Lankamuslim.org

One World One Ummah

ஷியா முஸ்லிம்கள் மீது மற்றுமொரு சியோனிசத் தாக்குதல்

leave a comment »

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் 18 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் ,வாகனத் தொடரணியாகச் சென்ற நான்கு பஸ்களை , இராணுவச் சீருடை அணிந்த துப்பாக்கித்தாரிகள் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்திய போதே இவர்கள் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில்  பயணம் செய்து கொண்டிருந்தவர்களின் அடையாள ஆவணங்களை சோதித்த பிறகு, அந்த ஆயுததாரிகள் ஷியா முஸ்லிம்களை தனிமைப்படுத்தி சுட்டுக் கொன்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.  இவர்கள் அனைவரும் ஷியா முஸ்லிம்கள் என்று தெரிவிக்கபடுகிறது .

முஸ்லிம் சமூகத்தை பிளவு படுத்தும் நோக்கி சியோனிச சக்திகள் தமது முகவர்களின் உதவியுடன் தொடராக இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அரசியல் ,சமூக ஆய்வாளர்கள் தொடர்ந்தும் கூறிவருவது சுட்டிக்காட்டத் தக்கது.

ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மஸ்ஜிதுக்களிலும் சந்தைகளிலும் தாக்குதல்களை நடத்தி ஷியா, சுன்னா முஸ்லிம்களை மோதவிடும் நாசவேலைகளை மேற்கு மற்றும் சியோனிச உளவு அமைப்புகள் தமது முகவர்களின் ஊடாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் உலகில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய எழுச்சியின் எதிர்கால விளைவுகள் தொடர்பில் அச்சம் கொண்டுள்ள மேற்கு மற்றும் சியோனிய சக்திகள், முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் சிந்தனை வகுப்புகள் மத்தியில் மோசமான மோதலை ஏற்படுத்த முன்பை விடவும் மிக வேகமாக களமிறங்கியுள்ளதாக அரசியல் சமூக ஆய்வாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

ஆப்கானிதானில் வடக்கு, தெற்கு என்ற பிரதேசவாதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தோல்வி கண்ட அந்த உளவு சக்திகள் , மத்ஹப்கள் மூலம் பிரிவினையை ஏற்படுத்த முற்பட்டது. ஆனால் அதிலும் தோல்வியை தழுவிய மேற்கு மற்றும் சியோனிச சக்திகள். ஷியா , சுன்னா என்ற வெறியை ஏற்படுத்துவதில் பலமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்கால ஷியா  இமாம்களால் நிராகரிக்கப்படும் மிகவும் பழமையான ஷியா சிந்தனை நூல்களை பல மொழிகளில் மொழிபெயர்த்து அவற்றின் மூலம் சுன்னா முஸ்லிம்கள் மத்தியில் ஷியா முஸ்லிம்கள் தொடர்பான விரோத போக்கை தூண்டி வருவதாக அந்த அரசியல் சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் .

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 29, 2012 இல் 10:04 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: