Lankamuslim.org

மஸ்ஜித் அவ்விடத்திலேயே இருக்கவேண்டும் என்ற தீர்மானத்தில் மாற்றம் இல்லை

with 12 comments

பள்ளிவாசல் அவ்விடத்திலேயே இருக்கவேண்டும் என்ற அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப் படவில்லை என்று அதன் உப செயலாளர் தாசீம் மௌலவி தெரிவித்தார் .

தம்புள்ளை விவகாரத்தில் பள்ளிவாசல் அவ்விடத்திலேயே இருக்கவேண்டும். என்ற முடிவானது உலமாக்கள் , முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள், இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் முன்னிலையில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.

அன்மையில் ஜம்இயதுல் உலமாவின் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது தற்போது இருப்பது போன்று பள்ளிவாசல் அவ்விடத்திலேயே இருக்கவேண்டும் என்ற முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை தெரிவித்ததாகவும் அதற்கு ஜனாதிபதி மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் சமமான உரிமை உண்டு என்று தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

Advertisements

Written by lankamuslim

மே 8, 2012 இல் 11:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

12 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. நம்புவோமாக!

  INUDEEN

  மே 9, 2012 at 12:26 முப

 2. இதை சொல்ல இவ்வளவு நாட்கள் தேவையா?ரியாத்தில் ஜமியத்துல் உலமா தலைவரின் கருத்துரைகள் மக்கள் மனதில் கலக்கத்தையும், குழப்பத்தையும் உருவாக்கியுள்ளன…பள்ளி அங்கேதான் இருக்கவேண்டும் என்பதில் முஸ்லிம்களிடம் மாற்று கருத்துக்கள் கிடையாது…ஜனாதிபதி அவர்களின் மௌனம் சம்மதம் என்ற உண்மை நிலை நிறுத்தப்பட வேண்டும்…

  Ibrahim Nihrir

  மே 9, 2012 at 1:32 முப

  • Brother Why are you getting tension? wait little, now Vesak days, Hoope we have a good news from our president.

   Mohammed

   மே 9, 2012 at 8:58 முப

  • உண்மை நிலை சொல்ல எவ்வளவு நாட்கள் தேவை??
   நீங்களும் முஸ்லிம் சமூகத்துக்காக இணைந்து கொள்ளுங்கள்.

   nusky zahri

   மே 9, 2012 at 6:44 பிப

 3. அரசியல் கட்சியின் தலைவர்.ரவூப் ஹக்கீம் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்து சமூகத்தில் குழப்ப நிலையினை ஏற்படுத்தியுள்ளது.பிரதி அமைச்சர ஹிஸ்புள்ளா அவர்கள் சொன்ன கருத்துக்கு ஊடகங்கள் மூலம் கண்டன அறிக்கை வந்தது.கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்களின் கருத்துக்கு இதுவரைக்கும் அ.இ.ஜ.உ,மு.கவுன்சில் கண்டனம் தெரிவிக்கவில்லை நியாயம் எல்லோருக்கும் பொதுவானது..பள்ளிவாசல் என்பது குப்பையா-அல்லாஹ்வின் இல்லம்என்பதை ஹக்கீமுக்கு தெரியாதா ?இவர் எப்படி முஸ்லிம் கட்சியின் தலைவராக இருக்க முடியாது .இன்று கொழும்பில் கூடும் மு.கா கட்சி கூட்டத்தில் இவரை அப்பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும்…..

  fasmy

  மே 9, 2012 at 9:13 முப

  • .இன்று கொழும்பில் கூடும் மு.கா கட்சி கூட்டத்தில் இவரை அப்பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் கொண்டுவரப்படும்….உ மக்கு. ஊடகங்கள் மூலம் கண்டன அறிக்கை வரும்…………… கவனம்0000000000000000000000000000000

   anfas

   மே 9, 2012 at 7:04 பிப

 4. தம்புள்ள விவகாரத்தை திசை மாற்ற அரசு எடு்ககும் மற்றுமொரு சதி தான் இஸ்ரேல்…துாதரக அமைப்பு ,பொருத்தது போதும் அரபு நாடுகளின் உதவியை பெற வேண்டிய நேரமிது அமைச்சர்களான பவுசி,றிசாத் பதுருதீன்,ஆளுநர் மௌலானா,பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா,முஸ்லிம் எம்.பிக்களே புறப்படுங்கள்..மாகாண சபை உறுப்பினர் முஸிபுர் ரஹ்மான் நீங்களும் முஸ்லிம் சமூகத்துக்காக இணைந்து கொள்ளுங்கள்.

  cader

  மே 9, 2012 at 9:20 முப

 5. நிச்சயமாக ஜனாதிபதி அவர்களின் திரிசங்கு நிலையை எங்களால் ஊகிக்க முடியும். அவர் கூழுக்கும் ஆசைப்படுகின்றார். அதே வேளை மீசைக்கும் ஆசைப்படுகின்றார். ஆனாலும் அவர் ஒரு பௌத்த மகனாக இருந்தாலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அனைத்து இன மக்களில் பெரும்பான்மையானோரின் அபிமானத்தையும் வென்றுள்ள ஜனாதிபதி என்ற வகையில் தற்போதைய நாட்டின் அரசியல் சாசனத்தின் படி அவரினால் தீர்க்கமான முடிவினை எடுத்துவிட முயும். அவர் கூறுபவற்றை பிக்குகள் மறுக்க மாட்டார்கள். சரத் பொன்சேகா விடயத்தில் கூட பிக்குகள் அவர்களது எதிர்ப்பினை நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிவித்திருந்தாலும் ஜனாதிபதிக்காக இந்த பிக்குகளும் பிக்குணிகளும் பேசாமடந்தைகளாக இருந்தனர் என்பது தான் உண்மை. இவ்வேளை அவர் பௌத்தராக அல்ல நாட்டின் தலைவராக உடனடியாக ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும். வந்தேயாக வேண்டும். இனவாதிகளுக்கு தலைவணங்க அவரால் முடியுமா?

  இது அவருக்கு விஷப் பரீட்சையாக இருந்தாலும் ஒரு கணம் சேர் ஜோன் கொத்தலாவலையின் பாத்திரத்தையும் ஏற்று இந்த பிக்குமாரின் கொட்டத்தை அடக்க வேண்டும். இல்லாவிடில் இவரால் ஆட்சி நடாத்த முடியாத ஒரு தர்ம சங்கடம் அவருக்கு பின்னரும் ஏற்படலாம். அவரது தொடா்ச்சியான மௌனம் இனங்களுக்கிடையில் பல்வேறு அசாதாரண சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கும் என்பதனைக் கூற அவசியமில்லை. அரசியல் சாசனத்தின் 9, 10, 14 (1) e, மற்றும் 15 ஆகிய ஷரத்துகளில் மத சுதந்திரம் தொடர்பாக கூறப்பட்டுள்ள ஆணைகளின் பிரகாரம் எமது உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும். ஆகவே ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஏகோபித்த முடிவான பள்ளிவாயல் இருந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. இதனையே ஜம்இயத்துல் உலமாவும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பிரதிபலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

  Ossan Salam - Doha

  மே 9, 2012 at 10:14 முப

 6. “தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளமையால் அது பற்றி நான் பேசமாட்டேன்.” என்று கூறியுள்ளது கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் வேட்பாளர் முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்க வேண்டும் என்பதலா ? தம்புள்ளையில் மஸ்ஜித் தாக்கப்பட்டு , ஜும்ஆ தொழுகை குழப்பப் பட்டு முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அடிப்படை மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளது , மூன்று மாதங்களில் அல்லது ஆறு மாதங்களில் மஸ்ஜித் அகற்றப் படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னு வரை எந்த முடிவும் வெளிவரவில்லை தற்போது சிலரின் கதைகளை பார்க்கும்போது ஜமியதுல் உலமாவும் தனித்துவத்தை இழந்து அரசியல்வாதிகள் போடும் தாளத்திற்கு ஏற்ப செயல் பட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது – அகில இலங்கை ஜமியதுல் உலமா பலப்படுதப்படவேண்டும் தனித்துவமாக முஸ்லிம் சமூகத்தின் குரலாக எந்த கட்டத்திலும் செயல்படும் திராணியை வளர்துக்க் கொள்ளவேண்டும் அதற்காக அல்லாஹ்விடம் கை ஏந்துவோம்

  Truth finder

  மே 9, 2012 at 10:38 முப

 7. என்னை பொறுத்தவரை குறித்த இஸ்லாமிய நிறுவங்கள் தனித்துவத்துடன் அரசியல்வாதிகளின் தாளத்திற்கு ஏற்ப செயல்படாமல் எந்த கட்டத்திலும் செயலபடும் ஆற்றல் கொண்டுள்ளது அப்படியான இஸ்லாமிய அமைப்புகள் ACJU வை பலப்படுத்தி பாதுகாக்க வேண்டும்

  Abdul Rasheed

  மே 9, 2012 at 10:47 முப

 8. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க். ரிஸ்வி முப்தி அவர்கள் ரியாத் நகரிலுள்ள டுளிப்இன் ஹோட்டலில் ஆற்றிய உரையினை நேரடியாக கேட்டவன் என்ற வகையில்;,
  அவர்கள் ஆற்றிய உரை எவ்விதமான குழப்ப நிலையையும் ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை…மாறாக நாட்டிலுள்ள சமகால பிரச்சினைகள், அவற்றை தீர்ப்பதில் ஜம்இய்யதுல் உலமா எடுக்கும் காத்திரமான முயற்சிகளை தெளிவுபடுத்தினார்…
  தம்புள்ளை பள்ளிவாயில் பிரச்சினையை பொறுத்தளவில், பெரும்பான்மை சமூகத்தின் தீவிர சிந்தனைகொண்டவர்களின் மத்தியில் எமது சமூகம் சார்பாக பேசும் போது ஏற்படும் சிக்கல்களையும், அதற்கான தீர்வுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பதையும் பற்றி விளங்கப்படுத்தினார்
  அத்தோடு ஜனாதிபதியுடனும் ஆளும் தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதின் பிற்பாடு, சுமூகமான பதிலை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருப்பதையும் அதற்காக பிரார்த்திக்கும்படியும் குறிப்பிட்டார்…
  மட்டுமன்றி, நாட்டில், விஷேடமாக எமது சமூகத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் ஏராளமாக இருப்பதாகவும் அவற்றை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க முயற்சிப்பதாகவும் என்ற வகையில் தெளிவுபடுத்தினார்.
  அதோடு இலங்கை முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ் தஆலா எமக்கு அளித்துள்ள அருள்களை புரிந்து, அவற்றை எமது மக்களுக்காகவும் இந்த மார்க்கத்துக்காகவும் வழங்கும் வகையில் ஒத்துழைப்புக்களை தரவேண்டும் என்று குறிப்பிட்டார்
  எமது நாட்டில் எமது மக்கள் பாடசாலை செல்லாமல், அறிவில் பின்தங்கி இருப்பதற்கு காரணமாக அமைந்துள்ள வறுமை நிலைப்பற்றியும் இது போன்று சமூகம் முகம்கொடுத்துக்கொண்டிருக்கின்ற பிரச்சினைகளைப் பற்றி ஞாபகப்படுத்தினார்
  அத்தோடு, சகல அமைப்புக்களினதும் இயக்கங்களினதும் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து, அறிவாற்றலுடனும் நிதானத்துடனும் சமூகத்துக்கெதிராக வரும் பிரச்சினைகளை ஜம்இய்யதுல் உலமா தீர்க்க கடுமையாக முயற்சிப்பதை விளக்கினார்…
  எனவே, வெறுமனே பத்திரிகைகளில் அல்லது ஊடகங்களில் வருகின்ற செய்திகளை வைத்துக்கொண்டு கருத்துக்களை முடிவுகளாக வெளியிடாமல், தீர விசாரித்து கருத்துக்களை வெளியிடுவது எமது ஈமானுக்கும் எமது சமூகத்தின் பாதுகாப்பிற்கும் உதவியாக இருக்கும்….பொறுப்புக்களில் இருப்பவர்கள்: நாமாக இருப்பினும், அவசரமாக கருத்துக்களையும் முடிவுகளையும் வெளியிடுவதில் நிதானத்தைப் பேணுவோம், இல்லையா…..(ஸ_ரதுல் ஹ_ஜூராத்: வசனம்-06)

  farraj

  மே 9, 2012 at 1:12 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: