Lankamuslim.org

இடம்பெறவுள்ள கூட்டத்தில் தம்புள்ள மஸ்ஜித் நிர்வாகம் கலந்துகொள்ளாது

with 2 comments

இணைப்பு -2:தம்புள்ள மஸ்ஜித் தொடர்பாக எழுந்துள்ள பதற்ற நிலையை தணிப்பதற்காக சர்வமதத் தலைவர்களைக் கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று திங்கள் கிழமை தம்புள்ளையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ள மாநகர சபையின் மேயர் ஜாலிய ஒபாத்த தெரிவித்துள்ளார் .

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முஸ்லிம் மதத் தலைவர்கள் அஸ்கிரிய மாநாயக்க தேரர் , புத்த சாசன திணைக்கள செயலாளர் ,கலாசார அமைச்சின் செயலாளர் தம்புள்ள விகாராதிபதி மற்றும் அரசியல்வாதிகள் பிரதேச செயலாளர் இந்த கூட்டத்தில் எழுதுள்ள பிரச்சினைகள் குறித்து உரிய வகையில் இவ் ஆலோசனைக் கூட்டத்தில் ஆராயப்பட்டு இந்த பிரதேச முஸ்லிம்கள் உரிய வகையில் தங்கள் பள்ளிவாசல் சமைய விவகாரங்களை முன்னெடுத்து செல்ல வசதியாக மாற்று நடவடிக்கை எடுக்க எதிர்பார்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

எனினும் இன்று 3 மணியளவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப் படும் கூட்டத்தில் தம்புள்ளை ஹைரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் வழிகாட்டலுக்கு அமைவாக குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் அதிகாரத்தை பெறாது என்றும் அதன் நிர்வாக உறுப்பினர் ஒருவர் lankamuslim.org க்கு தெரிவித்தார்.

மேலும் குறித்த கூட்டம் தொடர்பில் எந்த எழுத்துமூல அறிவித்தலும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார் .இது தொடர்பாக யாரும் எம்மிடம் வினவினால் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவே இந்த விவகாரத்துக்கு பொறுப்பு அவர்களுடன் நீங்கள் பேசுங்கள் என்று கூறுவோம் என்று எமக்கு அவர் தெரிவித்தார்.

 
இணைப்பு -2
தற்போது கிடைத்த தகவல் இரண்டு பிரதியமைச்சர்கள் தம்புள்ளை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் ஒருவர் காத்தான்குடியில் இருந்தும் மற்றவர் கொழும்பில் இருந்தும் வந்து பள்ளி நிர்வாகத்துடன் கதைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்று பள்ளி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார் காத்தான்குடியில் இருந்து வரும் பிரதியமைச்சர் MLAM ஹிஸ்புல்லா மற்றும் ஒரு பிரதியமைச்சர் ஆகியோர் நிர்வாகத்தை சந்திப்பார்கள் என்றும் இது தொடர்பாக ஜம்இயதுல் உலமாவுக்கும் அறிவிப்போம் என்றும் குறித்த நிர்வாகி  எமக்கு தெரிவித்தார் .

மேலும் குறித்த பிரதியமைச்சர்கள் தம்புள்ள விகாராதிபதியை சந்திக்கலாம் என்று அறிய முடிகிறது என்றும் தெரிவித்தார்.

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 இல் 1:27 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. இலங்கை முஸ்லிம்கள்; செய்ய வேண்டியது என்ன?

    1. உலமா சபையின் கீழ் ஒன்று படுவோம்
    2. கட்சி சார்பின்றி குர்ஆன் ஹதீஸ்படி பிரச்சினைகளைத் தீர்ப்போம்
    3. சத்தியத்தை ஏவி அசத்தியத்தைத் தடுப்போம்
    4. நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்வோம்

    Abdullah

    ஏப்ரல் 23, 2012 at 2:49 பிப

  2. உண்மையான இறையச்சத்துடன் நிதானமாகச் செயற்படுவதும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் , முஸ்லிம்கள் அனைவருக்கும் பாதுகாப்பை அளிப்பதோடு எதிரிகளுக்கு நல்ல மனப்பான்மை ஏற்படவும் வழி வகுக்கும்.

    Iraiyadiyaan

    ஏப்ரல் 23, 2012 at 8:54 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: