Lankamuslim.org

One World One Ummah

தெஹிவளை தாருர் ரஹ்மான் தொடர்பான கூட்டம் சாதகமான , பாதகமான அறிவுறுத்தல்களுடன்

with 2 comments

M.ரிஸ்னி முஹம்மட்: தெஹிவளை பிரதேச தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸா தொடர்பாக முஸ்லிம் தரப்புக்கும், ஆர்பாட்டகாரர்கள் தரப்புக்கும் இடையில் பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் தெஹிவளை ஜெயசிங்க மண்டபத்தில் இன்று மாலை தொடக்கம் நீண்ட நேரமாக இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டம் முஸ்லிம் தரப்புக்கு சாதகமானதும் ,பாதகமானதுமான முறையில் முடிவடைந்துள்ளது.

தாருர் ரஹ்மான் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையில் மஸ்ஜித்தாகவும், ஆரம்ப பாடசாலையாகவும் 2002 ஆண்டு தொடக்கம் பதியப் பட்டுள்ளது.அதேபோன்று வக்பு சபையில் மஸ்ஜித்தாகவும் 1999 ஆம் ஆண்டு மஸ்ஜித்தாக பதிவு செய்யப்பட்டு அவற்றுக்கான ஆதாரங்கள் முஸ்லிம் தரப்பில் இருந்தபோதும் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையில் மஸ்ஜித்தாகவும், ஆரம்ப பாடசாலையாகவும் 2002 ஆண்டு பதிவு செய்யப்பட்டமைக்கான பதிவுகள் தெஹிவளை -கல்கிசை மாநகர சபையின் ஆவணங்களில் இல்லை என்று மாநகர நிர்வாக தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதனால் மதரஸாவாக இயங்க அனுமதி வழங்கப்பட்ட போதும் மஸ்ஜிதாக இயங்க முடியாது என்று தெரிவிக்கபட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டு பதிவை உறுதிப் படுத்தும் ஆவணங்களுக்கு என்ன நடந்துள்ளது என்பது பற்றியும் , இவைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் தற்போது முஸ்லிம் தரப்பில் ஆராயப் படுகிறது . இது தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் பதிவு செய்யப்படும்.

Advertisements

Written by lankamuslim

மே 27, 2012 இல் 11:00 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. ஆமா பள்ளியை உண்டைது அங்கேயும் ஒரு பெரிய புஉது கொத்தையை வைக்க சொல்லுங்கள்,அது தான் மஞ்சள் புடவை உடுதவர்களுக்கு தேவை இப்போதுக்கு…………………………………..

    Azeez

    மே 28, 2012 at 12:59 முப

  2. சகல முஸ்லீம் சகோதரர்கட்கும் ஒரு வேண்டுகோள் : தயவு செய்து இவ்வாறான பிரச்சனைக்கு எமக்கிருக்கும் ஒரே பாதுகாப்பானதும் சிறந்ததுமான வழி, நீதி மன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்து, எமது உரிமையை சட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளல். அதை விடுத்து வீணான தர்க்கங்கள், விமர்சனங்கள், அரசியல்வாதிகளின் பசப்புகளுக்கு ஏமாறுதல் போன்றவற்றை நம்பி, இருப்பதையும் கெடுக்காமல் தீர்க்கமாய் சிந்தித்து செயற்பட அனைவரும் உறுதியுடன் முன்வருவோம் என கேட்டுக்கொள்கின்றேன்.

    Ali Khan

    மே 29, 2012 at 3:20 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: