Lankamuslim.org

One World One Ummah

இஸ்லாமிய நோக்கில் பூகம்பம் சுனாமிகளிலிருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி?

with 4 comments

முஹம்மத் ஜான்ஸின்
கடந்த ஏப்ரல் 11 2012 அன்று இந்தோனேசியாவின் சுமாத்ரா பிரதேசத்தில் கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து இலங்கையிலும் நில அதிர் வுகள் உணரப்பட்டன. சற்று நேரத்தின் பின்னர் சுனாமி ஆழிப் பேரலைகள் இலங்கையைத் தாக்கலாம் என நேரங்களும் வரையறுக்கப்பட்டன. இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த அத்தனை மக்களும் பித்துப் பிடித்தவர்கள் போல் வீடகளை விட்டு வெளியேறி உயரமான இடங்களை நோக்கி நகர்ந்தனர். இரவு நெடுநேரம் வரை மக்களில் பலர் வீதிகளிலேயே நின்றனர்.

இவ்வாறான வேளைகளில் என்ன செய்ய வேண்டுமென இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகின்றது. இவ்வாறான வேலைகளில் அதிகமானவர்கள் தொலைக்காட்சியையும் வானொலிகளையும் மற்றும் ஒருவரையொருவர் சந்தித்து என்ன நடக்கப் போகிறது என்பதையறியவே ஆவலாக இருந்தனர். ஆழிப்பேரலை ஏற்படுமிடத்து அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியாது. அதன் அழிவுகள் மிகப்பயங்கரமானதாக இருக்கும். கடந்த 2004இல் 40 அடிக்கு தண்ணீர்வந்தது இம்முறை அதே மட்டத்தில் வரும் என்றெல்லாம் திட்டமிட முடியாது. ஆனால் அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி தௌபா எனும் பாவமீட்சியாகும்.

எனவே பூகம்பம் ஏற்பட்டாலோ அல்லது பூகம்பத்தைத் தொடர்ந்து சுனாமி எதிர் பார்க்கப்பட்டாலோ அவ்வேளைகளில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான அமல் பாவமன்னிப்பாகும். இறைவனிடம் எமது பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு இனிமேல் பாவங்களைச் செய்ய மாட்டோம் என்று உறுதி வழங்க வேண்டும். அத்துடன் எதிர் நோக்கியுள்ள பூகம்பம் அல்லது சுனாமி அல்லது வேறு ஏதாவது அழிவுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும். மேலும் அல் குர்ஆன் ஓதுதல் திக்ர் செய்தல் மற்றும் சுன்னத்து தொழுகைகளை தொழுது இறைவனை விட்டால் நம்மை வேறு யாரும் பாதுகாக்க மாட்டார் என்ற நிலைக்கு மனதை கொண்டு வரவேண்டும். என்பது முதன்மையானது மற்ற பாதுகாப்பெல்லாம் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தான்.

‘அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிராத்தனை செய்யுங்கள்;) ”எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”” (அல்குர்ஆன் 2:286)

இன்று விஞ்ஞானத்தின் உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தில்இ யாருமே சாதித்திடாத சாதனைகளை நினைத்து நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம் இந்த சாதனைகள் ஒரு புறத்தில் இருந்தாலும் இன்று இவ்வுலகை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கும் அபாயங்கள் மறுபுறத்தில் இருந்து கொண்டு இவ்வுலகை நிம்மதியின்றி இருக்கச் செய்து கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கின்ற அளவுக்கு ஆபத்துக்கள் நம்மை சூழ்ந்து இருப்பதை நாம் அவ்வப்போது உணர்ந்து வருகிறோம்

உலகின் துருவ பிரதேசங்களான ஆHடிகாஇ அண்டாடிகா போன்ற பனி பிரேதசங்களிலிருந்து பனி மலைகள் உருகி வருவதாகவும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு இதன் பாதிப்பால் கடலின் நீர்மட்டம் கிட்டத்தட்ட 7 மீட்டருக்கு மேல் உயரக் கூடிய நிலையும் இதனால் பல நாடுகளின் நகரங்கள் நீரில் மூழ்கக் கூடிய அபாயங்களும் இருப்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கூறி வருகிறார்கள். இதோடு ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு எரிமலை வெடிப்பு பாதுகாப்பற்ற பயணங்கள் இதைவிட இன்று எல்லோரையும் பீதியடையச் செய்து கொண்டிருக்கின்ற ப+கம்பங்கள்இ எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கின்ற அச்சம் இன்று உலக மக்கள் அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்லாவற்றிற்கும் வழிகாட்டக் கூடிய திருக்குர்ஆனின் பார்வையில் இருந்து இந்த அழிவுகளைப் பற்றியும் இந்த அழிவில் இருந்து நம்மைத் தற்காப்பது எப்படி? என்பதையும் நாம் ஆராய்வோம்.

அநியாயம் விளைத்த சமுதாயத்தினர்கள் மத்தியில் அல்லாஹ் அவர்களின் செயல்களை திருத்துவதற்க்கு ஒவ்வொரு தடவையும் சில சோதனைகள் மூலம் குறிப்பிட்ட அவகாசத்தை கொடுத்தே வந்திருக்கின்றான் அதையும் அவர்கள் பொருட்படுத்தாமல் தன் செயல்களிலிருந்து மீளாமல் தொடர்ந்து கொடுமைபுரிகிறவர்களாக இருக்கும் பட்சத்தில் அல்லாஹ் அவனது தூதர்களையும் இறை நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றி இறை நிராகரிப்பாளர்களை கொடுமைபுரிந்த அந்த சமுதாயத்தினரை முற்றிலும் அழித்திருக்கின்றான்.
எந்த சமுதாயம் இறைவனை நிராகரித்து மன இச்சைகளை பின்பற்றி இறைத் தூதர்களுக்கு கொடுமையிழைத்து அநியாயம் செய்ய தழைப்படுகிறார்களோ அவர்களுக்கு இறைவன் தன் செயல்களை திருத்திக் கொள்வதற்க்கு குறிப்பிட்ட அவகாசம் அளிக்கின்றான். அதிலிருந்து அவர்கள் மீளவில்லை என்றால் அழிவு அவர்கள் மீது சாட்டப்படுகின்றது. இது இறைவனின் நியதியாகும்.

உதாரணத்திற்கு திருகுர்ஆனிலிருந்து சில சமுதாயங்கள் அடைந்த கதியை பார்ப்போம்

நூஹ்(அலை) அவர்களை அல்லாஹ் தன் வழிகாட்டுதலின் படி அவர் சமூகத்தினரிடம் அனுப்பினான். அந்த சமூகத்தினர்கள் நூஹ்(அலை) அவர்களை பொய்யரென்று தூற்றிவிட்டார்கள். இறுதியில் நூஹ்(அலை) அவர்களையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அல்லாஹ் காப்பாற்றினான். அநியாயம் செய்த அந்த சமூகத்தினரை நீரில் மூழ்கடித்து அழித்தான்.

ஆத்(து) சமூகத்தினரிடம் ஹுது நபியை அல்லாஹ் சத்தியத்துடன் அனுப்பினான் அந்த சமூகத்தினர் ஹுது நபியை நிராகரித்து கொடுமை புரிகிறவர்களாக இருந்த காரணத்தால் ஹுது நபியையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அல்லாஹ் காப்பாற்றினான். நிராகரித்த அந்த மக்கள் அழிக்கப்பட்டார்கள். அவர்களை அல்லாஹ் வேருடன் களைந்து தூக்கி எறிந்தான்.

லூத் சமூகத்தினரிடம் அல்லாஹ் தன் தெளிவான சான்றுகளுடன் அம் மக்களுக்கு நேர்வழிகாட்ட லூத் நபியை அனுப்பினான். அவர்கள் லூத் நபி அவர்களை நிராகரித்ததுடன் உலகில் இதுவரை யாருமே செய்யாத அநியாயத்தை செய்து வந்தார்கள். ஆண் பெண்களை விடுத்து ஆணுடனே தன் இச்சைகளை தீர்த்து வந்தார்கள். இதன் விளைவாக அல்லாஹ் அவர்கள் மீது சுட்ட களிமண் பொழிவை ஏற்படுத்தி அந்த ஊரை தலைகீழாக புரட்டிவிட்டான். லூத் நபியைர்ம் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அல்லாஹ் காப்பாற்றினான்.

மத்யன்வாசிகளிடம் அல்லாஹ் ஷஷுஐபை தன் நேர்வழிகாட்டுதலின் படி அனுப்பினான். அம் மக்கள் அவரை பொய்யரென்று கூறி இறை நிராகரிப்பில் மூழ்கி இருந்த காரணத்தால் அழிவு அவHகள் மீதும் சாட்டப்பட்டது. அல்லாஹ் மாபெரும் நில நடுக்கத்தை ஏற்படுத்தினான். அவர்கள் வீடுகளில் தலைகுப்பற வீழ்ந்து கிடந்தார்கள். மேலும் ஹுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அல்லாஹ் காப்பாற்றினான்.

மேலும் மூஸா(அலை) அவர்களை தன் சான்றுகளுடன் பிர்அவுனிடமும் அவனது மக்களிடமும் நேர்வழிகாட்ட அனுப்பினான். ஆனால் பிர்அவு னும் அவனைச் சார்ந்தவர்களும் கர்வம் கொண்டார்கள் மூஸா(அலை) அவர்களை நிராகரித்ததுடன் அவரை மாபெரும் சூனியக்காரர் என்று கூறி அவரது சான்றுகளை மறுத்ததுடன் அவரையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அழிக்க புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் பொழுது அல்லாஹ் மூஸா(அலை) அவர்களையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றினான். மேலும் பிர்அவுனையும் அவனது கூட்டத்தார்களையும் கடலிலே மூழ்கடித்து அழித்தான்.

இந்த வரலாற்று நிகழ்ச்சிகளையெல்லாம் நமக்கு ஒரு படிப்பினையாக இறைவன் அமைத்து தந்துவிட்டான். அதோடு அல்லாமல் இன்றைக்கும் சில சமூகத்தினரின் அழிவுச் சின்னங்கள் மறையாமல் நம் கண் முன்னே காணக் கிடக்கின்றன. இந்த உண்மைகளை சிந்தித்து நாம் படிப்பினை பெறவேண்டும் என்று அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகிறான்.

முன்பு வாழ்ந்து சென்ற புவிவாழ் மக்களுக்குப் பின்னர் பூமிக்கு வாரிசாக வந்துள்ள இவர்களுக்கு இந்த உண்மை படிப்பினை தரவில்லையா-? (அது யாதெனில்) நாம் நாடினால் இவர்களின் பாவங்கள் காரணமாக இவர்களை தண்டித்திட முடியும் என்பது! (ஆனால் இவர்கள் இத்தகைய படிப்பினை மிக்க பேருண்மைகளில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருக்கின்றார்கள். (அத் 7:100).
இறைவன் கூறுகின்றான்.

இறுதி தீர்ப்புக்குரிய நேரத்தைப் பற்றி அது எப்பொழுது (நிகழும்) வரும் என்று இவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள் (நபியே) நீர் கூறும் அதைப் பற்றிய அறிவு என் இறைவனிடமே உள்ளது அவனே அதற்க்குரிய நேரத்தில் அதை வெளிப்படுத்துவான். வானங்களிலும் பூமியிலும் (உள்ளவர்களுக்கு) அது மிகக் கடுமையான நேரமாயிருக்கும் அது திடீரென்று தான் உங்களை வந்தடையும்”. (அத் : 7:187).
மற்றுமொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

உங்களுடைய இந்த எச்சரிக்கை உண்மையாக இருந்தால் அது எப்பொழுது நிறைவேரும் என்று அவர்கள் கேட்கின்றார்கள். (நபியே) நீர் கூறும்! எனக்கு நானே பயனளித்து கொள்ளவும் நஷ்டம் விளைவித்து கொள்ளவும் கூட எனக்கு அதிகாரம் இல்லை. ஆனால் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தே இருக்கின்றன. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு தவணை உண்டு. அவர்களுடைய இந்த தவனை பர்த்தியாகிவிட்டால் அவர்கள் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள். (நபியே) நீர் கேளும்! நீங்கள் என்றைக்காவது சிந்தித்திருக்கின்றீர்களா? அல்லாஹ்வின் வேதனை இரவிலோ பகலிலோ தீடீரென்று உங்களிடம் வந்துவிட்டால் (அப்பொழுது உங்களால் என்ன செய்ய முடியும்?) (அத் 10:48-50).

கியாமத் நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் மட்டுமே இருக்கின்றது அதை அவன் மறைக்கப்பட்ட விசயமாக்கி விட்டான். அதே சமயத்தில் அது திடீரென நாம் எதிர்பார்க்கா சூழ்நிலையில் நம்மை வந்தடையும் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருக்கின்றான் அந்த நாளின் நிகழ்வு எப்படியிருக்கும் என்றால்:-

அல்லாஹ் கூறுகிறான்
நிகழ வேண்டிய அந்த நிகழ்ச்சி நிகழ்ந்து விடும்போது அது நிகழ்வதைப் பொய்யெனக் கூறுபவர் எவரும் இருக்க மாட்டார் அது தலை கீழாக புரட்டக் கூடிய ஆபத்தாயிருக்கும். அந்த நேரம் பூமி ஒரே உலுக்காக உலுக்கப்படும் மேலும் மலைகள் பொடி பொடியாக்கப்பட்டு பரத்தப்பட்ட புழுதியாகிவிடும். (அத் 56:1-6).

மேலும் அல்லாஹ் கூறுகிறான்
எந்த நாளில் பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ அதன் பின்னர் இன்னொரு பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ அந்த நாளில் சில இதயங்கள் பயந்து நடுநடுங்கிக் கொண்டிருக்கும். அவர்களின் பார்வைகள் அச்சத்தால் கீழே தாழ்ந்து விட்டிருக்கும் (அத் 79:6-9).

மேற்கண்ட வசனத்திலிருந்து பின்னால் நாம் மாபெரும் பூகம்பத்தை எதிர்நோக்க வேண்டியிருப்பது உணர்த்தப்படுகிறது. முஹம்மது நபி(ஸல்) அவர்களும் மூன்று மாபெரும் பூகம்பத்தைப் பற்றி அறிவித்துள்ளார்கள். அது பெரிய அளவில் நடக்க இருப்பவை இதுவும் உலக அழிவிற்குண்டான காரணங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அல்லாஹ் இந்த உலகத்தை அழித்திட கையாளுகின்ற எத்தனையோ வழிமுறைகளில் முக்கியமாக இந்த பூகம்பத்தை ஏற்படுத்துவான் காரணம் இவைகள் முற்றிலும் இறை வலிமையால் ஏற்படக் கூடியது.

ஆனால் இன்று உலகெங்கும் ஆங்காங்கே ஏற்படுகின்ற நில நடுக்கங்களும் அதனால் ஏற்படுகின்ற உயிர்சேதங்களும் பொருட் சேதங்களும் எதனை உணர்த்துகின்றன? கருணையின் வடிவான இறைவன் தக்க காரணமின்றி எதையும் அழிக்கக் கூடியவனா? உலகத்தைப் படைத்து பரிபாலித்து வரும் அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் தான் இவைகள் எல்லாம் நடை பெறுகின்றதா? அப்படியானால் எந்த காரணத்திற்காக இவைகளை நம்மீது காட்டுகின்றான்? என்பதை சிந்திப்போமாகின் இன்றைய உலகத்தினர்களுடைய நிலையினை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

படைப்பினங்களை பாதுகாக்கக்கூடிய இறைவன் மக்களை காரணமின்றி அழிப்பது அவனது நியதியில் இல்லை. தக்க காரணமின்றி அல்லாஹ் எதையும் படைப்பதும் இல்லை. அது போல் தக்க காரணமின்றி அல்லாஹ் எதையும் அழிப்பதும் இல்லை.

மேலும் கூறுகின்றான்.
எத்தனையோ ஊர்களை நாம் அழித்துவிட்டிருக்கிறோம் இரவு நேரத்தில் அல்லது நன்பகல் நேரத்தில் அவர்கள் துயிலில் ஆழ்ந்திருந்த போது திடீரென்று நம்முடைய வேதனை அவர்களை தாக்கியது. அவ்வாறு நம்முடைய வேதனை அவர்களை தாக்கிய போது அவர்களால் எதையும் கூற இயலவில்லை. உண்மையிலே நாங்கள் அக்கிரமக்காரர்களாகத் தான் இருந்தோம் என்று கூக்குரலிட்டதைத் தவிர.

இன்னொரு வசனத்தில் கூறுகிறான்
இதற்க்கு முன்பு நாம் எந்த ஊரை அழித்திருக்கின்றோம் அதற்கு ஒரு குறிப்பிட்ட காலத் தவணை நிர்ணயிக்கப்பட்டே இருந்தது. எந்தச் சமூகத்தினரும் தமக்குரிய காலத் தவணை முடியும்ம் முன்பே அழியவும் முடியாது பின்பு வாழவும் முடியாது. (அத் : 15:4-5).

ஆகவே இன்று ஆங்காங்கே நடக்கும் பூகம்பங்கள் நம்முடைய தீயச் செல்களை திருத்திக் கொண்டு வாழ ஒரு அவகாசம் தான். இதை நாம் உணர்ந்து நம்முடைய செயல்களை சீர்திருத்திக் கொள்ளவில்லையென்றால் பின்னால் ஒரு மாபெரும் அழிவை சந்திக்க வேண்டி வரும். இது குறிப்பிட்ட சமூகத்தினர் மீதோஇ குறிப்பிட்ட நாட்டின் மீதோ இல்லை உலகம் முழுவதிலுமோ ஏற்படலாம்.

நடந்து முடிந்திருக்கின்ற பூகம்பங்கள் நம்முடைய செயல்களை திருத்திக் கொள்ள ஒரு அவகாசம் என்றால் நாம் இதிலிருந்த நிறைய படிப்பினைகள் பெறவேண்டியுள்ளது. காரணம் நாம் மறுமையின் வெற்றியை அடைய இங்கு சோதனைக்காக அனுப்பப்பட்டவர்கள்.நாம் இது போன்ற அழிவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முதலில் நாம் எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டுள்ளோம் என்பதினை கருத்தில் கொண்டு நம்முடைய நிலைகளை சரிசெய்து கொண்டு அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்து வாழக் கூடிய இறை நம்பிக்கையாளராகத் திகழ வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்.
உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் யாரெனில் அல்லாஹ்வின் பெயர் கூறப்படும் போது அவர்களுடைய உள்ளங்கள் அஞ்சி நடுங்கும். மேலும் அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை அதிகமாகிவிடும். மேலும் அவர்கள் தங்களுடைய இறைவனையே சாந்திருப்பார்கள். (அத் 8:2).

இப்படி உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக இறை வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நம்மை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றுக் கொள்கிறான். முன்பு வாழ்ந்து சென்றவர்களில் எப்படி ஒவ்வொரு தடவையும் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட இறை நம்பிக்கையாளர்களை காப்பாற்றினானோ அதே மாதிரி நம்மையும் காப்பாற்றுவான் அவனை முற்றிலும் சார்ந்திருக்கும் பட்சத்தில்

அல்லாஹ் கூறுகின்றான்.
எவர் தம்மை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து செயல் அளவிலும் நன்னடத்தையை மேற்க்கொள்பவராய் இருக்கின்றாரோ அவருக்குரிய நற்கூலி அவருடைய இறைவனிடம் அவருக்கு உண்டு. மேலும் அத்தகையவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் (அத் 2:12).

ஆகவே முற்றிலும் அல்லாஹ்வை சார்ந்திருப்பது தான் இந்த பூகம்பத்தின் அழிவிலிருந்து நம்மை காத்துக் கொள்ள கூடிய தீர்வாகும்.

அப்படி அவனை சார்ந்திருக்கும் பட்சத்தில் எப்படிப்பட்ட அழிவு வந்தாலும் நாம் சிறிதும் கவலையோ அச்சமோ படவேண்டிய அவசியமில்லை. ஆகவே நாம் நம் கடமைகளை சரிவர நிறைவேற்றி முற்றிலும் அல்லாஹ்வை சார்ந்து வாழ்வோமாக! நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்து நிற்க்க வேண்டும். (அத் 5:11)

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 12, 2012 இல் 8:48 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. சகோதரர் ஜான்ஸின் அவர்களே,

  மனிதனுக்கு மனிதன் செய்த அநியாயத்துக்கு, அநியாயமிழைக்கப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை
  அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பது, இவ்வளவு எழுதத் தெரிந்த உங்களுக்கு தெரியாமலிருக்க முடியாதல்லவா?

  அப்படி என்றால், தயவுசெய்து, மவ்லவி அஷெய்க் பைசர் மதனியிடம், அவரை காபிர் என்று கத்தியதட்கும்,
  ஜனாப் ஜெலீல் ஆசிரியர் அவர்களிடம், அவரை ஏக வசனத்தில் அழைத்து அல்லோர் முன்னிலையிலும் திட்டியதட்கும்,
  யாழ்ப்பாணம் சின்னப் பள்ளிவாசலில் குழப்பம் விளைவித்து, மஹல்லா வாசிகளை மோசமாக வசை பாடியதற்கும்
  உரியவர்களிடம் சென்று உளப்பூர்வமாக மன்னிப்பை பெற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் அடுத்த அழிவு, தண்டனை
  எப்பொழுது வரும் என்பது நமக்குத் தெரியாது.

  Iqbal

  ஏப்ரல் 12, 2012 at 10:35 பிப

 2. இது கட்டுரையுடன் தொடர்பு படாத கருத்து. இக்பால் சொன்னது போல் நடந்ததட்கு ஏதாவது நன்கு சாட்சிகள் உள்ளனவா? அல்லது சொன்னவர் தான் அவ்வாறு சொன்னதாக ஒப்பு கொண்டார. சம்பவ இடத்தில் இல்லாதவர் அதைப் பத்ரி பேச தகுதியட்றவர். இறைவனை பயந்து கொள்ளுங்கள். வீணான பாலிஸ் சுமத்தல்கள் வேண்டாம்.

  Janson

  ஏப்ரல் 16, 2012 at 9:24 முப

 3. பள்ளிவாசல் கட்டுவதை தடுப்பது காபிரின் செயலல்லவா என்ற கேள்வியே கேட்கப்பட்டது. அது கேள்வி. ஆனால் சில இட்டுக்கட்டுபவர்கள் அதை மன்றி கபிர் என்று கூறி விட்டார் என்று கூறுகின்றனர். பள்ளிவாசல் ஜான்சின் குழுவினரால் கட்டப் படுகிறது. கட்டவிடாதவநிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி ஜன்சினிடம் கேட்கப் படுகிறது. மடையர்களுடன் விவாதத்துக்கு செல்லாதே என்று நபி முகம்மத் ஸல் கூறியுள்ளது இதனாலோ என்ன்னவோ.

  Janson

  ஏப்ரல் 16, 2012 at 9:32 முப

 4. நான்கு சாட்சி என்பது தண்டனை வழங்குவதற்கான நிபந்தனை.
  மூறு சாட்சி இருந்தால் செயல நடக்கவில்லை என்று ஆகிவிடாது.
  ஒருவர் இரண்டு சாட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு விபச்சாரம் செய்தால் அது
  பாவமில்லை என்று அர்த்தமாகிவிடுமா?

  அஷெய்க் பைசல் மவ்லவியை ”காபிர்” என்று கத்தியது, பள்ளி ரூமுக்கு
  இரவில்…. அனுப்பி ரகளை பண்ணியது, பின்னர் விசாரணைக்கு வந்தேன் எனக் கூறிக் கொண்டே
  அங்கே போய் பயமுறுத்தும் பாணியில் பேசியது, …., மஹ்ரிபின் பின்னர் நடை பெற இருந்த
  கூட்டத்தை …… அசருக்குப் பின்னர் ஆரம்பித்தது, மூத்த ஆசிரியர் ஜெலில் அவர்களை ஈக வசனத்தில் ஏசியது,
  ….., பள்ளியில் கூட்டம் நடக்கும் பொழுதே இவரின் சகா மெயின் சுவிட்ச்சை ஒப் பண்ணி பள்ளியை
  இருட்டாக்கியது., கூட்டத்தை முறையாக நிறைவு செய்யாமல் வேனில் ஓடியது, இது குறித்து செய்தி வெளியிட்ட…
  தளத்தை முடக்க தெஹிவளை போலீசில் முறைப்பாடு பதிவு செய்து ……. இதெல்லாம் பற்றி என்ன சொல்லப் போகின்றீர்கள்?

  ….. என்ற நிலைப்பாடுதான். செய்த …. குறித்து கொஞ்சமும்
  கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.

  பள்ளியை கட்டுவதன் நோக்கம் தூய்மையானதாக இருக்க வேண்டும். குர்ஆன், நபிவழி அடிப்படையில், நூதனங்கள், இடைச் சொருகல்கள்
  இல்லாமல் தொழுகை நடாத்தும் மவ்லவியை பள்ளியை விட்டு விரட்டவும், வழக்கிழந்து போயுள்ள, ராத்திபு, கபுராளி துவா, ”தங்கள்” வருகை, திக்ரு மஜ்லிஸ் என ………………………………………………. போன்ற இஸ்லாத்துக்கு முரணான செயல்களை பள்ளியில் அடாத்தாக நுழைக்க சந்தர்ப்பம் அமைப்பதற்காக பள்ளி கட்டுமானப் பணி என்ற ஒன்றை
  கையில் எடுத்தால்,…… இவரின் தோழர் கிராம அதிகாரி ஜிநூசின் பேட்டி .. இணையத்தளம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது. அதில் அவர் தெளிவாகவே
  சொல்லிவிட்டார் நோக்கத்தை. மவ்லவியை மாற்ற வேண்டும், மேலே சொன்ன விதமான மார்க்க விரோத அனாச்சாரங்களை நுழைக்க வேண்டும் என்பதனை……

  அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கின்றான் என்ற அச்சம் உங்களுக்கு இல்லையா?

  Iqbal

  ஏப்ரல் 16, 2012 at 10:59 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: