Lankamuslim.org

One World One Ummah

தலைமைத்துவ பயிற்சி: முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப் படுமா ?

leave a comment »

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான இரண்டாவது தலைமைத்துவ பயிற்சி எதிர்வரும் – மே மாதம்- 27ஆம் திகதி ஆரம்பமாவதாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி. ஜி. ஜயசிங்க நேற்றுத் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் முதற்கட்டமாக பத்தாயிரம் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப் படவுள்ளனர்.

 இப்பயிற்சி நெறிக்குத் தெரிவு செய்யப் பட்டிருக்கும் மாணவர்கள் மே மாதம் 27 ஆம் திகதி மாலை 6.00 மணிக் குள் தங்களது பயிற்சி நிலையங்களுக்கு வருகை தரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இந்த முறை நிறைவேற்றப் படுமா ?

கடந்த ஆண்டு 2011 முதல் தடவையாக இராணுவ முகாம்களில் மாணவ, மாணவியருக்கு தலைமைத்துவ பயிற்சி நெறி ஆரம்பித்த போது, முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு நேரடியாக சவாலாக ஆண் பெண் கலந்த உடல் பயிற்சி , முஸ்லிம் பெண்களின் உடை , வதிவிடம் , ஐந்து வேலை தொழுகை , ஜும்மாஹ் தொழுகை, ஹலால் உணவு என்பன முஸ்லிம் மாணவ மாணவியரை பெரிதும் பாதிக்கும் பிரச்சினையாக இனம் காணப்பட்டது. அதேவளை பொதுவில் மாணவர்களுக்காக தலைமைத்துவ பயிற்சி நெறி இராணுவ முகாம்களின் நடாத்தப்படுவது பொதுவான அனைத்து மாணவ, மாணவர்களுக்குமான பிரச்சினையாக சுட்டிகாட்டபட்டது. இவற்றில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு சாதகமான தீர்வுக்கான  போக்கை  உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வெளிப்படுத்தினார்.

அவற்றில் பல வற்றுக்கு உடனடியாக தீர்வுக்கான ஏற்பாடுகளை செய்த உயர் கல்வி அமைச்சர் ஆண்களும் பெண்களுக்கும் வேறுவேறு முகாம்களில் பயிற்சிகளை ஏற்பாடு செய்யுமாறு வேண்டியபோது ”இந்த பிரச்சினைகள் என்னிடம் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தால் ஆண்களும் பெண்களுக்கும் வேறுவேறு முகாம்களில் பயிற்சிகளை ஏற்பாடு செய்திருப்பேன் அடுத்தவருடன் ஆண்களும் பெண்களுக்கும் வேறுவேறாக பயிற்சி நெறியை ஏற்பாடு செய்தால் உங்களுக்கு சரிதானே” என்று அமைச்சரை சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகளிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் கூட்டம் ஒன்றில் பேசிய உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கான அடுத்த தலைமைத்துவ பயிற்சிக்கு முன் முஸ்லிம் மாணவிகளுக்காக பிரத்தியேக தங்குமிடவசதி ஏற்பாடு செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத் தக்கது .

தலைமைத்துவ பயிற்சி தொடர்பான எமது முந்திய செய்திகள்:

1.முஸ்லிம் மாணவிகளுக்காக பிரத்தியேக தங்குமிடவசதி: உயர் கல்வி அமைச்சர்
2.தலைமைத்துவப் பயிற்சிநெறி: சில அவதானங்களும் அடுத்த கட்ட நகர்வும்
3.முஸ்லிம் மாணவ மாணவியர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதா ?: பொறியலாளர் நிஷாத் பதில்
4.பல்கலைக்கழக தலைமைத்துவ பயிற்சி மேலும் அவதானம் தேவை
5.மாணவியருக்கு பெற்றோர் வெள்ளை நிற ஹிஜாப் கருப்பு நிற அபாயா எடுத்து செல்லவும்
6.மாணவர்கள் நேற்று இராணுவ முகாமில் ஜும்மாஹ் நடாத்தினர்
7.முஸ்லிம் மாணவர் தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக அணுகப்படும் ?
8.முஸ்லிம் பல்கலை கழக மாணவர்கள் குற்றச்சாட்டு
9.தலைமைத்துவ பயிற்சியில் முஸ்லிம்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் இல்லை:ஹிஸ்புல்லாஹ்
10.‘படை முகாம்களில் வதிவிட பயிற்சி; முஸ்லிம் மாணவிகளுக்கு பிரச்சினை’

10

Advertisements

Written by lankamuslim

மே 10, 2012 இல் 12:04 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: