Lankamuslim.org

One World One Ummah

அக்குறணையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

with 8 comments

அஸ்லம் அலி : அக்குறணை முஸ்லிம் பாலிகா மகாவித்தியாலய ஆசிரியர்கள் இன்று கவன ஈர்ப்பு ஆர்பாட்ட பேரணியொன்றை நடத்தினர். கடந்த 05.03.2012 ஆம் திகதி திங்கள் கிழமை பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் அக்குறணை பிரதேச வாலிபர்கள் சிலரினால் கடுமையாக தாக்கப்பட்டமையை கண்டித்தே ஆசிரியைகளில் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று 12.03.2012- இடம்பெற்றது.

அக்குறணை முஸ்லிம் பாலிகா பாடசாலையில் நன்றாக படித்து வந்த மாணவி ஒருவரின் கல்வியில் திடீர் என்று ஏற்பட்ட மந்த நிலைக்கான காரணத்தை தெரிந்து கொண்ட ஆசிரியர் மாணவியின் பெற்றோரிடம் இதனை தெரிவித்துள்தை தொடர்ந்து குறித்த மாணவி குறித்த பாடாசாலையில் இருந்து வேறுபாடசாலைக்கு பெற்றோரினால் மாற்றப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக கோபம் கொண்ட சில வாலிபர்கள் ஆசிரியர் மீது அபாண்டமான குற்றசாட்டுகளை முன்வைத்து அவரை அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியில் வரவைத்த அவர் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர் .

தாக்கப்பட்ட ஆசிரியர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் அவர் தற்போது அரச வைத்திய சாலை ஒன்றில் சிக்கிச்சை பெற்று வருவதாகவும் அக்குறணை முஸ்லிம் பாலிகா மகாவித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

பாடசாலையின் அதிபர்கள் , ஆசிரியர்கள் இன்று வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் ” தனக்கு கற்பித்து அறிவுரை கூறிய ஆசானுக்கே கைவை த்து தாக்கும் அற்புத சமூகமொன்றை நாம் அக்குறணை பிரதேசத்திலேயே காண்கின்றோம் . ” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெற்றோர்கள் ,அக்குறணை ஜம்இயதுல் உலமா , நலன்விரும்பிகள் ஆகியன ஒன்றிணைந்து ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் கலங்கத்தை நீக்குவதற்கு இது போன்ற மிலேச்சத் தனமான செயல்கள் இனியும் இடம்பெறாவண்ணம் இருப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அக்குறணை பிரதேச முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களை அவமதிக்கும், கல்வி தகமைகளை பொடுபோக்காக நோக்கும் மனப்பாங்கு அதிகரித்து வருவதாகவும் அதற்கு வெளிநாட்டு மோகத்தில் புதைந்து செல்லும் அக்குறணை பிரதேச சமூக கட்டமைப்பு பிரதான காரணமாக மாறிவருவதாகவும் பிரதேச சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisements

Written by lankamuslim

மார்ச் 12, 2012 இல் 7:48 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

8 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. சும்மா ஒரு சம்பவதை வைத்துகோண்டு அக்குறணை பிரதேச எதிர்கால பிரஜைகளான இன்றைய இளசுகள் அத்தணையையும் ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்ட முனைவது கண்டிக்க தக்கது

  “அக்குறணை பிரதேச முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களை அவமதிக்கும், கல்வி தகமைகளை பொடுபோக்காக நோக்கும் மனப்பாங்கு அதிகரித்து வருவதாகவும் அதற்கு வெளிநாட்டு மோகத்தில் புதைந்து செல்லும் அக்குறணை பிரதேச சமூக கட்டமைப்பு பிரதான காரணமாக மாறிவருவதாகவும் பிரதேச சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.”

  இந்த வார்தைகள் தேவை அற்ற மிகைபடுத்திய ஒன்றாகும் யார் அந்த சமூக ஆர்வளர்கள்??? தமிழ் ஊடகம் போல் மறைந்துதான் சமூக ஆர்வளர்கள் தங்கள் கவளைகளை வெளிப்படுத்துவார்களோ?

  Mohammed Hiraz

  மார்ச் 13, 2012 at 2:12 முப

  • ஹிராஸ் காக்க உங்களுக்கு காத்தான்குடியை பற்றியே சரியாக தெரியாது !! அப்படி இருக்க அக்குறனை பற்றி என்ன தெரியும் ?? என்று எனது நண்பர்கள் கோட்க சொல்கிறார்கள் . அதிலும் பல வருடங்களாக துபாயில் குப்பை கொட்டிகொண்டிருக்கும் உங்களுக்கு இலங்கை செய்தி ”தூரத்து உலக செய்தி” உங்களுக்கு ஏன் தேவையில்லாத கேள்விகள் ?

   KKboy

   மார்ச் 13, 2012 at 9:04 முப

   • ரொம்ப அவசியமான கருத்து எல்லாத்திட்கும் அந்த நாளில் கணக்கு காட்டனும் அப்பா உங்கட இந்த சீண்டலில் உங்களுகு என்ன இலாபம் அல்லது உலகிட்குத்தான் என்ன இலாபம்? ஒரு இடத்தில் இருந்துதான் ஒரு விடயத்தை அறியவேண்டும் என்று நினைக்கும் பத்தாம் பசலியாக இருப்பதை இட்டு உங்களையும் உங்கள் கூட்டத்தையும் நினைத்து வருந்த்துகிறோம் எங்களுக்கு அக்குறனையில் 211 மேட்பட்ட நண்பர்கள் இருக்கின்றனர் மேலும் தூரத்து உறவுகளும் இருக்கின்றனர் ஆதலால் அங்கே எத்ஹ்டனையோ தடவை விஜயம் செய்த அடியேனுக்கு அந்த மக்கள் குறித்த தவரான செய்தி குறித்து பேசுவதட்கு எல்லா தகுதியும் இருக்கிறது

    Mohammed Hiraz

    மார்ச் 13, 2012 at 8:39 பிப

 2. அக்குறனை வெளிநாட்டு மோகத்தில் புதைந்து KDH வேன், அல்லியன் கார் வாங்கி ஓட வேண்டும் என்ற கனவில் மிதந்து கல்வியை துலைத்து வருகின்றது என்பது 200% சரியான தகவல் மட்டுமல்ல அக்குறனை இன்றுள்ள பிரதான சமூக பிரச்சினையும் இதுதான்.கடந்த வருடம் நான் கற்பிக்கும் பிரதான முஸ்லிம் பாடசாலையில் இருந்து 5 பேர் மட்டும்தான் பல்கலை கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

  100 ஆசிரியர்கள் கற்பிக்கும் 2500 மாணவர்கள் கல்வி பயிலும் தேசிய முஸ்லிம் ஆண்கள் பாடாசாலையில் இருந்து 5 பேர் மட்டும்தான் என்பது மிகப் பாரிய பின்னடைவு இது அக்குறனை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ள பிரதான சமூகப் பிரச்சினை.

  madawala bazaar

  மார்ச் 13, 2012 at 9:32 முப

  • படித்து பட்டம் எடுத்து வைதியரானபின்னர் அயல் நாட்டில் ஏதாவது உயர் கல்விக்கி வாய்ப்பு கிடைத்தால் அதனையே சாட்டாக வைத்து நாட்டை மறந்து வெளி நாட்டு மோகத்தில் மூழ்கி இருக்கும் வைத்தியர்களின் பட்டியல் மிக நீண்டு செல்வதாக அரசே கவளை படுகிறது ஆதலால் படித்து பட்டம் எடுப்பவர்களுக்கு வெளி நாட்டு மோகம் கிடையாது என்ற தோரனையில் கருதெழுதுவது தப்பு

   Mohammed Hiraz

   மார்ச் 13, 2012 at 8:43 பிப

 3. The true wl cm wait nd c……………..

  saifurrahman

  மார்ச் 17, 2012 at 8:57 பிப

 4. this is not the real story ……………….allah is with us ………And we have left this problem to allah ….ALL IS WELL…………………………DONT MAKE RUMOR…. ITHU ECHERIIKKE ILLE KATTALE……..(CHALLENGE )…………….

  acdwnews

  மார்ச் 17, 2012 at 9:31 பிப

 5. இந்த சமூகத்தின் ஒரு கனவு கைத, மற்றும் அவர்கள் இளைஞர்கைள் குற்றம் ெசால்கிறீர்கள்…..இத. ஆசிரியர் தவறு .. நான் கடுைமயாக, நம் சமூகத்தில் இப்படி வதந்திைய ெசய்ய ேவண்டாம் …………………….

  ” ஒரு உண்மையான முஸ்லீம் குடிமகன”

  ஒரு உண்மையான முஸ்லீம் குடிமகன................

  மார்ச் 17, 2012 at 10:09 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: