Lankamuslim.org

One World One Ummah

அடிப்படை மனித உரிமைகளை பறிக்க முயற்சிக்கிற சக்திகளுக்கு நாம் தலை சாய்த்துபோக முடியாது

with 4 comments

சஹீத் அஹமட்: நான் இந்த அரசின் நீதியமைச்சராக இருந்துகொண்டு சொல்லும் விடயம் எங்களுக்கு இருக்கிற அடிப்படை மனித உரிமைகளை பறிப்பதற்கு முயற்சிக்கிற இந்த சக்திகளுக்கு நாம் தலை சாய்த்துபோவது  எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு இது பாரமாக இருக்கும் என்பதாகும் .  காத்தான்குடியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு உரையாற்று கையில் :புனித பிரதேசம் சம்பந்தமான எந்த வர்த்தமானி அறிவித்தாலும் விடப்பாடாத நிலையில் சுவிகரிகப் பட்ட இடம் என்று சொல்லபட்டாலும் …பல ஆண்டுகளாக நிலங்களில் இருப்பவர்களுக்கு அந்த உரிமையாளர்களுக்கு அந்த நிலங்கள் வழங்கபட்டுள்ளது. 60 வருடங்களுக்கு மேலாக இருக்கும் பள்ளியை முஸ்லிம் சமூகம் விட்டுகொடுப்பதாக இருந்தால் அது பெரிய விபரீதங்களை கொண்டுவந்து விடும் என்பது  எனது தாழ்மையான கருத்து என்னைபொறுத்த மட்டில் இதற்கு எந்த உடன்பாட்டையும் எடுக்க முடியாது.

  நேற்று கொழும்பில் தம்புள்ள பள்ளி நிர்வாகத்தை கூப்பிட்டு கதைக்க தீர்மானித்தோம் ஆனால் நான் அங்கு சென்ற பின்னர் அந்த நிர்வாகத்திற்கு நான் சொல்லும் விடயம் எந்த காரணம் கொண்டு இந்த விடயத்தில் நாம் பின்வாங்க கூடாது என்று பின்வாங்கினால் வன்முறை மூலம் பல இடங்களில் இவ்வாறு  எனது மதஉரிமைகளில் கைவப்பதாக மாறிவிடும் என்ற அபாயத்தை ஏற்றுகொகிறோம் என்ற விடயத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்று தெரிவித்தார் .

நான் தம்புள்ள பிரதேசதிற்கு சென்றபோது தம்புள்ள மாநகர சபை உறுபினர்கள் ,தலைவர் எதிர்க்கட்சி தலைவர் அனைவரும் சொன்ன விடயம் பள்ளிக்கு எதிரான ஆர்பாட்டத்தில் தம்புள்ளையில் உள்ளவர்கள் 5 வீதமானவர்கள் கூட ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை வெளி ஊர்களில்  இருந்து கும்பல்கள் கொண்டு  வரப்பட்டனர் அவர்கள்தான் தான் அதில் கலந்து கொண்டார்கள் என்பதை ஆணித்தனமாக தெரிவித்தார்கள் .

தம்புள்ள மாநகர மக்கள் மத்தியில் ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் அவர்கள் முழுக்க இந்த பள்ளி அகற்ற கூடாது என்று வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு , தம்புள்ள நகர சபை உறுப்பினர்கள் என்னிடம் சொன்னார்கள் நாளை பள்ளிக்கு எதிரான விடயங்கள் தொடர்பில் சபையில் ஒரு பிரேரணை கொண்டுவந்து எதிர்க்க இருக்கிறோம் என்று என்னிடம் சொனார்கள் .மேலும் அவர் அங்கு பேசும் பேசும் போது இந்த பள்ளி விடையம் தொடர்பாக்க வானொலி தொடர்பாக தான் எதிர்வரும் அமைச்சரவை கூடத்தில் பேச இருக்கிறேன் என்றும் தெரிவித்தார் .

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 23, 2012 இல் 10:57 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. மாஷா அல்லாஹ்…..

    எங்கள் தீனுக்கும்,முஸ்லிம்களின் உடமைகளுக்கும் அன்பு மிக சகோதரர்களுக்கும்;

    யா அல்லாஹ்!நீ கருணை காட்டி எங்கள் பிரட்சனைகளை இலகுவக்குவயாக ஆமீம்!!!

    யா ரப்பல் ஆலமீன் ……….”இன்னல்லாஹ் மா சாப்ரீன்”( நான்:கடல் கடந்த தேசத்தில் இருந்து

    என் முஸ்லிம் சமுதாயத்துக்கும்)

    hazeen_77@yahoo.com

    ஏப்ரல் 23, 2012 at 12:48 பிப

  2. தம்புள்ளை பள்ளியை இன்று விட்டுக்கொடுத்தால் நாளை நாடலாவிய ரீதியிலான அனைத்து பள்ளிகளையும் இழக்க நேரிடும்.

    islaminsinhala

    ஏப்ரல் 23, 2012 at 4:53 பிப

  3. இது சமூகப்பற்றுடனான ஒரு தலைவரது உண்மையான பேச்சு , இத, இதத்தான் எமது சமூகம் எதிர்பார்க்கிறது. நாட்டின் 25 வீத முஸ்லிம்களும் இச்சம்பவத்தை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றனர். ( ஜஸாகல்லாஹூ கைர் )

    Jameel As

    ஏப்ரல் 23, 2012 at 5:12 பிப

  4. Mashaallah…Good talk from our brother ….

    Khalid Bin Waleed

    ஏப்ரல் 24, 2012 at 7:58 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: