Lankamuslim.org

மிக விரைவில் ஒரு திருப்திகரமான தீர்வு கிட்டும்: சவூதியில் றிஸ்வி முப்தி

with 5 comments

தம்புள்ளை மஸ்ஜித் விவகாரத்தில் அரசாங்கத்தின் முன்முயற்சியால் மிக விரைவில் ஒரு திருப்திகரமான தீர்வு கிட்டும் என்று தாம் உறுதியாக நம்புவதாக சவூதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார். என்று அரப்நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை றியாத் நகரில் இலங்கை முஸ்லிம்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்துள்ளார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பு செயலாளர் அப்துல் காதர் அல் மஷுர் மௌலானாவும் கலந்துகொண்டுள்ளார் .

இப்பிரச்சினையை பாதிக்கப்பட்ட தரப்பினரினது விட்டுகொடுப்பு மற்றும் சகிப்புத்தன்மை மூலம் சுமூகமாக இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காகவும் முஸ்லிம்களின் சுபிச்சமான இருப்புக்காகவும் துவாவில் ஈடுபடுவது எமது கடமை என றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார் .

குறித்த சம்பவத்தினையடுத்து பாதுகாப்பு தரப்பினரினால் பள்ளிவாசல் சீல் வைக்கப்பட்டது. எனினும் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரின் முயற்சியினை பலனாக மறுநாள் குறித்த பள்ளிவாசல் மீள்திறக்கப்பட்டது எனவும் அடுத்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையும் எந்தவித இடையூறுமின்றி இடம்பெற்றது அவர் தெரிவித்துள்ளார் .

அதேவேளை அவர் தெரிவித்துள்ள தகவலில் ,இதற்கு முன்னர், நகர அபிவிருத்தி திட்டங்கள் சிலவற்றுக்காக கண்டி நகரிலுள்ள லைன் பள்ளிவாசலை உடைப்பதற்கு கண்டி மாவட்ட முஸ்லிம்கள் அனுமதி வழங்கினர். இதேபோன்று, நிமல் வீதி பள்ளிவாசலுக்கு அருகில் நெருஞ்சாலை நிர்மாணத்துக்கு இடமளிப்பதற்காக, பள்ளிவாசலுக்கு ஒதுக்கப்பட்ட காணியிலிருந்து வெகு தூரத்தில் பள்ளிவாசலை நிர்மாணித்தோம் என அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி மேலும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் இலங்கையில் இனப் பிரச்சினை முடிவுக்கு – யுத்தம் -வந்ததை தொடர்ந்து எங்கள் நாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனைத்து இலங்கையரும் எந்த பாகுபாடும் இன்றி சமமாக நடத்தப் படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார் .எந்த பாகுபாடும் இன்றி அனைத்து சமூகங்களையும் பார்க்கக் கூடிய எங்கள் நாட்டின் தலைவர்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .

ArabNews: Scholar urges Sri Lankan expats to stay calm over racial tensions back home

Advertisements

Written by lankamuslim

மே 7, 2012 இல் 8:44 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

5 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. please be leave Allah.Dont be leave this …….

  althaf

  மே 7, 2012 at 9:34 பிப

 2. முப்தி ஸாப், உங்கள் பேச்சை உன்னிப்பாகக் கவனித்தால் ஏதோ பள்ளிவாயலையம் இடமாற்றம் செய்யும் நோக்கம் தான் மேலிடத்துக்கு இருப்பது போல் தோன்றுகின்றது. சில இடங்களில் இருந்த பள்ளிவாயல்கள் தேவை கருதி உடைத்து வேறு இடஙகளுக்கு மாற்றஞ் செய்யப்பட்டுள்ளதாக கூறுவது ஏதோ தம்புள்ளைப் பள்ளிவாயலுக்கும் ஆப்பு வைக்கும் எண்ணத்திலா? அபபடியானால் இந்தச் சம்பவத்தின் பின்னர் அடுத்த வாரம் கண்டியில் இடம்பெற்ற குத்பாவில் ஏதோ நாடகமாடுபவர்கள் பற்றி எல்லாம் எச்சரித்தீர்கள்.. உண்மையில் இது நாடகம் தானா ? இல்லையா ? ஒரு தெளிவில்லாத முடிவில்லாத இந்த இழுபறி நிலைக்கு காரணம் என்ன ? எல்லோரும் சோடா போத்தலை கையிலெடுத்தக் கொண்டு ஹா ஹு என்றார்கள் ….இப்பொழுது என்ன சோடாவின் காஸ் இறங்கிவிட்டதோ? நாம் நினைக்கின்றோம் பிரதமரின் இல்லத்தில் வைத்து எடுக்கப்பட்ட முடிவினைத் தான் அமுல் நடாத்த நினைகின்றார்கள் போலும். அது தான் கசாயம் குடித்த ஊமைகளின் நிலையில் நம் தலைவர்கள் உளறுகின்றார்கள்.

  Ossan Salam - Doha

  மே 8, 2012 at 2:52 பிப

 3. முப்தி அல்லாஹ் உங்களுக்கு மேலான நிஃமதுகளை தந்துள்ளான் மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் தலைமைதுவதையும் கொடுதுள்ளான் இந்த வேளையில் ஒட்டு மொத்த ஸ்ரீலங்கா முஸ்லிம்களும் உங்கள் ஒவ்வொறு நடவடிக்கைகளையும் ஆவளுடன் கண்கானிது கொண்டிருக்கின்றனர் உங்கள் இதே நிதானம் சீரிய சிந்தனை தெளிந்த போக்கு என்ரென்றும் நிலைதிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம்களை சிறந்த முறையில் வழி நடத்த அல்லாஹ் உங்களை பாவிப்பாக

  Mohammed Hiraz

  மே 8, 2012 at 8:47 பிப

 4. Althaf, you are a moron to start with…why cant you write in your native language or go back to your village night school to learn to compose it…
  Now, ACJU is not a political party, and further, does not have any executive powers to implement or overule GoSL proceedings, yet ACJU could lobby through the relevant ministers to find a rightful solution. What Rizvi Mufthi meant in his speech was what had happened in the past in these circumstances, how wisdom has prevailed to co-exist. I am sure you are sitting somewhere in a muslim majority area, so you can ……. ACJU represents spiritual and social guidance to the mass, including muslims living in pockets in vulnerable surroundings in SL. You …………………………………………………………….. May Allah enhance Rizvi Mufthi’s wisdom in this difficult time for all the Muslims living in vulnerable surrounding..so keep your biased comments within the four walls sado…

  ukmoris

  மே 9, 2012 at 6:00 பிப

 5. அல்லாஹ் அறிந்தவன். நாமறியமாட்டோம்.

  தற்போது ஆட்சியாளர்களுக்கெதிரான நடவடிக்கைகள் ஐநாவில் உத்வேகம் பெற்றுள்ள நிலையிலும், நாட்டில் சில இடங்களில் தேர்தல் நடக்கவுள்ள நிலையிலும், காலங்கடந்து இப்பிரச்சினை தீர்க்கப்படவுள்ளதாகக் குறிப்பிடுவது பற்றி அல்லாஹ் மக்களுக்குத் தெளிவை ஏற்படுத்தி சரியான வழியில் நடத்த துஆ செய்வோம்!

  nizamhm1944

  மார்ச் 17, 2014 at 10:43 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: