Lankamuslim.org

One World One Ummah

ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டோம்: ஜனாதிபதி

leave a comment »

இந்த சமூகத்திலுள்ள ஜனநாயகத்தை திறந்த மனதுடன் நோக்க வேண்டும். அரசைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் எந்த நன்மையும் இல்லாத நாடு எனச் சித்தரிப்பதால் சமூகத்துக்கு எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஏற்கனவே நாம் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து அறிக்கையைப் பெற்று அதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.

தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமித்துள்ளோம். ஜனநாயகத்தையும் மனித உரிமை நிலையையும் மேம்படுத்த அரசின் இத் திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வெளிநாடுகளுக்கு எதுவித தேவையும் இல்லை.

இனத்தை கட்டியெழுப்பும் தேவை 64 வருடங்களுக்கு முன்னர் சுதந்திரம் பெற்றபோதும் எமக்கு இருந்தது. சுதந்திரம் பெற்ற தினத்தன்று அன்றைய பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க ““இன, மத, குல பேதங்களை மறந்து அனைவரும் ஒரே இலங்கையர் என்ற இனமாக வாழ்வதற்கு உறுதி பூண வேண்டும்” என்று நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டார். இருந்தும் 64 வருடங்கள் முழுவதும் இதை எம்மால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது.

எனவே சகலரினதும் கௌரவத்துக்கும் கற்றுக் கொள்ளத் தக்கதுமான ஒரே இலங்கையர் என்ற இனத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பு இன்றும் எமக்குள்ளது. என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ராவையா பத்திரிகையின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார் .

Advertisements

Written by lankamuslim

மார்ச் 4, 2012 இல் 6:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: