Lankamuslim.org

One World One Ummah

ஸாஹிராக் கல்லூரியின் இந்திய உயர் ஸ்தாணிகர் உரை

leave a comment »

அஸ்ரப். ஏ ஸமத்: இந்தியாவின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவர்களால் நேரு, இந்திரா காந்தி மற்றும் நாயூடு போன்ற மாபெரும் தலைவர்களெல்லாம் இலங்கை வந்திருந்தபோதெல்லாம் கொழும்பு ஸாஹிராக் கல்லூரிக்கு வந்து போயுள்ளார்கள் இத் தகவல்களை இக் கல்லூரியின் வரலாறு தெரிவிக்கின்றது. ஆனால் அண்மையில் விஜயம் செய்த அப்துல் கலாம் வருகை தருவதற்கு அவருடைய நிகழ்ச்சி நிரல் மிகவும் குறுகியதாக இருந்தாலும் இக்கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் அவரை சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. என இந்திய உயர் ஸ்தாணிகர் கல்லூரி அசோக் கே காந்தா தெரிவித்தார்.

இந்திய உயர் ஸ்தாணிகர் அசோக் கே காந்தா கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவின் இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். உரையாற்றும்போது இதனை தெரிவித்தார் . அத்துடன் இந்தியாவில் உள்ள 15ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட அரச மண்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட 25 பள்ளிவாசல்கள் புகைப்படக் கண்காட்சி ஒன்றையும் இந்திய கலாச்சார நிலையம் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் கபூர்மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது. இக் கண்காட்சியையும் இந்திய உயர் ஸ்தாணிகர் திறந்து வைத்தார்.

அத்துடன் கல்லூரியின் 120 வருட ஆண்டு பூர்த்திக்கான ஸாஹிராவின் லோகோவையும் திறை நீக்கம் செய்து வைத்தார்.இந் நிகழ்வுகள் கல்லூரி அதிபர் அஹமட் ஜிப்ரி தலைமையில் நடைபெற்றது. அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்  இக் கல்லூரி இலங்கையில் மாபெரும் வரலாறு படைத்ததொரு பாடசாலையாக நான் அறிந்தேன். இலங்கையில் இஸ்லாமிய சூழலில் 4000 முஸ்லீம் மாணவர்கள் கல்வி கற்கும் ஒரு மாபெறும் பிரசித்தி பெற்றதொரு பாடசாலையாகும். இக் கல்லூரிக்கு 120 வருடங்கள் பூர்த்தி யாவதை இட்டு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தியாவில் இருந்தும் சில மாணவர்கள் இங்கு வந்து தங்கி கல்வி கற்றுள்ளனர். என உயர் ஸ்தாணிகர் அசோக்கே காந்தா தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள கஸ்மீர், தாஜ்மகால், அஸ்மிர், கேரலா புதுடில்லி போன்ற இடங்களில் உலகில் வரலாற்றுமிக்க இஸ்லாமிய கட்டிடக் கலைஞர்களினால் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதனையே புகைப்படமாக இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டது. இப் பள்ளிவாசல்களை பார்வையிடுவதற்கு இக் கல்லூரி அதிபர் மாணவர்கள் சிலருக்கும் சந்தர்ப்பம் வழங்குவதற்கு இந்தி உயர் ஸ்தாணிகர் அழுவலகம் நடவடிக்கை எடுக்கும். அத்துடன் இக் கல்லூரியின் வறிய மாணவர்கள் ஒரு சிலருக்கு புலமைப் பரிசில் திட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உயர் ஸ்தாணிகர் தெரிவித்தார். அத்துடன் கல்லூரி அதிபரிடம் ஒரு தொகுதி நூல்களை கலலூரியின் நுலாகத்திற்காக உயர் ஸ்தாணிகர் அதிபரிடம் கையளித்தார்.

Advertisements

Written by lankamuslim

மார்ச் 4, 2012 இல் 10:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: