Lankamuslim.org

One World One Ummah

இலங்கையில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுகின்றனர்

leave a comment »

இலங்கையில் ஒரு நாளைக்கு ஐந்து பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதுடன் மூன்று சிறுமியர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டில் மாத்திரம் 1636 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அரசாங்க தகவல் பிரிவு தெரிவிக்கின்றது .

அநுராதபுரம் பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி  ஆகிய மாவட்டங்களிலேயே பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்களும் பாலியல் துஷ்பிரயோகங்களும் கூடுதலாக இடம்பெறுகின்றன. குறிப்பாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கிலும் இவ்வாறான பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. துஷ்பிரயோகங்களில் 89 சத வீதமானவை சிறுமியர்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்படு கின்றன என்று அத் தகவல்கள் தெரிவித்துள்ளன .

இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் பாதுகாப்பான சூழலை பெண்களுக்கு உறுதிப்படுத்தவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக தேசிய கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

அல மாளிகையில் நேற்று சர்வதேச மகளிர் தின தேசிய விழா நடைபெற்றது. இதன் போதே தேசிய பெண்கள் பாதுகாப்பு பிரகடனம் வெளியிடப்பட்டது.

Advertisements

Written by lankamuslim

மார்ச் 9, 2012 இல் 8:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: