Lankamuslim.org

One World One Ummah

கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போதே கொழுத்த சீதனத்தை தருவதாக பேரம்பேசுகின்றனர்

leave a comment »

இஸ்லாம் விவாகத்தை பிரிக்க முடியாத ஒப்பநதமாக ஒருபோதும் கருத வில்லையென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்: ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் பல்கலைக் கழக மாணவிகளுக்கான இஸ்லாமிய சரிஆ சட்டம், அடிப்படை உரிமையும் என்ற தொனிப் பொருளிலான செயலமர்வின் போது, கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அஸீஸ் மேற்கண்டவாறு கூறினார்.

மாற்றங்களுக்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜனாபா றமீஸா பாறக் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் தொடர்ந்துரையாற்றிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி ஏ.சி.ஏ.அஸீஸ், 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் அடிப்படையிலேயே, திருமண சடங்குகளைச் செய்கின்றனர்.

ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணையாக இருந்து கொள்ள சம்மதித்து உறுதியான ஒப்பந்தம் செய்து கொள்வதையே இஸ்லாம் விவாகம் என்கிறது. இஸ்லாம் விவாகத்தை பிரிக்க முடியாத ஒப்பந்தமாக ஒருபோதும் கருதவில்லை. இருவர் வாழ்க்கையில் செய்து கொள்கின்ற புரிந்துணர்வு ஒப்பந்தமாகவே இதனைக் கருதுகிறது. ஏனைய உடன்படிக்கை போலவே இங்கும் ஒரு பிரேரணையும் அப்பிரேரணைக்கான ஒரு அங்கீகாரம் அவசியம். பிரேரணையானது வலிகாரனாலும், அப்பிரேரணைக்கான அங்கீகாரம் மணமகனினாலும் அளிக்கப்படுகிறது.

இருப்பினும் பக்குவ வயதில் திருமணம் செய்யாத இளம் தம்பதிகள் இன்று பிரிவினை வழக்கிற்குள் சிக்கித் தவிக்கின்றனர்.வீட்டிற்கு அத்திவாரம் போடும் போதே சிலர் மாப்பிள்ளை தேட ஆரம்பிக்கின்றனர். அதுவும் பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போதே கொழுத்த சீதனத்தை தருவதாக பேரம்பேசுகின்றனர். ஆனால் பிள்ளையின் வயது மற்றும் பக்குவம் பற்றி எந்த அக்கறையும் கொள்வதில்லை. இஸ்லாத்தில் திருமணத்திற்கான வயதெல்லை வரையறுக்கப்படவில்லை.

ஆனால் இருவரும் பருவ வயதடைந்தவர்களாக இருக்க வேண்டும். முஸ்லிம் விவாகரத்துச் சட்டத்-தின்படி 12 வயதிற்குக் குறைந்த பெண் பிள்ளையாயின் திருமணம் காழியின் அனுமதி இன்றி பதிவு செய்யப்படமாட்டாது. விவாகத்தினை பதியாது விடுவது ஒரு குற்றமாகும். இருப்பினும் பதிவு இல்லை என்பதற்காக “நிகாஹ்’ ஒன்று நடந்த பின் அவ்விவாகத்தை செல்லுபடியற்றதாக்க முடியாது.

இஸ்லாமிய சட்டத்தின் பிரகாரம் ஒரு கணவன் தன் மனைவியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு என்பவற்றிற்குப் பொறுப்பாக இருத்தல் அவசியம். அடிப்படை வசதிகளையும், ஜீவனோபாயக் கொடுப்பனவுகளையும் கணவனது வசதிற்கேற்றாற் போல் மனைவிக்கு கொடுக்க வேண்டும். இதேபோன்று மனைவியும் கணவனுக்கு உண்மையானவளாகவும் அவனது பிள்ளைகளையும், சொத்துக்களையும் சிறந்த முறையில் கண்காணிப்பதோடு கணவனின் விருப்புக்களை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.

நியாயமான காரணமின்றி, தன்னோடு வாழ மறுக்கும் பெண்ணுக்கு அல்லது தவறான நடத்தையுள்ளவளுக்கு தாபப்பு வழங்க வேண்டிய அவசியம் கணவனுக்கு இல்லை. ஆனால் பிள்ளைகளுக்கான பராமரிப்பை உரிய முறையில் கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகள் எனில் திருமணம் ஆகும் வரையும், ஆண் பிள்ளையெனில் பருவ வயது வரையும் தந்தை பராமக்க வேண்டும். ஆண் பிள்ளை பருவ வயதை எய்திய போதும் வருமானம் தேட முடியாத அளவுக்கு ஊனமுற்றிருப்பின் அவரை பராமக்கின்ற பொறுப்பு தந்தைக்குரியது.

இவ்வாறான அடிப்படைக் கடமைகளையும், உரிமைகளையும் உள்ளடக்கிய திருமண ஒப்பந்தம் ஒன்று கருத்து முரண்பாடுகளால் விவாக குலைவொன்றிற்கு வலிகோலுகின்றது. விவாகரத்து சட்டத்தின்படி, கணவனினால் கோரப்படும் விவாகரத்து “தலாக்’ எனவும், எந்தவொரு குற்றமும் இல்லாத நிலையில் மனைவியால் கோரப்படும் விவாகரத்து சட்டத்தின்படி, “பஸ்கு’ எனவும், கணவன் மனைவி இருவரின் சம்மதத்துடன் மனைவியால் கோரப்படும் விவாகரத்து “குல்உ’ எனவும், கணவன் மனைவி இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் கோரும் விவாகரத்து “பாறத்’ எனவும் அழைக்கப்படுகின்றது எனவும் இவ்விவகாரங்களைக் கையாளும் அதிகாரம் காழி நீதிமன்றங்களுக்கே வழங்க பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் .

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 4, 2012 இல் 9:43 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: