Lankamuslim.org

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்குமா ?

leave a comment »

அஸ்ரப் ஏ ஸமத், ஏ.அப்துல்லாஹ்: உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2012 இலங்கையில் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் கொழும்பில் நடாத்துவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழு ஒன்று நேற்று (28) நீதி அமைச்சில் வைத்து அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இக் குழுவில் 13 பிரிவிகளில் நபர்கள் நியமிக்கப்பட்டனர். இக் கூட்டத்தில் அரபு தமிழ் இஸ்லாமிய இலக்கியதுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் பற்றி கருத்துக்களையும் ஆலோசனையும் தெரிவித்தனர். அங்கு வெளியீடுகள், ஆராய்ச்சிக்கட்டுரைகள் போன்ற பல்வேறு தலைப்புக்களில் பலரும் கருத்துக்களையும் ஆலோசனையும் தெரிவித்தனர்.

கடந்த முறை இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில்  இஸ்லாமிய கோட்பாடுகளை சிலர் மீறும் வகையில் நடந்துகொண்டதாக விமர்சங்கள் எழுந்தமை குறிப்பிடதக்கது .

இக் கூட்டத்திற்கு சமுகம் தந்திருந்த முஸ்லிம் கல்விமான்கள், கல்வியலாளர்கள், இலக்கயவாதிகள் ஊடகவியலாளர்கள் அரசியல் வாதிகள் உட்பட 200 பேர் மட்டில் கலந்து கொண்டனர்.கடந்த வருடம் மலேசியாவில் நடைபெற்ற மாநாட்டினை விட இம் மாநாட்டினை மிகப் பிரமாண்டமாக கொழும்பில் நாடத்துவதற்கு பாரிய ஏற்பாடு ஒன்றை செய்ய உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஒரு நிருவாக அமைப்பை ஏற்படுத்துமாறு . அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

தலைவராக அமைச்சர் ரவுப் ஹக்கீம், செயலாளராக டாக்டர் தாசீம் அகமத் இயங்கலாக நீதிக்குழு, வெளியீட்டுக்குழு ஊடக குழு மகளிர் குழு உபச்சாரக் குழு, கலைக்குழு, ஆராய்ச்சிக்குழுக்களுக்கும் 5 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அவற்றில் சகல மாவட்டம் தோரும் 2 ஒருங்கிணைப்பாளர்களும் குழுக்கள் தெரிந்தெடுக்கப்பட்டடனர்.

.எஸ்.எச்.எம். ஜெமீல், கலாநிதி எம். எஸ்.எம் அனஸ், அஸரப் சிகப்தீன், சாந்தி மொஹிதீன், மௌலவி முபாரக் அப்துல் மஜீத், பாராளுமன்ற உறுப்பினர் ஏ .எச்.எம் அஸ்வர், பிரதியமைச்சர் பசீர் சேகுதாவுத், அகமத் முனவர். என்.எம் அமீன், கவிஞர் ஹசீர் ஹக்கீம் மானா மக்கீம் காலாநிதி ஐலுலுத்தீன், மௌலவி எஸ்.எச். அதம்பாவா டாக்டா தாசீம் அகமத், அமைச்சா; ஹக்கீம் ஆகியோரும் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.இறுதியில அண்மையில் காலம் சென்ற நூறாணியா ஹசன். எம் சதக்கா ஆகியோருக்கு துஆப் பிரத்தனையும் இடம் பெற்றது.

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 29, 2012 இல் 4:57 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: