Lankamuslim.org

மன்னார் விடத்தல்தீவு முஸ்லிம்கள் காணிகளை ஆக்கிரமிக் கின்றனராம்

with 2 comments

ஏ.அப்துல்லாஹ் :  மன்னார் மாந்தை மேற்கு பிரிவைச் சேர்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள் அரச அங்கீகாரமின்றி மன்னார் கிராமத்திலுள்ள காணிகளை தமது சொந்தப் பாவனைக்கெனக் கூறி ஆக்கிரமிக்கின்றனர் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று நானாட்டான் அச்சன் குளத்திலும் காணி ஆக்கிரமிப்பு இடம்பெறுகிறது. மன்னாரில் இடம்பெறும் அடாவடித்தன சக்திகள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுத எனக்கு பூரண உரிமை உண்டு.

இதேவேளை விடத்தல் தீவைச் சேர்ந்த 470 தமிழ்க் குடும்பங்கள் அரச காணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாந்தை மேற்கு கிராமசேவகரிடம் முறையாக விண்ணப்பித்துள்ளன.இந்த விண்ணப்பங்கள் இன்னம் பசீலிக்கப்படாமல் மாந்தை பிரதேச செயலாளர் அலுவலக்தில் கிடக்கின்றன.

மேற்கண்டவாறே நான் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். அரசாங்க காணிகளைப் பெற்றுக்கொள்வதில் ஒரு வழிமுறை இருக்கின்றது. அதை பின்பற்ற வேண்டும். விடத்தல்தீவில் 470 தமிழ் குடும்பங்கள் காணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் முஸ்லிம் குடும்பங்கள் அடாவடித்தன அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அரசகாணிகளை ஆக்கிரமிக்கலாமா?

மன்னார் மாவட்டத்தில் அடாவடித்தனமாக அரசாங்க காணிகளை ஆக்கிரமிப்பதையே நான் எதிர்க்கின்றேன். முஸ்லிம்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதை நான் எதிர்க்கவில்லை. முஸ்லிம்கள் வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவனும் நானே என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார் .

புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப் பட்ட வடக்கு முஸ்லிம் சமூகம் ௨௦ ஆண்டுகளின் பின்னர் மீள் குடியேறி வருகின்றனர். வெளியேற்றப் பட்ட முஸ்லிம் சமூககத்தின் குடும்பங்கள் பல குடும்பங்களாக வளர்ந்துள்ள நிலையில் மீள் குடியேறும் முஸ்லிம் குடும்பங்கள் காணி பிரச்சினைகளை பலமாக எதிர்கொண்டு வருகிறார்கள்.

யாழ்பாணத்தில் மீள் குடியேற காணிகள் இல்லாமையால் அங்கு மீள் குடியேற்றம் பெரும்பாலும் தோல்வி கண்டு வரும் ஆபத்தான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது .

இது தொடர்பான முந்திய செய்தி :

தம்புள்ள பிக்கு போன்றே மன்னார் ஆயரும் இனவாதத்துடன் நடக்கிறார்

Advertisements

Written by lankamuslim

மே 13, 2012 இல் 3:01 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. சமய தலைவர்கள் பொறுப்புடன் செயல் பட்டு நல்லுறவை வளர்க்க பாடுபடவேண்டும்

  ishark

  மே 13, 2012 at 10:05 பிப

 2. விடத்தல்திவு ,பெரியமடு ,காக்கயன்குலம் ,அடம்பன் போன்ற சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு மத்தியில் சன்னார் என்ற இடம் அமைந்துள்ளது .இந்த சன்னார் என்ற பெயர் அங்கு உள்ள சன்னார் குளத்தினால் ஏற்பட்டதாகும் .சன்னாரிலே குளத்தை சூழவுள்ள வயல்/விவசாய நிலங்கள் அனைத்துமே விடத்தல்தீவு முஸ்லிம்களுக்கு சொந்தமானதாகும் முன்னர் அங்கு எந்த ஒரு கிருஸ்தவ குடும்பமும் இருக்கவில்லை .அனால் யுத்தத்திற்கு பின்னர் மன்னார் ஆயர் எதேர்சதிகாரமாக பிற்படுத்தப்பட்ட இந்து மக்களை காணி வீடு கொடுத்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி சன்னார் பிரதேசத்தில் உள்ள அரச காணிகளில் குடியேறியுள்ளதுடன் அவ்வாறு சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டுள்ளவர்களுக்கு ஆயரால் உறுதிப்படுத்தப்பட்ட காணி உறுதிகளும் வழங்கியுள்ளார் இவ்வாறு அந்த பிரதேசத்துடன் சம்பந்தமே இல்லாத மக்களுக்கு முஸ்லிம் மக்களின் பிரதேசத்திற்கு மத்தியில் குடியேற்றுவதற்கும் காணி உறுது வழங்குவதற்கும் என்ன அறிகாரம் இருக்கின்றது .அதுமட்டுமல்லாமல் அவரின் அண்மைய கூற்றின் படி விடத்தல்தீவு முஸ்லிம்கள் காணிகளை ஆக்கிரமிக்கின்றனராம் அத்துடன் விடத்தல்தீவு கிறிஸ்தவர்களுக்கு காணி இல்லையாம் .அப்படியானால் மன்னார் நகரத்துக்கு அண்மையில் அமைத்துள்ள தோட்டவெளி என்ற இடத்திலே வீடு உட்பட அனைத்து வசதிகளுடனும் விடத்தல்தீவு கிறிஸ்தவர்களை குடியேற்றப்பட்டுள்ளார்கள் இதனை எங்கு சேர்ப்பது . விடத்தல்தீவில் போதியளவு காணி இல்லாத காரணத்தால் விடத்தல்தீவு தமிழ், முஸ்லிம் மக்களின் இணக்கப்பாட்டுடன்,பிரதேச செயலாளர் ஊடாக முறையாக விண்ணப்பித்து, பிரதேச செயலாளர் ,அரசாங்க அதிபர் ,வடமாகாண ஆளுனர் ,மற்றும் காணி அமைச்சர் ஆகியோரின் அனுமதியுடன் ஆயரால் மதம் மாற்றுவதற்காக வழங்கப்பட்ட காணிகள் போக மீதமுள்ள காணிகளில் விடத்தல்தீவு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சமஅளவில் பிரிக்கப்பட்டுள்ளது .இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில்தான் முஸ்லிம்கள் குடியேறுகின்றனர் அதேவேளை விடத்தல்தீவு தமிழ் மக்களுக்கும் காணிகள் ஒதுக்கப்பள்ளது ஆனால் விடத்தல்தீவு தமிழ் மக்கள் மன்னார் நகரத்துக்கு அண்மையில் தொட்டவேளியிலே வசதியாக வாழ்வதால் அவர்கள் சன்னார் பிரதேசத்தில் குடியேற விரும்பவில்லை. இது இவ்வாறு இருக்க 1980 க்கு முன்னரே அரசினால் இக்காணிகள் முஸ்லிம் மக்களுக்கு கொடுக்கப்பட்டவைதான் அதற்கான ஆதாரங்கள் சிலரிடம் பேர்மிட்கள் உள்ளது பெரும்பாலானவர்களின் காணிஉறுதிகள் புலிகளால் பறிக்கப்பட்டு உடுத்திய உடையுடன்தான் பலவந்தமாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.அத்துடன் அவற்றிற்கான பதிவுகள் அனைத்தும் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு பல நியாயமான காரணங்களுக்காக முஸ்லிம்களுக்கு காணி கொடுத்தால் அது தொடர்பாக கேள்வி கேட்பதற்கு இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது .கிறிஸ்தவ ஆயர் என்றால் என்ன மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்ற என்னமா ?
  மன்னார் மாவட்ட ஆயரே நீங்கள் உங்கள் கையால் எத்தனையோ ஏக்கர் அரச காணிகளை மதமாற்றத்திற்காக கையாடல் செய்துள்ளீர்கள் முஸ்லிம்கள் உங்களுக்கு ஏதாவது சொன்னார்களா? முஸ்லிம்களுக்கு காணி கொடுத்தால் மட்டும் ஏன் கோவம் பொத்துக்கொண்டு வருகிறது .என்ன மன்னார் மாவட்ட அரச காணிகள் எல்லாம் உங்கள் அப்பன் வீட்டு சொத்தா ? இல்லை கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே சொந்தமானதா முஸ்லிம்களுக்கு அதில் பெரு துளியேனும் கொடுக்கக்கஊடாது ,முஸ்லிம்களை மீண்டும் மன்னாரில் மீளகுடியேற விடக்ஊடாது என்பதுதானே உங்கள் ஆசை .முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்வதை உங்களால் இனி தடுக்கவே முடியாது .மன்னார் மாவட்ட ஆயரே தொடர்தும் நீங்கள் முஸ்லிம்களுடன் பகை பாராட்டி புனித போதனைகளுக்கு மாறாக காணி வளவு என்று சண்டை பிடித்துக்கொண்டிருந்தால் முஸ்லிம்களாகிய நாங்கள் வத்திக்கானுக்கு உங்களை பற்றி முறையிட வேண்டி வரும் .
  ஏக இறைவன் உங்களை நல்வளிப்படுத்த்வானாக .. ஆமேன்.

  Muslimwin

  மே 14, 2012 at 4:26 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: