Lankamuslim.org

தெஹிவளை தாருர் ரஹ்மான் மஸ்ஜித், மதரஸாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

with 5 comments

முஹம்மத் அம்ஹர்: தெஹிவளை பிரதேசத்தில் கல்வல வீதியில் அமைந்துள்ள தாருர் ரஹ்மான் மஸ்ஜித் , சிறுவர் மதரஸாவுக்கு எதிராக இரண்டாவது ஆர்ப்பாட்டம் ஒன்று  இடம்பெற்றுவருகிறது . தெஹிவளை பிரதேசத்தின் கல்வல வீதி மிருகக்காட்சி சாலைக்கு பின்புறம் அமைந்துள்ள சிறுவர் மதரஸாவாகவும் , மஸ்ஜித்தாகவும் இயங்கிவரும் படங்கள் கட்டடத்திற்கு எதிராகவே அந்த ஆர்ப்பாட்டம் பெளத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்றுவருகிறது .

குறித்த கட்டிடம் சட்டவிரோதமான கட்டடம் என்றும், அனுமதி பெறாமல் மஸ்ஜித்தாக இயங்குவதாகவும் அங்கு மாடுகளை பலியிடுவதாகவும்  கூறியே அதற்கு எதிராக ஆர்பாட்டம் இரண்டாவது தடவையாகவும் மேற்கொள்ளபட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2011 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பெளத்த பிக்குகள் தலைமையில் பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டம் குறித்த மதரஸாவை சூழ்ந்து அங்கு நுழைந்து பள்ளியையும் மதரசாவையும் மூடுமாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது . குறித்த மஸ்ஜித் ,மதரஸா 70 பேர்ச் கொள்வனவு செய்யப்பட்ட காணியில்  மதரஸாவாக  சட்ட அனுமதியுடன் இயங்கிவருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

படங்கள்: நோலேச்   பொக்ஸ்,முஹம்மத் அம்ஹர்:

தெஹிவளை  முதல் ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்தி

Advertisements

Written by lankamuslim

மே 25, 2012 இல் 5:42 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

5 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. இலங்கையில் “இஸ்லாமோபோபியா” உருவாக்குவதற்கு அமெரிக்க சி ஐ ஏ , இஸ்ரேலிய மொசாத், இந்திய ரோ ஆகிய சக்திகள் கூட்டு ஒத்துழைப்பில் கூலிப் படைகளை அமர்த்தியுள்ளன, இலங்கை உள்விவகாரங்களில் அவர்கள் தொடர்ந்தும் தலையிடுவதற்கும் அவர்களது பிராந்திய அரசியல் இராஜதந்திர இராணுவ கூட்டு ஒத்துழைப்பிற்கும் இனவாத சக்திகள் கூலிக்கு அமர்த்தப் பட்டு களமமைக்கப் படுகிறது…முஸ்லிம்கள் நிதானமாக செயற்பட வேண்டும், தேசிய ஷூரா ஒன்றின் வழி நடாத்தல் அவசியமாகிறது, துவேஷமற்ற பெரும்பான்மை சிங்கள மக்களுடன் புரிந்துணர்வுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதோடு தாவப் பணியிலும் கூடுதல் கரிசனை காட்ட வேண்டும்…என்றோ இந்த நாட்டு மக்களுக்கும் ஹிதாயத் கிடைக்க வேண்டும்…!

    Imran Hussain

    மே 25, 2012 at 8:51 பிப

  2. كانت في عاصمة سريلانكا كولومبو مسجد ومدرسة قرآنية للأطفال المسلمة منذ 15 سنة، وأن المدرسة سجلت رسمية على مطلوب الحكم السريلانكي
    فعلى كل حال منذ 3 أسابيع يقوم رؤساء البوذيين على المسجد هذا والمدرسة القرأنية، فاليوم هذا (25.05.2012) في الساعة الرابعة جاء القائمون على المسجد والمدرسة يصيحون ويهوجون على وجه إزالة المسجد والمدرسةمن تلك المكان الذي كانا عليه
    وجدير بالذكر هذا مسجد ثالث الذي يحاول البوذيون للإزالة على أساسها في سريلانكا في شهر واح

    Khalid Bin Waleed

    மே 26, 2012 at 8:01 முப

  3. ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் தாங்கள் 10 வீதமாக ஸ்ரீலங்காவின் சனதொகையில் இருப்பதுடன் வரி வருமானம் உட்பட அரசு மக்களிடம் இருந்து பெரும் அத்தனை வருமான வழிவகைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் தங்கள் சனதொகை வீதத்தையும் விட அதிகமாகவே பங்களிப்பு வழங்குவதாலும் அரசு மேட்கொள்ளும் அத்தனை அபிவிருத்தி திட்டங்களிலும் குறைந்தது தங்கள் சனதொகை வீதத்திட்கு அமையவாவது அனுபவிக்கவும் பங்கு பெறவும் உரித்துடையோராவர் அதேபோல் ஸ்ரீலங்காவின் அரசியல் அமைப்பில் அதன் பிரஜைகளுக்கு வழங்கபட்டுள்ள அத்தனை சலுகைகள் வளங்கள் வாய்ப்புகளையும் அனுபவிக்கவும் உரித்துடையோராகவும் தகுதியானோராகவும் இருப்பதால் அரசியல் அமைப்பில் வழங்கபட்டுள்ள மத சுதந்திரதை நிலை நிறுத்தும் பொருட்டு அடிப்படை அரசியல் யாப்பு வழங்கும் உரிமை மீறபடுவதாகவும் சுதந்திரமாக வாழும் அடிப்படை உரிமை மீறபடுவதாகும் மிக பிரசித்தமான சட்ட வல்லுனர்களின் உதவியுடன் உச்ச நீதிமன்றில் வழக்கை தொடுத்தும் நீதி கோர வெளிகிடுவதே முஸ்லிம் சமூகத்தின் முன்னால் உள்ள மிக சாதகமான வழி முறையாகும் இதட்காக முஸ்லிம் சிவில் அமைப்புகளும் தனவந்தர்களும் ஒன்றாக செயட்பட முனைவதே இதே போல் தென் ஸ்ரீலங்காவில் ஆங்காங்கே திட்டமிட்டு எதிர்காலத்தில் குழப்பம் விளைவிக்க ஆங்காங்கே அமைய பெற்ற நம் இஸ்லாமிய மையங்களை அகற்ற வேண்டும் என்ற ஆர்பாட்டங்கள் எல்லா வற்றுக்கும் முடிவு கட்டவும் நம் உரிமையை நிலை நாட்டவும் உள்ள வாய்பாகும்

    மேலும் இலங்கையில் இது வரை ஒற்றுமை இல்லாவிட்டாலும் பகைமை பாராட்டாமல் இருந்து வந்த சிங்கள முஸ்லிம் இனங்களை துவேச நிகழ்வுகள் மூலமும் இன குரோத நடவடிக்கைகள் உணர்ச்சிகளை கிழர்ந்தெலழ வைக்கும் சம்பவங்களையும் உருவாக்கி மீண்டும் தம் நிகழ்ச்சி நிரலுக்கமைய ஸ்ரீலங்காவின் நிலமையை மாற்றி அமைக்கவும் ஸ்ரீலங்காவை கொந்தளிப்பான நிலையில் வைத்திருப்பதன் மூலம் குளிர் காயவவும் மேட்கு ஐரோப்பிய,அமெரிக்க,இஸ்ரேலிய,இந்திய சக்திகளின் கூட்டான சகுனி வேலைகளை முஸ்லிம்களின் நிதானமான சாதூர்யமான வன் முறைக்கு துனை போகாமல் சமாதானமாக வாழும் சிங்கள பெரும்பான்மை மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு சிங்கள தீவிரவாத கூட்டதிட்கு எதிராக சிங்கள பெரும்பான்மை மக்களை குரல் கொடுக்க வைக்கும் காரியங்களையும் முடிக்கி விடுவதன் மூலமே எல்லா புலனாய்வு சக்திகளின் மூஞ்சியிலும் கரியை பூசி ஸ்ரீலங்கா முஸ்லிம்களிடம் விளையாட முடியாது என்பதை இந்த சக்திகளுக்கு துணை புரியும் தமிழ் சக்திகளுக்கும் புறிய வைக்க முடியும்

    Mohammed Hiraz

    மே 26, 2012 at 10:30 முப

  4. அப்படி என்றால் முஸ்லிம் இடங்களில் உள்ள பன்சாளைகளை அகற்ற நாங்களும் முன் வருவோம்….

    Zuhair Ali

    மே 26, 2012 at 12:03 பிப

  5. எங்கள் பகுதியிலும் பிறைந்துரைச்சேனை வாழைச்சேனை என்னும் நூறு வீத முஸ்லிம்களை கொண்டுள்ள பிரதெசத்தில் பாசிக்குடாவைப் பார்க்கவரும் சிங்களவர்களுக்காக என்று ஒரு பன்சலையை அண்மையில் கட்டியுள்ளனர். இதை இங்குள்ள முஸ்லிம்கள் மத சகிப்புத்தன்மையுடன் அனுமதித்துள்ளனர்.

    ஜெமீல் - ஓட்டமாவடி

    மே 27, 2012 at 8:35 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: