Lankamuslim.org

One World One Ummah

அவர் ஓர் அமெரிக்கா சார்பான ஒருவர்தான்

with one comment

அஸ்ரப் ஏ.ஸமத்: கொழும்பு மாநகர சபையில் கூட்டத்தின்போது இன்று மாநகர சபை உறுப்பினர் அசாத் சாலியினால் ஐக்கிய நாடுகள் மணித உரிமையமைப்பில் அமெரிக்காக கொண்டுவந்த பிரேரனைக்கு எதிராக ஒரு பிரேரனை கொண்டு வரப்பட்டடு அது நிறைவேற்றப்பட்டது.

கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் மிலிந்த மொரகொடவினால் ஏன் இந்தப் பிரேரணை கொண்டு வரவில்லை என ஊடகவியாளர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்.

அவர் ஓர் அமெரிக்கா சார்பான ஒருவர்தான் மிலிந்தமொரகொட. அவர் இதுவரையும் கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிராக நடைபெறும் எவ்வித அமெரிக்க எதிர்ப்புக்கும் அவர் கலந்து கொள்ளவில்லை அமெரிக்காவுக்கு எதிராக எவ்வித கருத்தும் தெரிவிக்கவும்வில்லை. இந்த பிரேரணையை கொண்டுவரும் சந்தர்ப்பத்தில் கூட அவர் மாநகர சபைக்கும் வரவும் இல்லை. என அசாத் சாலி பதிலளித்தார்.

இப் பிரேரனையை மாநகர சபையில் அங்கிகரிக்கப்பட்டதாக தெரிவித்து நேற்று (08) அசாத் சாலியின் பாண்ஸ் பிளேசில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

அமெரிக்கா ஈரான், ஈராக் ஆப்கனிஸ்தான் மற்றும் சிரியா எகிப்து, பலஸ்தீன் லிபியா போன்ற நாடுகளுக்குள் உட்புகுந்தது போன்று இலங்கை நாட்டுக்குள் உட்பு புகுவதற்கே அமெரிக்கா எத்தணிக்கின்றது. பாகிஸ்தானுக்குள் வந்து ஓபாமாவை கொலை செய்து கடலுக்குள் போட்டதாகச் சொல்லும் அமெரிக்காக தற்பொழுது அமெரிக்காவிலே அவ்உடம்பை கொண்டு சென்றதாக செல்கின்றது.

இந்த நாட்டில் கடந்த 30 வருட காலமாக பள்ளிவாசல், தலாதா மாளிகை இலங்கை மத்திய வங்கி ,பஸ்களில் பிரயாணம் செய்யும் அப்பாவிப் பிரயாணிகளை கொலை செய்த பிரபாகரனை அழித்தற்கு அமெரிக்கா மணித உரிமை என்ற படலத்தில் பிரேரணையை ஐக்கிய நாடுகள் மணித உரிமையில் கொண்டு வருகின்றது. இந்த நாட்டில் எண்னை வளம் மற்றும் தெற்காசியாவின் மத்திய நிலையமாக இருக்கும் ஈரானுக்குள் உட்புகுவதே அமெரிக்காவின் நோக்கமாகும்.

முன்னாள் ஐனாதிபதி, அமைச்சர்களான லலித் அத்துலத்முதலி ரஞ்சன் விஜேரத்தின் காமினி திசாநாயக்க ஜெயராஞ் பெர்ணான்டோப் பிள்ளை போன்ற பல்வேறு அரசியல் தலைவர்களை விடுதபை புலிகள் கொன்றனர். ஐனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவந்துள்ளது.

ஆனால் இந்த நாட்டில் வாழும் சிறுபாண்மையினருக்கு பிரச்சினை இருக்கின்றது. ஆவர்களுக்கான தீர்வை வழங்குவதற்கு சிகல உருமய போன்ற சிரிய கட்சிகள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்றார் .

Advertisements

Written by lankamuslim

மார்ச் 9, 2012 இல் 8:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. We are against western Imperialists but we do not want to create another LTTE too. Please settle minority problems forever and do not bow down racist.

    SriLankan

    மார்ச் 9, 2012 at 8:51 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: