Lankamuslim.org

One World One Ummah

எல்லா சிங்களவர்களும் இனவாதிகளா???! இஸ்லாத்தின் நீதி என்ன?

leave a comment »

அஷ்ஷெய்க் அfபான்  அக்பர் (நளீமி)
எங்காவது முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அநீதி இழைத்த சமூகத்தின் அனைத்து அங்கத்தவர்களையும் இனவாதிகளாக்கும் ஒரு அநீதி எமது சமூகத்தில் இருக்கின்றது, இஸ்லாத்துக்கு இடர் வரும் போது ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் வருகின்ற கவலை அவனது ஈமானின் வெளிப்பாடாகும், ஆனால் அந்தக் கவலையானது அவனை நீதியான சிந்தனையை விட்டும் திசைதிருப்பி விடக்கூடாதல்லவா?! நீதி என்பது இஸ்லாத்தின் உயிர்நாடி, அந்த நீதி எமது சிந்தனையிலும் இருக்க வேண்டும், தப்பு செய்யாதவனை சந்தேகப்படுவது அநீதியாகும், ஏனெனில் சந்தேகம் மிகப்பெரும் பொய் என்று நபியவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்களவர்கள் மிகவும் நல்லவர்கள். மோசமானவர்கள் எல்லா சமூகங்களிலும் இருக்கின்றார்கள். ஏன் முஸ்லிம்களுக்கு மத்தியில் அப்படியானவர்கள் இல்லையா?! ஒருவன் செய்த தவறுக்கான பழியை அவன் சார்ந்த சமூகத்தின் மீது போடுவது அல்லாஹ்வின் பார்வையில் மிகப்பெரும் அநீதியாகும்.

எம்மை அல்லாஹ் மனிதர்களுக்கு சான்று பகரும் சமூகமகாவே இவ்வுலகுக்கு அனுப்பி வைத்துள்ளான், தீர்ப்பு வழங்கும் சமூகமாகவல்ல என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும், எமது வார்த்தைகளால் மட்டுமல்ல எமது வாழ்க்கையால் இஸ்லாத்துக்கு சான்று பகர்பவர்களாக நாம் மாறினால் இந்த நாட்டிலிருக்கும் துவேஷம் கக்கும் இனவாதிகள் கூட இஸ்லாத்துக்கு முன் மண்டியிடும் நாளொன்று வரும்.

அண்மையில் The Buddist TV யில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போது குறித்த நிகழ்ச்சியை நடாத்திக் கொண்டிருந்த பௌத்த பிக்கு இப்படிச் சொன்னார்… ‘இன்று பௌத்த மதம் உலகளவில் மாபெரும் மதமாக வளர்ந்து வருகின்றது, இன்று அனைவரும் புத்தரின் போதனைகள் பற்றியே பேசுகின்றனர், ஆனால் இந்த வளர்ச்சியை விரும்பாத சிலர் பௌத்தத்தின் புனிதத்தை நாசமாக்க வருகின்றனர்…’

இதை விடப் பெரிய பொய்யொன்றை வேறெந்த பௌத்த பிக்குவாலும் சொல்ல முடியாது, இன்றைய உலகில் உண்மையில் பௌத்தம் அருகி வரும் ஒரு மதமாகவே நோக்கப்படுகின்றது, இலங்கை முஸ்லிம்களின் பெருமை நிறைந்த வரலாறும் அந்த வரலாற்றுப் பாரம்பரியத்தினால் நாம் இந்த நாட்டில் பெற்றுக்கொண்ட சலுகைகளும் சிலவேளை இவரை இப்படிப் பேச வைத்திருக்கலாம்… இலங்கை நாடு யாருக்;காவது செஞ்சோற்றுக் கடன் கழிக்க வேண்டுமாயிருந்தால் அது நிச்சயம் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குத் தான். அந்தளவுக்கு நாம் இந்த நாட்டுக்கும் இந்த நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களுக்கும் விசுவாசத்துடன் நடந்திருக்கின்றோம். இந்த நாட்டை காட்டிக் கொடுக்காமல் இங்கு வாழும் ஒரு சமூகம் இருக்குமென்றால் ஆட்சிக்கெதிராக ஆயுதம் தூக்காத ஒரு சமூகம் இருக்குமென்றால் அது நிச்சயம் இலங்கை முஸ்லிம் சமூகம் தான். ஆனால் வெறுமனே பழம் பெருமை பேசி என்ன பயன்?

சொல்லாதீர் முன்னோரின் பெருமை மட்டும்

செயலற்ற சொற்களில் நான் சலித்து விட்டேன்

நல்லதொரு வழிசொல்லி எனை அழைத்தால்

துள்ளுவேன் இளைஞன் நான் இரத்தம் சிந்த!

என்ற மர்ஹூம் தாஸீன் நத்வியின் கவி வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகின்றன…

அந்தப் பெருமை மிகுந்த வரலாற்றை அல்லாஹ்வின் தீனின் எழுச்சிக்காகவல்லவா பயன்படுத்த வேண்டும்?! நூற்றுக்கு நூறு வீதம் அசத்தியத்திலிருந்து கொண்டு ஒரு மதகுருவால் இப்படிப் பேச முடியுமாக இருந்தால் நூற்றுக்கு நூறு வீதம் சத்தியத்தை சுமந்திருக்கும் நாம் அந்த சத்தியத்தை எந்தெந்த வழிகளிளெல்லாம் முன்வைக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்?? ஆனால் அந்தப் பணியை ஒரு பக்கம் ஓரத்தில் வைத்து விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் மறுக்கப்பட்ட சில உரிமைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் வீதிக்கிறங்குகின்ற அவல நிலை இறுதித் தூதரின் சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது.

துவேஷம், இனவெறி, மதபேதம் என்பன இல்லாமல் இல்லை… ஆனால் அவற்றை இந்த பூமியிலிருந்து துடைத்தெறிய இஸ்லாத்தைத் தவிர வேறு எதனால் முடியும்? அல்லாஹ்வின் மார்க்கத்தை எமக்கு மட்டுமான மார்க்கமாக எமது சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளும் அதிகாரத்தை எமக்கு யார் தந்தது?

இந்த நாட்டில் நடக்கும் அனைத்து உரிமை மீறல்களும் இனவாத செயற்பாடுகளும் உணர்த்துவது ஒன்றைத்தான்: அது தான் நாம் தஃவாவை இன்னும் சரியாகத் தொடங்கவில்லை என்பதாகும். ஜோர்ஜ் பேர்னாட் ஷோ சொன்னது போல ‘இஸ்லாம் என்ற பூஞ்சோலையைச் சுற்றி முஸ்லிம்கள் முள்வேலியாக இருக்கின்றார்கள்’ ஆம் எமது பண்பாட்டிலும் நடத்தையிலும் ஏற்பட்ட கோளாறுகள் எமக்கெதிராக எமது அயல் சமூகங்களை திருப்பியுள்ளன. மௌலானா அபுல் ஹஸன் நத்வி சொன்னது போல இலங்கையில் தஃவாவுக்கான அனைத்து வாசல்களும் மூடப்பட்டாலும் யாராலும் மூட முடியாத ஒரு வாசல் இருக்கின்றது, அதுதான் பண்பாடுகள் என்ற வாசலாகும். இன்று யாராலும் மூட முடியாத அந்த வாசலை நாமே மூடி வைத்திருக்கின்றோம்…. விளைவு??? எத்திவைத்தல் என்ற பணியொன்று எமக்காக உள்ளது, அந்தப்பணியை செய்வோம் வெறும் வார்த்தைகளால் அல்ல எமது வாழ்க்கையால் இன்ஷா அல்லாஹ்.

துவேஷம், இனவெறி என்ற கோஷங்களுக்கப்பால் இந்தப் புள்ளியில் சற்று நின்று நிதானித்து சிந்திப்போமா?!

Advertisements

Written by lankamuslim

மே 9, 2012 இல் 9:17 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: