Lankamuslim.org

One World One Ummah

கல்முனை மாநகர சபையில் 16 ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம்

leave a comment »

ஏ.எல்.பழுலுல்லாஹ்: கல்முனை மாநகர சபையில் 16 ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு 30.03.2012 பி.ப 3.00 மணியளவில் முதல்வர் செயலகத்தில் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள் தலமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர்கலான ஏ.ஆர்.அமீர், ஏ.எம்.பறகதுல்லாஹ், ஐ.எம்.பிர்தௌஸ், பொறியியலாளர், கணக்காளர் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

ஆயுர்வேத மருந்து பரிசோதகர், சாரதி, சுகாதார தொழிலாளி, காரியாலய காரிய சகாயர், நூலக உதவியாளர், தூதுவர், சந்தைக் காப்பாளர், சந்தைத்தொழிலாளி, காவலாளி, வேலைத்தொழிலாளி ஆகிய வெற்றிடங்களுக்கான நிரந்தர நியமனங்களுக்காக மாநகர சபையினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சை 28.03.2012ம் திகதி மாநகர சபையில் இடமபெற்றது. அந்நேர்முகப் பரீடசையின் புள்ளிகள் அட்டிப்டையில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டது.

இந்நியமனங்களானது இன, மத, பிரதேச வேறுபாடு இன்றி முதல்வர் அவர்கலாள் வழங்கப்பட்டிருப்பதாகவும். இந்நியமனங்களை பெற்றவரகள் பொறுப்புனரசியுடனும் இன்முகத்துடனும் கடமையாற்ற வேண்டும் எனவும் மாநகர சபை உறுபினர் ஏ.ஆர்.அமீர்; இதன்போது தனதுரையில் தெரிவித்தார்

இதன்போது உரை நிகழ்த்திய ஆணையாளர் – நியமன அதிகாரி என்ற அடிப்படையில் எனது மேல் அதிகாரிகளுக்கு இங்கு நிலவுகின்ற வெற்றிடங்கள் தொடர்பாக கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தேன் ஆனால் அந்நியமனங்களை வழங்குவாதற்கான அதிகாரங்களை தந்திருக்கவில்லை. முதல்வர் அவர்கள் தலைமையில் நாங்கள் நேரடியாக ஆளுநர் அவர்களை சந்தித்து இது தொடர்பாக கேட்டுக் கொண்டதற்கினங்கவே ஆளுநர் அவர்கள் விடுத்த பணிப்புரைக்கு அமைவாக முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோலுக்கு இணங்க இன்னியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாநகர சபையின் வரலாற்றில் முதல்முறையாக 100 க்கு மேற்பட்டவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடைபெற்று இன்னியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்நேர்முகப் பரீட்சைக்கான அடிப்படைத் தகைமைகள் உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களினால் வரையறுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்;.

மாநகர சபையில் நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காக நாங்கள் எடுத்த முயற்சியின் பிரகாரம் இன்று 16 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க முடிந்தது. நான் ஆணையாளர் அவர்களுக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைவாக இந்நியமனங்கள் மிக துரிதமாக வழங்கப்பட்டிருக்கின்றது. இந்நியமனங்களை பெற்றுக்கொண்ட நீங்கள் இதயசுத்தியுடன் இம்மாநகர சபையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisements

Written by lankamuslim

மார்ச் 31, 2012 இல் 9:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: