalukku iduthan mukkiyam..keepit sir

  nazrulla

  மே 28, 2012 at 1:39 பிப

 5. ஏன் ஜனாதிபதி இந்த விடயம் பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசுறது இல்லை?உதரணமாக ஆரம்பத்தில் எங்கயும் சிறு சிறு பள்ளிகொடம்மஹவோ அல்லது அதற்கு பிறகு தேவை சமுஹதுக்கு ஏற்ற வரு மாற்றி அமைப்பது ஒரு குற்றமா?இந்த பிரதேசில் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் குறைவாகவும்,இப்போது அது கூடிய எண்ணிக்கையாக மாறி இருக்கின்றன எனவே தான் பெரிதாக வேண்டிய கட்டம் தேவை.இவைகள் சிறிலங்காவில் மட்டும் நடக்குறது இல்லை உலக நாடுகளில்லும் அடிப்படையாக நடக்குற விசயம்,இது யாரும் புரிந்து கொள்ளவேண்டும்.

  Azeez

  மே 28, 2012 at 2:59 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: