Lankamuslim.org

One World One Ummah

தமிழர்களின் அரசியல் ஆரம்பித்த தொடக்கம் இன்று வரை பழிவாங்கும் அரசியலே

leave a comment »

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை பழிவாங்கினார்கள் அந்த பழிவாங்கள்தான் எல்லா அழிவுகளுக்கும்;, இலங்கை தமிழ் மக்கள் எதிர்பார்த்த தீர்வுகளை பெற முடியாது போனமைக்கும் காரணமாகும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு நேற்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தமிழர்களின் அரசியல் ஆரம்பித்த தொடக்கம் இன்று முதல் பழிவாங்கும் அரசியலாகவே உள்ளது. இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை பழிவாங்கினார்கள் அந்த பழிவாங்கள்தான் எல்லா அழிவுகளுக்கும்;, இலங்கை தமிழ் மக்கள் எதிர்பார்த்த தீர்வுகளை பெற முடியாது போனது இதை யாரும் மறுக்க முடியாது. இது மாத்திரமல்ல தமிழ் ஈழ பிரகடணம் செய்த தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை தீர்ததுக் கட்டியவர்கள் யார் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. கிழக்கு மாகாண புத்திஜீவிகள் தங்களுடைய சுய விருப்புக்களை வெளியிட்ட பொழுது புத்திஜீவிகள் இருக்கக்கூடாது என்பதற்காக போராளிகள் மாத்திரமல்லாமல் புத்திஜீவிகளையும் சுட்டுவீழ்த்தியமையை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

மட்டக்களப்பு மேயர் ராஜன் சத்திய மூர்த்தியை சுட்டுவீழ்த்தினார்கள். நீச்சே ராஜநாயகம் அவர்களை கட்டிவைத்து விட்டு கையொப்பம் வாங்கி எம்பி பதவியை பறித்தபின்னரும் அவரை மூன்று நாட்களின் பின் சுட்டுவிட்டு அந்தப்பதவியை அறியநேந்திரம் அவர்களுக்கு கொடுத்து தலையாட்ட வைத்ததை யாரும் மறக்க முடியாது இவைகளைக் கேட்டதால் துரோகிகள் என்று பலரையும் சுட்டுக் கொலை செய்தார்கள் எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து கொண்டு அறிக்கை விடும் அரசியல் வாதிகள் வடக்கு கிழக்கு இணைந்தால் தமிழர்கள் பெரும்பான்மை என்று சொல்வார்கள். இதனால் கிழக்குக்கு என்ன நன்மை உள்ளது என்ற இவர்கள் சொன்னது கிடையாது. 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வெருகல் ஆற்றிலே எமக்கு எதிராக படுகொலை இடம்பெற்றதோ அன்று ஆரம்பிக்கப்பட்டதே எமது கட்சி. மட்டக்களப்பான் 8ஆம் ஆண்டு படித்தவன் இந்த கிழக்கு மாகாணத்தை ஆள முடியுமா என்று சவால் விட்ட அரசியல் வாதிகளுக்குள்ளே நிமிர்ந்து நின்று மாகாணசபை என்றால் இதுதான் என்று ஒற்றுமையாக நடாத்திக் காட்டியுள்ளோம். அமையப்போகும் வடமாகாண சபைக்கு நாங்கள்தான் கற்பித்திருக்கின்றோம். வரலாற்று ரீதியாக நாம் கற்றுக் கொண்டதைக் கொண்டு தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி கட்டிக்காத்துவருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் போராட்ட காலத்தில் எழுபத்தைந்தாயிர ஏக்கர் வயல்களில் நெற்செய்கை பன்னப்பட்டது. இன்று இரண்டு இலச்சத்திற்கு மேல் செய்கை பன்னப்படுகின்றது. மீன் பிடிக்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. எங்கும் எவரையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று கல்லடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மகாநாட்டினை நடாத்தி அரசியல் தலைவர்கள் வந்து கலந்து கொண்டு அபிவிருத்திக்கு நிதி வழங்கக்கூடிய சூழ்நிலை மலர்ந்துள்ளது. இன்ற உங்களுக்கு நீங்களும் வாழலாம் என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளோம். நீங்கள் இன்று நிமிர்ந்து நிற்கின்றீர்கள்.உங்கள் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். இதை தொடர்ந்து கட்டிக் காப்பது எமது மக்களிடம் உள்ளது.

எங்கள் பிரச்சினைகளை நாங்கள் பேசி தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. கிழக்க மாகாணம் என்பது மூன்று இனங்களையும் அதிக வளங்களையும் கொண்ட மாகாணமாகும். சுற்றுலா துறை அபிவிருத்திற்கு நிறையவே இடமுன்டு. தொழிநுட்ப வசதிகளை ஏற்படுத்தி உலகுக்கு சகல விவசாய உற்பத்தி பொருட்களை கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. இவைகளை சிந்திக்கின்ற ஆற்றலை குறைத்து எதையுமே பெற்றுத்தராமல் வெறுமனே கொழும்பில் இருந்து கொண்டு அறிக்கை விடுபவர்களின் பின்னால் செல்வதை தவிர்த்து எங்களுடைய கால்களிலே நாம் உறுதியாக நின்று கொண்டு எமது பகுதிகளை வளப்படுத்தும் மக்கள் கூட்டமாக மாற வேண்டும் இதற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சிறந்த வழி காட்டியாக திகழும் என முதலமைச்சர் தெரிவித்தார்

Advertisements

Written by lankamuslim

மார்ச் 19, 2012 இல் 10:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: