Lankamuslim.org

One World One Ummah

தம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்

with 35 comments

இன்று  முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆளும் தரப்பில் இருந்தும் தம்புள்ள மஸ்ஜித்  தாக்கப்பட்டுள்ளது:  மஸ்ஜிதின் பாதுகாப்பு தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடனும் , பாதுகாப்பு செயலாளருடனும் போலீஸ் மா அதிபருடனு தொடர்பு கொண்டதாக தெரிவித்தனர்.  ஆனால் ஜூம்ஆ இடம்பெறாமல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் பள்ளி தாக்கப்பட்டுள்ளது அல் குர்ஆம் வீசி எறியப்பட்டுள்ளது.

பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் மஸ்ஜிதின் பாதுகாப்பு தொடர்பாக உயர் மட்டத்துடன் தொடர்புகளை கொண்டிருந்தார் அதேபோன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியுடனும் , பாதுகாப்பு செயலாளருடனும் போலீஸ் மா அதிபருடனும் இது தொடர்பாக பேசியிருந்தார் இருந்தும் பேரினவாதிகள் திட்டமிட்டபடி சம்பவம் நடைபெற்றுள்ளது .இது  தொடர்பாக அமைச்சர்கள் என்ன சொல்லபோகிறார்கள் .

இது தொடபாக தம்புள்ள ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரும் சம்பவங்களை நேரில் மறைந்திருந்து அழுகையுடன் நேரில் பார்த்தவரும் மற்றும் சம்பவம் நடக்கும்போது 11 மணி தொடக்கம் 12.30 மணி வரை பள்ளியில் இருந்தவர்களில்  மௌலவி ஒருவரும் ஆகிய இருவர் lankamuslim.org க்கு  தெரிவித்த தகவல்களை உங்களுக்கு தருகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் பெயர்கள் தவிர்க்கப் பட்டுள்ளது .

மௌலவி: இன்று காலை 10: 30 மணியளவில் ஜும்ஆ தினம் என்பதால் சுமார் 50 பேர் பள்ளியில் இருந்தனர் காலை 11:00 மணியளவில்  பெளத்த தேரர்கள் தலமையில் ஆயிரக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள் ஏற்கனவே அவர்கள் திட்டமிட்டபடி மஸ்ஜிதை முற்றுகையிட்டு உள் நுழைய முயன்றனர். அவர்களின் முதல் முயற்சி இராணுவத்தால் தடுக்கப்பட்டது இதை தொடர்ந்து தேரர்களின் பின்பக்க வழியால் பள்ளிக்குள் நுழைந்தது மிகவும் மோசமான சொல்லமுடியாத வார்தைகளிளால் இராணுவம் , போலீஸ் முன்னிலையில் கடுமையாக திட்டி கொண்டு பள்ளியின் உள்ள பக்க கதவுகளை தாக்கினர்.

பெளத்த தேரர்களில் சிலர் தமது காவி உடையை கழட்டி மோசமாக நடந்து கொண்டனர். இதனை இராணுவமும் பொலிசாரும் பார்த்துகொண்டு இருந்தனர். அவர்களை தடுக்க முற்படவில்லை இந்த நிலையில் பள்ளியின் மீது தொடந்து கற்கள் வீசப்பட்டது பள்ளியை நாங்கள் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தோம் சிலர் இபாதத்திலும் ஈடபட்டு இருந்தபோது நிலைமை மோசமானது பாதுகாப்பு அதிகாரிகள் எம்மிடம் வந்து பள்ளிக்கு எதுவும் நடக்காது பள்ளியில் இருந்து வெளியேறுமாறு கூறினர் நிலைமை மோசமடைய அவர்கள் ஒழுங்கு செய்த வலியின் மூலம் வெளியேறினோம் அதன்போது பாதுகாப்பு கருதி தொப்பியை கழட்டிவிட்டு செல்லுங்கள் என்று கூறினார் இது 11:00 மணி தொடக்கம் 12:00 வரை இடம்பெற்ற விடயம் இன்று ஜூம்ஆ தொழுகை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதத்க்கது.

ஜும்ஆ பள்ளி நிர்வாகி இதை தொடந்து தம்புள்ள  ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் எம்மிடம் தெரிவித்த தகவலை தருகிறோம்:

தேரர்கள் பள்ளியில் முன்பகுதியில் வந்து மோசமாக நடந்து கொண்டிருந்தனர் போலீசார் எம்மை பள்ளிக்கு ஒன்றும் நடக்காது பள்ளியில் இருந்து வெளியேறுமாறு கோரினர் நாம் எமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கேட்டோம் அதற்கு அவர்கள் உடனடியாக எதையும் தெரிவிக்கவில்லை பின்னர் பாதுகாப்பு தருவாதாக கூறினார் அதன்படி நாம் 12:30 அளவில் பள்ளியை விட்டு வெளியேறினோம் .

எங்களை வெளியேற்றிய பின்னர் நான் உட்பட எம்மில் சிலர் மறைந்து இருந்து நடப்பதை அவதானித்தோம் சுமார் 15 நிமிடங்கள் தேரர்கள் தலமையிலான ஆர்பாட்ட கார்களுக்கும் இராணுவ அதிகாரிகள் , போலீஸ் அதிகாரிகள் , AGA ஆகியோருக்கும் இடையில் பேச்சு இடம்பெற்றது அதை தொடர்ந்து AGA உட்பட பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளியின் கதவுகளை ஆர்பாட்ட கார்களுக்கு திறந்து கொடுத்தனர் பள்ளிக்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த அல் குர்ஆன் அலுமாரி உட்பட மின் விசிறிகள் , கதவுகள், தளபாடங்களை தாக்கினர் உடைத்தனர் அல் குர்ஆன்ங்களை வீசி எறிந்தனர் இவற்றை படமாகவும் வீடியோ வாகவும் எடுத்துள்ளனர். அதன்பின்னர் வெளியேறி சென்றனர் அவற்றை நான்   மறைவான இடமொன்றில் இருந்து பார்த்துகொண்டிருந்தேன் .

அவர்கள் வெளியேறி சென்றபின்னர் பள்ளியின் தலைவர் பள்ளியை பார்க்க வந்தார் அவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை சீல் வைகபட்டிள்ளது அது AGA யினால் வகைப்பட்டதாக இருக்கலாம் .

அதன் பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் உடைந்த வற்றை மீளவும் சரிசெய்து வைக்கும் வேலையில் ஈடுபட்டனர். சேதமான மின்விசிறி உட்பட அனைத்தையும்  எதுவம் நடக்காதது போன்று சரிசெய்து இடத்தையும் துப்பரவு செய்தனர். அதன் பின்னர் பள்ளி தலைவரை அழைத்து ஊடங்களுக்கு எதையும் நடகாத்தை போன்று வெறும் ஆர்ப்பாட்டம் நடனத்தை போன்ற தோரணையில் ஊடங்களுக்கு தெரிவிக்குமாறு கூறியதாக தெரிகிறது அவர் இதுவரை எந்த செய்தியையும் ஊடகங்களுக்கு வழங்கவில்லை என்று தெரிகிறது .

தற்போது பள்ளி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது , முஸ்லிம் கடைகள் மூடப்பட்டுள்ளது அச்சமான சூழ்நிலை நிலவுகிறது கண்டிப்பாக முஸ்லிம் அமைச்சர்கள் உடனடியாக எமது இடத்துக்கு வரவேண்டும் நிலைமைகளை நேரில் பார்க்கவேண்டும் என்று வேண்டுகோளும் விடுகிறேன் இந்த செய்தியை முடியுமானவரை விரைவாக எடுத்து செல்லுங்கள் என்றும் எம்மிடம் தெரிவித்தார் .

அவரிடம் எமது செய்தியாளர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்டபட முஸ்லிம்  அமைச்சர்கள் குழு ஒன்று கொழும்பில் இருந்து  தம்புள்ளைக்கு செல்லவுள்ளது  என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஊடக செயலாளர்  சில மணிகளுக்கு முன்னர் எமக்கு   தெரிவித்திருந்த தகவலை தெரிவித்தார் .
1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளிவாயில் 2002ஆம் ஆண்டு முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளன அதேவேளை இந்த பள்ளி சட்டவிரோதமானது என்று பிரதேச செயலாளர் தெரிவித்தாக செய்திகள் வெளிவந்துள்ளது . எதிர்வரும் திங்கள் கிழமை இது தொடர்பாக பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது .

தம்புள்ளை ஜூம்ஆ   மஸ்ஜித் தாக்கப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது முஸ்லிம் கடைகள் பூட்டப்பட்டுள்ளது இப்போது முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்யபோகிறார்கள் ??? என்பதை பாப்போம் !

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 20, 2012 இல் 5:14 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

35 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. பேரினவாதிகளே! நீங்கள் தம்புள்ளயில் தகர்த்தது மஸ்ஜித் மாத்திரம் அல்ல
    இந்த அரசாங்கத்தின்
    மீதான ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையையும் தான்.
    ஜெனீவாவில் நாங்கள்
    காட்டிய நாட்டுபற்றுக்காக
    நீங்கள் காட்டும் நன்றிக்கடன் – உங்கள் இனப்பற்று.

    அப்ரஹாவை அழித்த
    சிறு பறவைகள் போல,
    உங்களை நெருங்கும்
    வேதனையை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது.

    நீதி அமைச்சர் முஸ்லிமாம்
    பள்ளிவாயல்
    தரை மட்டமாம்.

    அரசின் புகழ் பாடி
    முஸ்லிம் அரசியல்வாதிகள்
    மத்திய கிழக்கில் கொண்டாட்டம்.
    அரச படை முன்னிலையில்
    அல்லாஹ்வின் இல்லத்தில் விஷமிகளின் வெறியாட்டம்.

    மஸ்ஜிதின் 50 வருட இருப்பு பற்றி
    அரசிற்கு ஆதாரம்
    காட்டியும் சேதாரம்
    ஆக்கிவிட்டார்கள் கயவர்கள்.

    அரசியல்வாதிகளே!
    போதும். அரசின் அடிமையாய் இருந்து நீங்கள் செய்த பிரதேச அபிவிருத்தி போராட்டம்.
    ஆரம்பியுங்கள்!
    எம் சமூகத்தின் இருப்புக்கான உரிமை போராட்டம்.

    nijah1

    ஏப்ரல் 20, 2012 at 5:44 பிப

  2. நிச்சயமாக துன்பத்திட்கு பின்னால் இன்பம் இருக்கிறது அறுபது வருடங்களாக அல்லாஹ்வை தொழ வேண்டும் அவனை நினைவுகூறவேண்டும் என்ற ஒரே நோக்கத்திட்காகவே இந்த மஸ்ஜித் இவ்விடத்தில் காலிட்ஸ்குபின்னால் மிக சங்கடமான நிலையில் வெகு பீதிகளுடன் இயங்கி வந்தது இன்று நடந்துள்ள இந்த மிக வேதனையான நிகழ்வைகொண்டு அல்லாஹ் இந்த ம்ஸ்ஜிதுக்கு ஒருவிடிவை ஏட்படுத்துவான் என முழுமையாக ஆதரவு வைபோம் முழு முஸ்லிம் சமூகமும் எதை ஆதரவு வைத்து பிர்ராத்திப்பார்களோ அதை நிச்சயம் அல்லாஹ் நிறைவேற்றியே தீருவான் நாம் என்ன பாவம் செய்தோம் அல்லாஹ்வை நாபகமூட்ட மஸ்ஜித் அமைத்தது அல்லாஹ்வுக்கு வெறுப்பான செயலா இல்லை அல்லவா??? எனவே நாம் பொறுமைகாப்போம் அல்லாஅஹ் இந்த மிக பெரிய வேதனைக்கு நிச்சயம் ஆறுதல் அளிப்பான் இவ்வளவு நாளும் பயந்து பயந்து நடாத்தபட இந்த மஸ்ஜிதின் அமல்கள் இனி கம்பீரமாக தலை நிமிர்ந்து பகிரங்கமாக காட்சி தரும் நிலையான மஸ்ஜித் அவ்விடத்திலேயே அமைக்கபட்டு அதில் அமல்கள் பகிறங்கமாக நடைபெறும் நிலையை ஏட்படுத்துவான் அது அல்லாஹ்வின் உதவியால் நிச்சயம் நடக்கும் ஆனால் அல்லாஹ்வின் உதவியை பெற எம்மிடையே ஒற்றுமையும் ஒரே குறிக்கோளும் அவசியம் ஒட்டு மொத்த அரசியல்வாதிகளும் ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களும் இந்த விடயம் குறித்து ஒரே குறிக்கோளுடன் விடாது தம் சல சாதூர்யங்களையும் பயன்படுத்தி முயட்சிக்க வேண்டும் மூதூர் மக்கள் வெளியேற்றபட்டவேளை நாம் சகலரும் ஒரே நோக்கில் பணியாற்றினோம் பிராத்திதோம் நம்மால் இயன்றதை செய்தோம் இறுதியில் உள்ளங்கள் ஒன்றினைந்த்தால் அல்லாஹ் மிக பெரிய வெற்றியைத்தந்தான் அதேபோல் ம்ஸ்ஜித் விவிகாரத்திலும் நாடு முஸ்லிம் சக்திகள் சகலரும் கவனம் செழுத்தினால் அல்லாஹ் மாபெரும் வெற்றியை தருவான் அதட்கு நம்மால் இயன்ற சகலதையும் செய்வோம் முக்கியமாக இந்த விடயத்தை சர்வதேசமயபடுத்த நடவடிக்கை எடுபோம்

    Mohammed Hiraz

    ஏப்ரல் 20, 2012 at 6:02 பிப

    • “jazakallahu hairan” eammai pala kooru poda eamathu iyakkangal pavikkum AL QURAN vasanaththai indath tharuvayilavadu sariyana porulil pavippom ” inda oliyai avarhal thamadu vayal oothi anaikapparkirarkala?……”

      mk sadakathullah

      ஏப்ரல் 20, 2012 at 8:27 பிப

  3. முஸ்லிம்களுக்கு இஸ்லாம் ஒரு போதும் அன்னிய மதத்தவர்களை அவமதிக்கவோ அவர்களின் வணக்கத்தலங்களை அல்;;ட்சியப்படுத்தவோ உடைக்கவோ கற்றுத் தரவில்லை மாறாக சாந்தி சமாதானம் பொறுமை என்பவற்றை கடைப்பிடிக்குமாறு வற்புறுத்தியுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் அனைவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.அவனுடைய தண்டனையை வழங்கியே ஆவான். முஸலிம்களாகிய நாம் பொறுமையைக் கொண்டு வெற்றி பெறுவோம். அல்லாஹ்வே அனைத்தையும் காப்பவன்….

    imamdeen

    ஏப்ரல் 20, 2012 at 6:18 பிப

  4. அன்று அனுராதபுர பள்ளி உடைப்பு இன்று தம்புள்ளை ஜும்ஆப் பள்ளிவாசல் உடைப்பு நாளை?

    இன ஒற்றுமை என்று வாய் கிழியப் பேசினாலும், அதை அடிப்படையாகக் கொண்டு இன வேற்றுமையை வளர்க்க ஆயத்தமாகும் நரிகளைக் கொண்டும் இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகம் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

    ஆயினும், ஜனநாயக ரீதியில் எம் உரிமைகளுக்காக நாம் போராடவும் தயாராக இருக்கிறோம் என்பதையும் இலங்கை வாழ் இஸ்லாமிய சமுதாயம் தெளிவாக்கத் தவறும் பட்சத்தில் இனி வருங் காலங்களிலும் இலங்கை இஸ்லாமியர்கள் இன அடக்குமுறைக்குள்ளாவதைத் தடுக்க முடியாது என்பதும் தெளிவாகிறது.

    சிங்கள – முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் பல கிராமங்களில் அதிகாலை (பஜ்ர்) தொழுகைக்கான அழைப்பு தொடர்பில் பல காலங்களாக வேரூன்றியிருந்த சலசலப்புகளை இந்த அரசாங்கத்தின் தீவிர பெரும்பான்மை சார் நிலையைப் பயன்படுத்தி சில சக்திகள் முஸ்லிம்களுக்கெதிராகத் திருப்பியமை காலம் நமக்குக் கற்றுத்தந்த வரலாறாகும். அப்போதும், முஸ்லிம் மக்களிடம் காணப்பட்ட சில கருத்துவேறுபாடுகளின் இடைவெளி, அதாவது ஒருமித்த கருத்துகள் காணப்படா நிலையை நன்கு உபயோகித்துக் கொண்ட பெரும்பான்மை இனவாத பூதங்கள் ஒரு சில இடங்களில் இதனை ஒரு சமூக சிக்கலாக உருவாக்கிப் பலன் கண்டனர்.

    அதே வகையில், இனி வரும் காலங்களில் மெது மெதுவாக முஸ்லிம் மக்களின் வணக்கஸ்தலங்களில் கை வைக்கத் துணிவதற்கான ஆரம்பமாக அனுராதபுரம் மற்றும் தம்புள்ளை ஆக்கிக்கொள்ளாமலிருப்பதும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் மாபெரும் கடமையாகும்.
    நன்றி

    முஹம்மது வாசிக்

    wasik

    ஏப்ரல் 20, 2012 at 6:28 பிப

  5. எமது பெண்களின் கலாச்சார ஆடைகளின் மீது பாடசாலைகளில் தாக்கும் இந்த காடையர்கள் எமது மதரசாக்கள் மீது பலி போடும் இந்த காடையர்கள் புனித பூமி என்ற பெயரில் கிழக்கு மாகாணத்தில் பெரும் பகுதியை அங்கு சிறந்த தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் இன்று அதே பெயரை சொல்லி தம்புள்ளேயில் தமது கை வரிசையை காட்டியிருக்கிறார்கள் இதில் ஆச்சரியப்படுவதட்கு ஒன்றுமில்லை நாளை எங்கு என்ன நடைபெறுமோ ??
    நாம் அனைவரும் ஒற்றுமை என்னும் கையிற்றை பற்றி எம்மை படைத்தது பாதுகாக்க போதுமான அந்த இறைவனிடம் முறையிடுவோம் அவனே அனைத்திற்கும் போதுமானவன்
    அதற்கு முன்னர் நாம் முஸ்லிம்களாக வாழ பழகுவோம் ஆனால் இதில் நாம் மறுக்க முடியாத ஒரு உண்மை இருக்கிறது இலங்கையை போல் வேறு எந்த நாட்டிலும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கவில்லை இன்று நாம் பாதை மாரிச்செல்கிரோம் இறைவன் நம் உரிமைகளை பறிக்கின்றான்

    voiceofummah

    ஏப்ரல் 20, 2012 at 7:52 பிப

  6. எல்லா புகழும் அல்லாவுக்கே

    நமது அமைச்சர்கள் எல்லாம் முடிந்து என்ன கருத்து சொல்ல போறாங்க பாக்கலாம்

    முஸ்லிம்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியுலகிக்கு சொல்லாமல் பயந்து தொடை நடுங்கும் தரம் கெட்ட சுயநல நமது அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் இதுவும் நடக்கும் இன்னும் நடக்கும்
    முதலில் நம்மக்கு வீரமுள்ள மார்கமுள்ள அரசியல்வாதிகலே இன்றைய தேவையாகும்.

    இவ்வளவு நடந்திருக்கு நமது பதவியாசை பிடித்த அரசியல்வாதிகள் எங்கப்ப போனங்க

    சிகல உறுமய இயக்கத்தின் கொள்கைகள் என்னென்று தெரிந்தும் அதை முலையில் கில்லி எரிய நடவடிக்கை எடுக்காமல் வளரவிட்டு அமைதியாக இருப்பது பொறுமை இல்லை.மாறாக அதை தவிக்க எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் இதை விட்டால் தொடர் கதையகிவிடும்.

    இந்த விடயத்தை

    அரசியல்வாதிகள் ஒரு நாளில் மறந்துவிடுவார்கள்

    சாதாரன மனிதர்கள் மூன்றுநாளில் மறந்திடுவார்கள் இதுதான் நமது சமுகத்தின் நிலை

    ரத்தம் கொதிக்கிறது இந்த ஈனர்களில் செயகளை நினைக்கும் போது……

    ஒற்றுமையே எமது பலம் என்பதை மறந்துவிடாதே ……

    யோசித்து செயலில் இறங்கு ….

    நாம் வீரமுள்ள ,மானமுள்ள முஸ்லிம் சமூகம் எல்லோரிடமும் சுமுகமாக வாழத்தான் ஆசை முடியவில்லை என்றால்

    என்ன செய்வது எல்லோரும் புரிந்து நடந்துகொள்ளுள்ள தயாராகுங்கள்

    அல்லாஹு அக்பர்

    எல்லாம் அவன் செயலாகும்.

    Mohammed Fasleen

    ஏப்ரல் 20, 2012 at 9:13 பிப

  7. Oru ministerukkum thairiyam illai…..mahidavukkum,gotawukkum avarhal sariyaana payam.ithu 100% unmai

    acord4@yahoo.com

    ஏப்ரல் 20, 2012 at 9:42 பிப

  8. பெளத்த சிங்கள மேலாதிக்கம் தனது ஆசை நிறைவேற்றியுள்ளது: முஸ்லிம் அரசியல் மற்றும் சமூக தரப்பில் இருந்தும் முஸ்லிம் மக்கள் தரப்பில் இருந்தும் இதற்கு சரியான கண்டனும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்ட வேண்டும் அந்த பள்ளி அந்த இடத்தில் அமைதி பூர்வமாக இயங்க வேண்டும் அதற்கு அரசாங்கள் முழு ஒழுங்கையும் செய்து தரவேண்டும் தவறினால் நாளை அறிக்கைகளை விட்டும் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று படங்களை எடுத்து காட்டிவிட்டு முஸ்லிம் அமைச்சர்கள் அரசியல் வாதிகள் ஒதுங்க முடியாது இறுதியானதும் நியாயமானதுமான தீர்வு பெறப்படவேண்டும் இலங்கை பிரிக்கபடாத நாடக இருக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் ஜெனிவா வரை சென்றமைக்கு பேரினவாதிகள் தந்த மறக்க முடியாத பரிசுதான் பள்ளியை மூட சொன்னதும் சும்மாஹ் தொழ சென்றவர்களை விரட்டியதும் பள்ளியை தாக்கியதும்

    எல்லாவற்றுக்கும் பொறுமை வேண்டும் உண்மைதான் ஆனால் பொறுமை அடக்கு முறைக்கு வழிவகுக்க அனுமத்க்க கூடாது வீதிக்கு இரங்கி போராடவும் தயாராக இருக்கவேண்டும்

    M.Refard

    ஏப்ரல் 20, 2012 at 10:00 பிப

  9. allahku akpar ja allah entha parina vathathuku oru alivi arpatothuvayaha muslim samuhama onruinaiuingkal
    ……

    risvi

    ஏப்ரல் 20, 2012 at 10:32 பிப

  10. This is not an isolated incident, this is the real face of Sri-Lankan Sinhalese. But the tragedy is the government’s inability to curb these monsters from attempting humiliation to the govt. in the face of international attention. If our politicians act according to their conscience, the govt. should face tough time in next international agenda. Wake up Muslim community and wake up Muslim countries.

    Najimudeen

    ஏப்ரல் 20, 2012 at 11:03 பிப

  11. muslims ministers mahinda doll so they cant make any decision about it & well planed activities

    ril

    ஏப்ரல் 20, 2012 at 11:36 பிப

  12. Allahvukku Anuwalawum Payappadatha Mahindavin Salvaikku Eerakkural Kalangi Nitkum Munafikkana pala thalaimakal Nammul Irukkum Varaikkum Ippadiyana Sothanaikal Warave Seyyum. Nammavarkal Halal Haram Parkamal Ulaka Aasai Pittu pidittu Alaiyum Waraikum Ippadiyana eenaman thalaimakal Nam Meethu Sadda Padduk Konde Irukum.

    Fathima Hazra

    ஏப்ரல் 21, 2012 at 12:08 முப

  13. ministers and mps and provincial members coming next election.all muslim peoples puts vote for sponcered another mosque or mathrasa damaged other religions.

    no mention
    please ask for dua allah help srilankan muslim community

    no harm
    no angry

    insha allah we need good future
    allah give good freedom

    dont forget – every muslim ask for dua

    harfy

    ஏப்ரல் 21, 2012 at 12:37 முப

  14. Muslim Ministers and other Muslim delegation of government will not do anything apart from the media statements.They don’t care about the people.Very soon they have to pay the price those who did this shameless thing.

    Mohamed Fazaal, London

    ஏப்ரல் 21, 2012 at 4:33 முப

  15. இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் இவர்ஹளை தண்டிக்காமல் விட மாட்டான்

    Mohamed

    ஏப்ரல் 21, 2012 at 5:30 முப

  16. முஸ்லிம் அரசியல் வாதிகளே நடந்த வற்றை மறைக்க முற்படாமல் நிகழ்வை சரியாக அளவிடுங்கள் அதற்குரிய நிரந்தரமான தீர்வை காணுவதற்காக தீர்கமான முடிவுகளை எடுங்கள் நீதியமைச்சரே உங்களால் கூட எமக்கு நீதியை பெற்றுத் தரமுடியாது என்பது எங்களுக்கு தெரியும் ஆனாலும் முயற்சியுங்கள் முஸ்லிம்களில் பலமான அமைச்சரே உங்கள் பலம் என்ன என்பதை பார்கதான் போகிறோம்

    Roomy Aslam

    ஏப்ரல் 21, 2012 at 8:18 முப

  17. பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ”நாங்கள் இதை ஒரு பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளாமல் அது தொடர்பிலே ஒரு பேச்சுவார்த்தை மூலமான ஒரு தீர்வை காணும் முயற்சிகளில் நான் இறங்கி இருக்கிறேன்” என்று அவரின் அறிகையில் தெரிவிக்கிறார் நாங்கள் இதை பெரிய விடயமாக எடுக்காவிட்டால் வீடு புகுந்து எமது பெண்கள் கற்பை பறித்தாலும் பெரிய விடயமாக எடுக்கவேண்டியது தில்லை உங்கள் அறிக்கையில் வசன பிழைகளா அல்லது உங்கள் சிந்தனயில் கோளாறா என்பதை விளக்க முடியவில்லை ஆனாலும் ஒரு பேச்சுவார்த்தை மூலமான ஒரு தீர்வை காணும்முயற்சி என்பதை வரவேட்கிரோன் தீர்வுக்கான அறிக்கைகளை விடுத்து உண்மையாக முயற்சியுங்கள்

    Saheed Ahamed

    ஏப்ரல் 21, 2012 at 8:25 முப

    • சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களே! முதலில் நீங்கள் வழமைபோல முயற்சியை மேட்கொண்டுள்ளேன் என்று எல்லா அரசியல் வாதிகளும் கூறும் பொதுவான அறிக்கையை வெளியிட்டு உங்களை நீங்களே திருப்திபடுத்திவிட்டீர்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்துகொள்ளுங்கள்.

      ஆனால் எமது முஸ்லிம் சமூகம் நீங்கள் விடும் அறிக்கையின் மூலமோ அல்லது உங்களைப் போன்று ஏனையா அரசியல் வாதிகளோ விடும் அறிக்கையின் மூலம் அமைதி அடையப்போவதில்லை. இது இலங்கையில் முதல் சம்பவம் அல்ல. மாவனல்லை,அனுராதபுரம்,பேருவள,பலபிட்டிய,தெஹிவள,மற்றும் இன்னும் பல இடங்களிலும் இவ்வாரான பல சம்பவங்கள் ஏற்கனவே நடந்துவிட்டன.அப்போதெல்லாம் வெறுமனே இவ்வாறு அறிக்கை விடுவதோடு எமது முஸ்லிம் தலைவர்கள் அதாவது அரசியல் தலைவர்களும், ஆன்மீகத் தலைவர்களும் அமைதி அடைந்து விடுவர்.

      வெளிப்படையாகவே கேட்கின்றேன்! இலங்கையில் முதுகெழும்புள்ள ஒரு முஸ்லிம் தலைமைத்துவம் உள்ளதா? எங்கே மார்தட்டுங்கள் பார்க்கலாம். எத்தனை முஸ்லிம் அரசியல் கட்சிகள்? எத்தனை முஸ்லிம் அமைச்சர்கள்? எத்தனை முஸ்லிம் பா. உ. கள்? என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். பாராளுமன்ற கதிரைகளில் காட்சியாளிக்கவும்.அமைச்சுப்பதவிகளில் அனுபவிக்ககவுமா? முஸ்லிம் சமூகம் முஸ்லிம் அரசியல்தலைவர்களை தெரிவுசெய்கின்றார்கள்? நான்தான் தலைவன்! இல்லை நான்தான் தேசிய தலைவன். இல்லை எங்களது கட்சிதான் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.என்று உங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் அரசியல் மடையர்கள் எப்போதாவது சமூகத்தைப் பற்றி ஒரு நிமிடம் சிந்தித்திருப்பீர்களா?

      நீங்களும் இந்த அரசில் ஒரு அமைச்சர்தானே? எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு ஜெனிவா சென்றீர்களே? இப்போது இந்தப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்கப்போகின்ரீர்கள்?
      திடிரென்று நடந்திருந்தால் உங்கள் அறிக்கைகள் ஆருதள்ளளிக்கலாம். ஆனால் இது மூன்று நாட்களுக்கு முன்னதாகவே பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு பள்ளி நிறுவாகம் பல தடவைகள் உலமா சபை மற்றும் அரசியல்வாதிகளையும் தொடர்புகொண்டும் முடியாமல் இந்த சம்பவம் நடந்துள்ளது.

      கேவலம்.வெட்கக்கேடு, உங்களால் முடியாவிட்டால் எமது இளைஞர்களின் கைகளில் விட்டுவிடுங்கள்! பிரச்சிசினை வரும் முன் மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் காப்பற்ற முடியாத எமது தலைவர்கள் அறிக்கயைமட்டும் வீட்டு விடுவார்கள். ஏன் முஸ்லிம் தலைவர்கள் உங்களுக்குள் ஒரு பொரிமுறை ஒன்று இல்லையா? அனைத்து தலைவர்களையும் சேர்ந்து கலந்து ஆலோசிக்கக்கூடிய வலிமுறையொன்றுதான் இல்லையா? அல்லது அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு அதிகாரம்,செல்வாக்கு,பலம், சக்தி, எதுவுமே இல்லையா? தனியாக முடியாவிட்டாலும் கூட்டாகவேனும் குரைக்க முடியுமல்லவா?

      நாளை மறுமை நாளில் அல்லாஹ் கேட்கும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்கப்போகின்றார்கள்? சற்று சிந்தியுங்கள்???????????????????????

      MUSLIM

      ஏப்ரல் 21, 2012 at 8:27 முப

  18. பேரினவாதிகளே ! நீங்கள் நினைத்ததை பாதுகாப்பு படைகள் கைகட்டியிருக்கு முடித்து விடுகிறீர்கள்
    அரசே உங்களில் செல்ல பிள்ளைகள் தம்புள்ளயில் தகர்த்தது மஸ்ஜித் மாத்திரம் அல்ல
    உங்கள் மீது முஸ்லிம்கள் சிறுக சிறுக கட்டி வந்த நம்பிக்கையை

    ஜெனீவாவில் நாங்கள்
    காட்டிய நாட்டுபற்றுக்காக
    நீங்கள் காட்டும் நன்றிக்கடன் – உங்கள் இனப்பற்று. இல்லை இனவெறி

    True lankan

    ஏப்ரல் 21, 2012 at 8:32 முப

  19. அறிக்கை ராஜதந்திர போட்டியில் முஸ்லிம் அமைச்சர்கள் எமக்கு தேவையானது உங்கள் அறிக்கைகள் அல்ல தீர்வு என்ன செய்யபோகிறீர்கள் பார்த்து பார்துகொண்டிருகிறோம்

    M.M. Ameez - Kalmunai

    ஏப்ரல் 21, 2012 at 8:35 முப

  20. மதத்தின் பெயரால் , அதிகாரத்தின் பெயரால் சட்டத்தை தனது கையிலெடுக்கும் சமுதாய முறைமையை தகர்த்தெறிய , இந்த சம்பவத்தை சமரசமாக தீர்ப்போம் அல்லது சட்டத்தின் முன் நிறுத்துவோம்.

    Gafoor Husain

    ஏப்ரல் 21, 2012 at 8:45 முப

  21. முஸ்லிம் websites கள் துணிகரமாக செயல்படுகிறது என்று நினைத்து மகிழ்ச்சி கொள்கொறேன் வளர் உங்கள் பணிகள் உங்களுக்கு எனது பிராத்தனைகள்

    Ilma Fareen

    ஏப்ரல் 21, 2012 at 8:47 முப

  22. அரசியல்வாதிகளே உங்களின் மேதாவி அறிக்கைகள் வேண்டும் தீர்வு வேண்டும்

    The Voice I am

    ஏப்ரல் 21, 2012 at 8:49 முப

  23. allahvin masjithai paathu kaakke arasiyal vaathikalai nambi payanillai.avarhal pathavi aasai pedeththa peyhal.ovvoru muslimum allahvidam kelungal.allah paathukaappaan insha allah.

    abdurrahman mi

    ஏப்ரல் 21, 2012 at 9:22 முப

  24. allahu akbar..

    armnilshad

    ஏப்ரல் 21, 2012 at 10:16 முப

  25. nam ondru paduwone toluhiyak kondum porumaiyak kondum allah widam udavi ketpom allah udavuvan

    safwan

    ஏப்ரல் 21, 2012 at 11:03 முப

  26. ஜெனீவாவில் நாங்கள்
    காட்டிய நாட்டுபற்றுக்காக
    நீங்கள் காட்டும் நன்றிக்கடன்

    rafeek

    ஏப்ரல் 21, 2012 at 11:43 முப

  27. நாங்கள் தான் இலங்கையில் ஆயுதம் தூக்காக சமூகம் என்ற பெருமையுடன் வாழ விடுங்கள்

    Truth finder

    ஏப்ரல் 21, 2012 at 1:18 பிப

  28. தம்புள்ளை மஸ்ஜித் அத்துமீறல் முஸ்லிம் அரசியல் சிவில் தலைமைகளுக்கான ஒரு சத்திய சோதனை..! முஸ்லிம் அரசியல் வாதிகள் தொடர்ந்தும் கோழைத்தனமான சரணாகதி அரசியல் செய்வதற்காக மௌனம் சாதிப்பின் உலமாக்களும் அறிஞர்களும் சிவில் தலைமைகளும் தமது கடமைகளை செய்ய முன்வர வேண்டும், பிளவுபட்டுள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளை வற்புறுத்தி ஒரு இடத்தில் அமரச் செய்து பொதுவான பிரச்சினைகளில் ஒரே நிலைப்பாட்டை சிவில் தலைமைகளுடன் இணைந்து எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிளவுபட்டுள்ள பெரும்பான்மையினரை விட ஒன்றுபட்டுள்ள சிறு பான்மையினர் பலம் மிக்கவர்கள் என்பதனை நிரூபிக்க வேண்டும். காடைத்தனங்களையும் அத்துமீறல்களையும் அவை எந்த தரப்பிலிருந்து வந்தாலும் ஏறுக்கொள்ள முடியாது. பேரின காடையர்களின் பணயக் கைதியாக அரசு தொடர்ந்தும் நடந்து கொள்ளுமாயின் முஸ்லிம் அரசியல் வாதிகள் தமது நிலைப்பாடுகளை மீள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.

    INAMULLAH

    ஏப்ரல் 21, 2012 at 6:10 பிப

  29. அன்புள்ள முஸ்லிம் நண்பர்களுக்கு, நான் இந்து மதத்தை சேர்ந்தவன். எனினும் தங்கள் மதத்தை மதிக்கிறேன். எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். நாம் சிறுபான்மை இனத்தவர்கள் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் ஒன்றாக இருந்த நாம் வடகிழக்கில் சில தமிழர்களின் தவறால் பிரிய நேர்ந்தது. ஆனால் அதன் பின் தொடர்ந்து நீங்கள் தமிழர் போராட்டத்தை எதிர்த்து சிங்கள அரசாங்கத்துடன் கைகோர்த்தீர்கள். ஐநாவில் எமக்கு எதிராக எல்லா முஸ்லிம் நாடுகளும் தமிழர்களுக்கு எதிராக வாக்களித்தன. ஐநாவில் சிங்கள உரிமை மீறல்களை நியாயப் படுத்தினீர்கள். பாகிஸ்தான் போன்ற நாடுகள் தமிழினம் அழிய ஆயுதம் கொடுத்தன. பல முஸ்லிம் அன்பர்கள் யுத்த முடிவை வெடிகொழுத்தி கொண்டாடினார்கள்.

    வரலாற்றில் நாம் தவறு செய்தோம், பதிலுக்கு நீங்களும் தவறு செய்ய சிங்கள இனவாதம் எங்களை பிரித்து விட்டது. எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கவில்லை. ஆகவே எங்கள் தொண்டைக்குழிகளும் அடங்கி இருக்கின்றன். நேற்று எங்கள் கோவில்கள், இன்று உங்கள் பள்ளிகள். இது நீங்கள் சிங்களத்துடன் கைகோர்த்தமைக்கான பரிசில். இனியாவது நாம் தமிழ் பேசும் மக்கள் என இணைவோம். அரசியல் ரீதியாக இணைந்து எங்கள் உரிமைகளை நிலைநாட்டுவோம். எங்கள் ஒற்றுமை ஆயிரம் ஆயுதங்களிலும் வலிமையானது. உரிமைகளை வென்றெடுப்போம். மானம் கெட்ட தனி நாடுகள் எங்களுக்கு தேவையில்லை. தீவிரவாதம் தேவையில்லை. நாம் உலகின் பெரும்பான்மைகள் சர்வதேச ரீதியில் வலுப் பெற்று முழு உரிமைகளை பெற்று வாழ்வோம். எவருக்கும் நாம் அடிமையில்லை, இது கடைசி வாய்ப்பு நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.

    Anbu Thamilan

    ஏப்ரல் 21, 2012 at 9:47 பிப

    • சகோதரர் அன்பு தமிழன் அவர்களே! இன,மொழி,மதங்களுக்கப்பால் மனிதம் என்பது மிக முக்கியம் வாய்ந்தது என்பது நீங்கள் அறியாததல்ல…,விடுதலைப் போராட்ட ஆரம்பத்தில் முஸ்லிம் இளைஞர்களின் பங்கு எத்தனை சத விகிதமென்பது தெரிந்திருக்கும்.ஆனால் ஒரு இளைஞன்கூட தற்போது உயிருடன் இல்லை ஏனென்றால் நயவஞ்சகமாக இயக்கத்துக்குள்ளேயே கொன்று விட்டார்கள்.1990 களில் என்ன நடந்தது? வயலுக்கு சென்றவர்களை சுட்டுக்கொன்றார்கள்?,பள்ளிக்கு தொழச்சென்றவர்களை சுட்டுக்கொன்றார்கள்? தூங்கிக்கொண்டிருந்தவர்களை அறுத்தும்,வெட்டியும் கொன்று குவித்தார்கள்?கர்ப்பிணித்தாயின் வயிற்றைக்கீறி சிசுவை எடுத்து பனை மரத்தில் விசிக்கி அடித்து கொன்றார்கள் ?அதுமட்டுமா?தாயா புள்ளையா ஒன்றாக வாழ்ந்த யாழ்ப்பாண எம் சகோதரர்களை மாற்றுத்துணிகூட எடுக்க விடாமல் விரட்டியடித்தார்கள்?இன்னும் எவ்வளவோ உள்ளன,,,,,,,,இருந்தபோதும் சேனல்4 ல் யுத்தக்குற்ற கானோளியைப்பார்த்த எல்லா முஸ்லிம்களும் அழுதார்கள்.என்ன காரணம்? அதுதான் மனிதம் …விடுதலைபோராட்டம் தோல்வியடைந்ததற்குக் காரணம் முஸ்லிம்களின் சாபமும் முக்கிய காரணமாகும்.நாங்கள் என்ன கேட்டோம்?உதவிதானே செய்தோம் உபத்திரம் செய்யவில்லையே?ஏன் எங்களை கொன்றீர்கள்?என்ன லாபம் கிடைத்தது?தவறு செய்த அனைவரும் தண்டனை அனுபவித்துதான் ஆகவேண்டும்.இது அரசாங்கத்துக்கும் பொருந்தும்.முள்ளிவாய்க்காலில் இறந்த ,,,,, ஆயிரம் அப்பாவி ஆத்மாக்களும் கேட்டுக்கொண்டே இருக்கும்…….படைத்தவன் பார்த்தவனாக இருக்கின்றான்…….பொறுத்தவன் அரசாள்வான் பொங்கினால் காடேர்வான்…………தமிழர்களோ,சிங்களவர்களோ எங்களுக்கு எதிரிகள் அல்லர் எங்கள் உடன்பிறவா சகோதரர்கள் என்பது உறுதி….தமிழீழம் வேண்டாம் இன்னும் இழப்பதற்கு ஏதுமில்லை இன்னுமொரு முள்ளிவாய்க்கால் அவலத்தை தாங்கக்கூடிய சக்தி எங்கள் யாரிடமுமில்லை…..ஒன்றுபட்ட இலங்கைக்குள் மூவின மக்களும் அவரவர் கலாச்சரத்துடனும்,சுயமரியாதையுடனும் வாழ்ந்தால் போதும்…………….நன்றி

      mahroof mohideen

      ஏப்ரல் 22, 2012 at 3:31 முப

  30. singala nattil walnthu warum sirupanmai inaththawar meethu nadai perum adakku muraikal indru netralla, endralum emathu muslim arasiyal wathikal sila welaikalil muthukelumbu illathawarkai nadandu kolkirarkal, endralum intha sambawathtai partha engalal kooda amaithiyay irukka mudiyamal ullathu. insha allah ellam walla allah ellawatrayum parthukkondu irukkiran,nichchayamaha awanin thandanai ipperinawathikalukku kidaikka du,a saikirom. muslim arasiyal wathihalukkum,emathu ulama sabaikkum ippothawathu weeram waruma? ???????????????????????????? parppom. ethu eppadiyanalum punitha al-quranai veesi erinthathai emmal anumathikkawe mudiyathu. arasiyal wathikale,,,,,, ungalai makkal thernthu eduththathu ungal wairu walakkawa?????????????????? emathu nattil muslimgalayyum islaththayum pathukarungal.

    nazla rishard

    ஏப்ரல் 22, 2012 at 1:02 முப

  31. கடந்த பல மாதங்களாக இலங்கை அரசு மீதான சர்வதேச அலுத்தம் மிக உச்ச கட்டத்தை அடைந் வந்தது யாவரும் அறிந்த ஒன்றே. பயங்கரவாதம் என்ற பெயரில் பல நூற்றுக் கணக்கான சிவில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலிதான் இதற்கு காரணம். இந்த நிலையில் மேற்குலகின் தீவிர கண்டன பேரொலிகளையும், அலுத்தங்களையும், இலங்கை அரசுக்கு எதிரான பிரச்சாரங்களையும் தடுத்து நிறுத்த வேண்டிய அல்லது மேற்குலகின் இலங்கை தொடர்பான என்னதை மாற்றி அமைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது.
    அந்த அடிப்படையில் மேற்குலகின் இலங்கை தொடர்பான என்னதை மாற்றி அமைக்கும் முயற்சியிகளில் ஒன்றுதான் இந்த பள்ளிவாசல் தகர்ப்பு. அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று சிந்திக்கின்றீர்களா? இன்றய நவீன மேற்குலகின் முதற் கொள்கை அல்லது கோட்பாடு Anti-Islamism என்பதனையும், இஸ்லாதிற்கும், இஸ்லாமியர்களுகும் எதிராக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு அம்சமும் நவீன மேற்குலகம் வரவேற்கும் என்ற யதார்தமும் நன்கு அறிந்து கொள்ளப்பட்டு அதன்படி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தான் இந்த பள்ளிவாசல் உடைப்பு. இப்போது இலங்கை அரசின் போர் குற்றங்கள் மெலுகு பூசி மறைக்கப்பட கூடிய வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை. இது இலங்கை அரசின் திட்டமிட்ட ஒரு செயல் இல்லை என்று வாதிட முடியும். அப்படி என்றால், இது அரசின் திட்டமிட்ட செயல் இல்லை என்றால் ஏன் அரசினால் இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை? இலங்கை பொலிஸ் படை, இராணுவ படை முன்னிலைல் நடை பெற்ற இந்த வண்செயலினை ஏன் அவர்கள் தடுத்து நிறுத்தவில்லை? இதே நிலையில், முஸ்லீம்கள் பௌத்த மத ஸ்த்தானம் ஒன்றை தகர்க்க ஒன்று கூடி இருந்து இருந்தால் பொலிஸ் மற்றும் இராணுவம் இது பொன்று வேடிக்கை பார்துக்கொன்டு இருந்து இருப்பார்களா?
    இதற்கும் இலங்கை அரசிற்கும் எந்த ஒரு பின்னணியும் இல்லை என்று வாதிட முன்வருபவர்கள், இந்த மத வண்முறைக்கு எதிராக இன்று வரைகும் என்ன தீர்மானம் மேற்கொன்டுள்ளது என்றும் அல்லது என்ன தீர்மானம் கொன்டு வரப்போகிரார்கள் என்றும் உறுதியாக சொல்வார்களா? ஒரு அரசியல் மேடையில் தகராரு செய்யும் பௌத்த பிக்குவை பொலிஸார் அடிக்கின்றார்கள், போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் செய்யும் பிக்குகளுக்கு உதைக்கின்றார்கள், அப்பிடி இருக்கின்ற போது ஒரு மத வண்முறையில் ஈடுபடுகின்ற இவர்களை ஏன் கைது செய்ய முடியாது?
    இந்த வண்முறைக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்று சொன்னால், இலங்கை அரசு இதற்கு எதிராக நியாயமானதும் நேர்மையானதுமான, மன உலைச்சலுக்கு ஆலாகி இருகின்ற இலங்கை முஸ்லிம்கள் திருப்திபடும் வகையில் சிறந்தொரு தீர்மானம் கொன்டு வர வேண்டும். அதற்கு இலங்கை அரசு தயாராக இருக்கின்றதா? அப்படி ஒரு தீர்மானம் இலங்கை அரசினால் மிக அவசரமாக வெளியிடப் பட்டு வண்முறை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு நீதி வழங்கப்படுமாக இருந்தால் இந்த வண்முறைமுக் அரசுக்கும் தொடர்பு இல்லை என்று புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.
    இது தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகளினதும், பொது மக்களினதும் கடமை என்ன?
    வெறுமனே கண்டன அறிக்கைகள் விடுவதினாலோ, உரத்து கோஷமிடுவதினாலோ, பலி வாங்குவதன் மூலமோ, கடை அடைப்பு, கல்வீச்சு செய்வதன் மூலமோ இதற்கு தீர்வு கண்டுவிட முடியாது. மாற்றமாக அரசாங்கத்தில் இணைந்துள்ள அத்தனை முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகணசபை, பிரதேச சபை இப்படி எல்லா பிரிவுகளில் இருந்தும் அரசாங்கத்திற்கு வழங்குகின்ற ஆதரவை ரத்து செய்ய வேண்டும். ஆனால் இலாப நோக்கத்தை கொள்கையாக கொன்டிருகும் நமது யரசியல் தலைவர்கள் இதற்கு ஒரு பொதும் உடன்பாடு கொள்ளப் போவதில்லை.
    நான் எல்லா அரசியல் வாதிகளையும் கூடதவர்கள் என்று சொல்லவில்லை, ஒரு சமுகத்தினுடைய அழிவை ஆரம்பத்திலையே தடுத்து நிறுத்த முயற்சி செய்ய புரப்படுங்கள் என்றுதான் வேண்டிக் கொள்கிரேன். அதே போன்று பொது மக்களாகிய நமக்கும் கடமை உன்டு. அந்த கடமை என்ன என்று அடுத்து அடுத்து வரப்போகும் தேர்தல்களில் வெளிப்படத்த முடியும். நம்மிடம் ஒருமித்த குரல் இருந்தால், ஒன்று பட்டு செயற்பட்டால் அதற்குரிய பலனை நாம் அறுவடை செய்வோம் இல்லை எனில் மீண்டும் மீண்டும் நாம் பாதிக்கப்படுவோம் என்பதில் சந்தேகம் இல்லை.

    Zeenath.B

    ஏப்ரல் 23, 2012 at 3:03 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: