Lankamuslim.org

இலங்கையில் தேர்தல் வருகின்றபோது எண்ணெய் கிணறுகள் வெளிப்படுகின்றன

with one comment

தேர்தல் முடிவடைந்த பின்னர் அவைகள் மறைந்து விடுவதோடு எரிபொருட்களின் விலைகள் அதிகத்து மக்களினால் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கப்படுகின்றது, என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 6 மாதங்களுக்கு முன்னர் கண்டி மாநகர சபைக்கான தேர்தல் நடைபெற்ற சமயத்தில் கண்டி தலதா மாளிகையில் வைத்து அரசாங்கத்தின் தலைவர் எரிபொருள் கிணறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்த விடயம் .

கண்டி மாநகர சபைத் தேர்தல் முடிவடைந்து 6 மாதங்கள் கடந்து விட்டன.ஆனால் கண்டு பிடிக்கப்பட்ட எரிபொருள் உள்ள கிணறு விடயம் மறக்கப்பட்டு விட்டது. நாட்டில் எரிபொருள்களின் விலைகள் அதிகரித்து விட்டன. அது மட்டுமின்றி பாண், மா, பஸ் கட்டணம் உட்பட சாதாரண மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலைகளும் அம் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் உயர்வடைந்துள்ளது.

கண்டி குண்டசாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அறநெறிப் பாடசாலைகளுக்கும் முன்பள்ளி பாடசாலைகளுக்கும் தளபாடம் மற்றும் உபகரணங்கள் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 29, 2012 இல் 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. சிறுபான்மை கட்சி ஒன்றின் முக்கியஸ்தர்களில் சிலர்
    மரணித்த மனிதர்களைக் கூட தோண்டி எடுத்து வந்து
    தேர்தலை நடாத்தி விடுகின்றார்கள்!
    இதை யாரிடம் சொல்லி அழ…..

    abuathnan

    மார்ச் 1, 2012 at 12:45 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: