Lankamuslim.org

அமைச்சர் ரவூப் ஹகீம் கூறியது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது

with 11 comments

அமைச்சர் ரவூப் ஹகீம் கூறியது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது அகில இலங்கை ஜம்இயதுல் உலமா : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், இலங்கையின் நீதி அமைச்சருமான ரவூப் ஹகீம் நேற்று முன்தினம்  மாலை கிண்ணியாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது “தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளமையால் அது பற்றி நான் பேசமாட்டேன்.

அந்தவிவகாரம் முடிந்த பிறகு குப்பையை கிளறுவதும் வீர வசனம் பேசுவதும் தேவையில்லாத விடயமாகும். இதற்கு மேல் தம்புள்ள பள்ளிவாசல் பற்றி பேசினால் என்ன நடக்கும் என்றும எல்லோருக்கும் தெரியும். சதிகாரர்களுக்கு எல்லாம் மிகைத்த சதிகாரன் ஒருவன் இருக்கும் போது நாங்கள் எதையும் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.

கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும். இதற்கு முன்னுதாரணமாக நடந்த பல சம்பவங்கள் அமைந்திருக்கின்றன. என்று கூறியதாக எமது செய்தியாளர்கள் செய்திகளை அனுப்பி இருந்தார்கள் இது தொடர்பாக அமைச்சரை நாம் தொடர்பு கொண்ட முயன்றும் உடனதியாக அவருடன் பேசமுடியவில்லை . இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் செயலாளரும் தம்புள்ள மஸ்ஜித் விவகாரங்களை கையாளும் நபருமான முபாரக் மௌலவியை தொடர்பு கொண்டு பேசியபோது

தாம் பசில் பசில் ராஜபக்ஷ வுடன் இது தொடர்பில் பேசியதாகவும் அவருக்கு நடந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ பதிவுகளை வழங்கியதாகவும் அதன் போது அமைச்சர் எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று ஏற்கனவே தெரிவித்திருந்ததை மீண்டும் தெரிவித்ததுடன்

ஜனாதிபதி ஜம்இயதுல் உலமாவை அழைத்து தம்புள்ள விவகாரத்தை தாம் கையாண்ட விதத்திற்கு நன்றி தெரிவித்ததாகவும் ஆனாலும் ஜனாதிபதி தம்புள்ள மஸ்ஜித் தொடர்பில் ஜம்இயதுல் உலமாவின் கருத்துக்களை வினவாதபோதும் அவருக்கும் வீடியோ பதிவுகளை வழங்கியதாகவும் . இன்னும் தீர்வு தொடர்பில் முடிவு எடுக்கப் படவில்லை என்றும் தெரிவித்ததுடன் அமைச்சர் ரவூப் ஹகீம் கூறியது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார் .

அதேவேளை தம்புள்ள மஸ்ஜித்-Dambulla Mosque- என்ற முகப்புநூல் பக்கம் -Facebook page- மகிந்தவின் தீர்ப்பு தம்புள்ள மஸ்ஜித்தைப் பாதிக்குமாயின் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் முற்றுகை இடப்படும். என்று தெரிவித்துள்ளது.

Advertisements

Written by lankamuslim

மே 7, 2012 இல் 8:07 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

11 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. karuthu puriya willai
  amakku thewa mudiwu

  ZAMEER

  மே 7, 2012 at 11:35 முப

 2. தம்புள்ள பள்ளிவாசலுக்கு என்ன தீர்வு கிட்டியுள்ளது? அமைசர் ரவுப் ஹகீம் என்ன பேசுகிறார்.எதை குப்பை என்கிறார்.
  அமைச்சரே உங்களால் முடியாவிட்டால் மௌனமாக இருங்கள்.உங்கள் ஓட்டுக்காக எம் சமுகத்தை ஈடு வைக்க வேண்டாம்.

  sahib

  மே 7, 2012 at 12:08 பிப

 3. lankamuslim.org publishied an article that ACJU met President, now ACJU said send vedio taypes…..It’s realy confusing

  Mohammed

  மே 7, 2012 at 12:45 பிப

 4. அமைச்சர் அவர்களே ! என்ன உளறுகின்றீர்கள் நமது பள்ளிவாயல் சம்பந்தமாக யாரோடு என்ன முடிவக்கு வந்துள்ளீர்கள். நீங்கள் வந்தீர்களா அல்லது வேறு யாரும் முடிவுக்கு வந்துள்ளார்களா ? அப்படி ஏதும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தால் பொது மக்களுக்கும் சற்று சொல்லுங்கள். அப்போது நாமும் இது குறித்த சர்ச்சைகளில் ஈடுபடாமல் இருக்கலாமே. முடிவினை பொது மக்களுக்குத் தெரிய அவசியமில்லை. அமைச்சர்கள் தெரிந்து கொண்டால் போதுமானது என்றிருந்தால் அதனையும் சொல்லுங்கள்.
  ஏன் ஜனாதிபதி இதனை வெளியே சொல்ல வேண்டாம் என்றாரா? அப்படியானால் நாமும் நீங்கள் எதனைக் குப்பை என்கின்றீர்களோ அதனைக் கிளறாமல் இருப்போம். இந்த விவகாரத்தில் ஏதாவது அரசியல் மர்மங்கள் இருக்கின்றனவா? அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்களையும் பௌத்தர்களையம் சீண்டிவிடும் நோக்கம் தான் என்ன ? இலங்கையின் அதிமுக்கிய அரசியல் தலைவர் ஒருவர் தமது சகல நடவடிக்கைளுக்கும் சாஸ்திரகாரர்களிடம் கையேந்தும் பழக்கமுடையவர் ஆதலால் அந்த சாஸ்திரகாரர்கள் இதுபோன்ற ஒரு இன மோதல் விடயததை உருவாக்கினால் அந்த தலைவரின் சகல நடவடிக்கைகளும் வெற்றிகரமாக அமையும் என்று சாஸ்திரகாரன் சொன்னானோ தெரியாது. அல்லது வேறு ஏதாவது பின்னணிகள் இதற்கு உண்டா? நமக்குத் தேவை முடிவு என்ன என்பது தான் ! காரணம் தம்புள்ளைப் பிரதேச மக்கள் பீதியுடன் தினமும் படையினரின் பாதுகாப்புடன் பள்ளிக்கு தொடர்ந்து செல்கின்றனர். எத்தனை நாட்களுக்கு இப்படிச் செல்வது ? இது குறித்து யாரும் பேசக் கூடாது என்றால் நம்மவர்கள் ஏன் அரசியல் செய்கின்றார்கள்.

  Ossan Salam - Doha

  மே 7, 2012 at 2:17 பிப

 5. அமைச்சரின் அந்தரங்க இரகசியம் எதையாவது அரச தரப்பு காட்டி பயமுறுத்துகிறார்கள் போலும். அதனால் தான் இப்படி பல்டி அடிக்கிறாறோ?

  Abuammar

  மே 7, 2012 at 3:27 பிப

 6. முஸ்லிம் காங்கிரஸ் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்படவிருந்த யுத்தத்தை தடுத்து நிறுத்தியுள்ளது.

  அமைச்சர் ஹகீம் அவர்களே!

  நீங்கள் ஒரு விடயத்தை நன்றாக மனதில் வைத்து உங்கள் அரசியலலை நடாத்துங்கள்.நீங்கள் முஸ்லிம்களின் முதுகில் சவாரி செய்து பாராளுமன்றம் செல்கின்றவர்கள்.நீங்கள் மஹிந்த வீட்டு …… போன்று செயற்படுவது வரவேட்கத்தக்கதன்று.மகிந்தவின் ஜனாதிபதி ஆட்சி நீடித்தால் என்ன? அல்லது சுதந்திர கட்சி பிளவுபட்டால் என்ன? நீங்கள் எப்பொழுதும் முஸ்லிம்களின் நலன்கள் பற்றியே சிந்திக்க வேண்டும்?????????????????? நீங்கள் விட்ட பெரிய தவறுதான் தற்போது இலங்கை மக்களின் வாழ்க்கையே சுமையாக மாற்றியுள்ளது. இனியொரு மக்கள் புரட்சி வெடிக்காமல் இந்த அரசை மக்களால் மாற்றமுடியாது. அத்தோடு 18வது திருத்தத்திற்கு ஆதரவு கேட்ட மஹிந்த ஏன் சிறுபன்மையாரின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலான தீர்வுகளுக்கு உங்களின் ஆதரவினை கேட்கவில்லை? நீங்கள் சிந்திக்கவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் இருந்துவிட்டீர்களா?

  தம்புள்ள பள்ளி விவகாரத்தில் உங்களுக்கு மட்டும் முடிவு அறிவிக்கப்பட்டதா? அல்லது நீங்கள் மோப்பம் பிடித்து கூறினீர்களா? அதப்படி உங்களால் மட்டும்? நாங்கள் உங்களை நன்றாகவே கவனித்து வருகின்றோம். நீங்கள் கொழும்பில் இருந்தால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிரீர்கள். கிழக்கு மாகாணம் சென்றால் கொஞ்சம் வீர வசனம் பேசுகின்றீர்கள்.
  தயவு செய்து அல்லாஹ்விட்காக உங்கள் பாணியை கொஞ்சம் மாற்றுங்களேன்.

  ஒரு விடயம்! நீங்கள் முஸ்லிகளின் தலைவர் என்ற வகையில் நடந்து கொள்ளுங்கள். இந்த விடயத்தில் உங்களின் உயிர் போனாலும் அல்லாஹ் உங்களுக்கு சஹீதுடைய நன்மையை தருவான் மட்டுமல்ல இலங்கை முஸ்லிம்களும் உங்களுக்காக உயிரையே கொடுப்பார்கள்.

  அல்லாஹ் உங்களுக்கு நல்ல அறிவையும் தைரியத்தையும் தந்தருல்வனாக?

  MUSLIM-II

  மே 7, 2012 at 7:40 பிப

 7. Yesterday (07-05-2012) , the chief prelate of Hunupitiya Gangaramaya Galaboda Gnanissara Thero at the opening ceremony of Vesak zone has lauded the service of one of the Muslim Philanthropists namely Moosajee of Bohra community who has gifted the Seema Maalaka viharaya situated in Beira lake. He also stressed the religious harmony and discouraged certain groups are attempting to create disunity among Sri Lankan religious groups… We welcome his timely and respected speech………………

  Ossan Salam - Doha

  மே 7, 2012 at 8:25 பிப

 8. Truth finder

  மே 7, 2012 at 10:18 பிப

 9. அமைச்சர் ஹகீம் அவர்களே;

  “தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளமையால் அது பற்றி நான் பேசமாட்டேன்.

  ; என்ன? முடிவு யார்?எடுத்தார்கள்?உஙகள் அரசியலுக்காக முச்லீம் சமூகத்தை பலிகொடுக்காதீர்கள் மரந்துவிட வேன்டாம் 13 இலைஞ்ர்களின் உயிரை விற்றுத்தான் 18வது திறுத்த சட்டத்தை அமுல் படுத்த உதவியதன் மூலம் முழு இலங்கை மக்கலின் முதுகில் குத்திவிட்டு வீரம் பேச்வேன்டாம் ஏன் பச்சோந்திபோல் இடத்துக்கிடம் நிரத்தை மாற்றுகிரீர்கள் தீர்ப்பைச் சொல்லாமல் முடிவைச் சோல்கிரீர்கலே பள்ளி உடைபடுவது நிச்சயமா?உலமாசபையின் மொவ்ன்மும் இதைத்தானா குரிக்கிரது?

  farhan

  மே 8, 2012 at 10:20 முப

 10. intha vidayaththil ethuvum theriyaathu enru jam.ulamaavaakiya neengal evvaaru kooruveerkal? ithe web site inraiya seythiyileye ungalin thalaivar mufthi avarkal(geneva varai senru arasukku vakkaalaththu vaangiyavar) saudiyil vaiththu solli ullaare kandiyil vittukkoduththom,cmbil vittukkoduththom enrellaam solli ullaare athai thaan arintha hakeem ippadi koorinaaro dambullaiyilum vittaal enna enru mufthi mudivu eduththu vittaaro?

  ameen

  மே 8, 2012 at 2:32 பிப

 11. தம்புள்ள பள்ளி விவகாரம் – எந்தவொரு சமூகத்தின் நலனுக்கும் பங்கம் இல்லாமல் தீர்க்கப்படும் – மஹிந்த
  ‘தம்புள்ளை தகராறு கட்டுமீறிப் போவதை தான் அனுமதிக்கப்பபோவதில்லை எனவும் எந்தவொரு தனிநபரின் அல்லது சமுதாயத்தின் நலனுக்கும் பங்கம் ஏற்படாத வகையில் இந்த பிரச்சினையை தீர்க்கவுள்ளதாகவும் ஜனாதிபதி எனக்கு உறுதியளித்தார்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று கூறினார்.

  ஹக்கீமுடன் மஹிந்த தொலைபேசியில் அவசரபேச்சு – தம்புள்ள பள்ளி விவகாரம் ஆராயப்பட்டது…

  (Kuraikudamaaka irunthukondu karutthucholawathai anaivarum thavirthukkollavendum.

  Avathaani

  மே 10, 2012 at 12:01 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: