Lankamuslim.org

பாராளுமன்றத்தெரிவுக்குழு இயக்கம் பெறுமா ?

leave a comment »

அரசியல் கருத்தாடல் தொகுப்பு: தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பாராளுமன்றத்தெரிவுக்குழுவில் பங்குகொள்ளுமாறு அரசு அறிவித்து வருகிறது இதற்கு முஸ்லிம் தரப்பில் உள்ள கட்சிகள் தமது ஆதரவை ஏற்கனவே தெரிவித்துள்ளது. ஆனால் அரசினால் தொடராக விடுக்கப்படும் அழைப்பைபிரதான எதிர்கட்சியான  ஐ.தே.க  நிபந்தனைகளுக்கு உட்படுத்தி நிராகரித்துள்ளது. 13+ என்ற ஜனாதிபதியின் யோசனை என்னவென்பதை பகிரங்கப்படுத்த வேண்டுமெனவும்.

ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு யோசனையொன்றை அரசாங்கம் முன்வைக்கும் வரை பாராளுமன்றத்தெரிவுக்குழுவுக்கு வரப் போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் அறிவித்திருக்கின்றன. இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு இரகசியமாக ஜனாதிபதியை சந்தித்து பாராளுமன்றத்தெரிவுக்குழுவுக்கு தமது உறுபினர்களின் பெயர்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ், காணி அதிகாரங்களுக்கு உத்தரவாதமின்றி தெரிவுக்குழுவுக்கு வரமுடியாதென தமிழ்க் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்தும் வருகிறது .

ஐக்கிய தேசியக்கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கையில் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுக்களில் கூட முன்னேற்றம் காணப்படவில்லை. தெரிவுக்குழுவுக்கு வராமல் தமிழ்க் கூட்டமைப்புடன் இனி பேச்சு இல்லை என அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அரசு எந்த நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றது எனக் கேட்கவிரும்புகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காத தெரிவுக்குழு அர்த்தமற்றதொன்றாகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டை எட்டி அரசின் தீர்வு யோசனை முன்வைக்கப்பட்டால் மாத்திரமே தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி பரிசீலிக்க முடியும் அரசாங்கம் கடந்த காலத்தில் அமைத்த தெரிவுக்குழுக்கள், சர்வகட்சி மாநாடுகளால் எந்தவிதமான பயனும் கிட்டவில்லை. அதேபோன்றதொரு மற்றொரு தெரிவுக்குழு அமைக்கப்படுவதன் நோக்கம் காலம் கடத்துவதன்றி வேறென்னவாக இருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதேவேளை ஜே.வி.பி. விடுத்திருக்கும் அறிக்கையில் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு 13 ஆவது அரசியலமைப்பில் மற்றொரு திருத்தம் கொண்டுவருவதல்ல. அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்தில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது. நடைமுறைக்குதவாத போலித்தனமான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெற்று காலத்தை வீணாக்க தாம் தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ளது.

அதேவேளை மாகாணங்களுக்கு எந்தெந்த அதிகாரங்களை அரசாங்கம் பகிர்ந்தளிக்க முடியுமென்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க முடியுமென்றும் யோசனைகளை முன்வைப்பதற்கான தனியான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பிரிவு பொறுப்பாளர்களை நேற்று காலையில் சந்தித்த போது தெரிவித்துள்ளார் .

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களை நியமிக்கவில்லையென ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.”பேச்சுக்கு வரும்போது விடுதலைப் புலிகள் போன்று கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். பேச்சுக்கு அவர்கள் வருகின்றனர். பின்னர் வெளியேறுகின்றனர். அதன் பின்னர் நிபந்தனையுடன் கலந்துரையாட விரும்புவதாகக் கூறுகின்றனர்’ என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதேவேளை சகல அரசியல் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிகளின் பெயர்களை முன்மொழியச் செய்வதற்கு ஏற்புடைய வகையில் தாம் விரைவில் சகல அரசியல் கட்சிகளின் கூட்டமொன்றை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

13 பிளஸ் பற்றி நீங்கள் என்ன நிலைப்பாட்டை கொண்டு உள்ளீர்கள் என ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி, நான் எனது நிலைப்பாட்டை இங்கு பகிரங்கப்படுத்தி னால் அதை வைத்து பத்திரிகைகள் எனக்கு எதிராக எழுதி நாட்டில் பிரச்சினையை உருவாக்க எத்தணிக்கும் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

தொடர்ந்தும் அந்தக் கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, தான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் இது மக்களுடைய பிரச்சினையாக இருந்து வருவதனால் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு ஏகமனதான முடிவை எடுப்பது அவசியம். பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் தான் ஆதரித்து அமுலாக்குவேன் என்று கூறியுள்ளார் . இது விடயத்தில் நாம் அவ தானமாக இருக்க வேண்டும். மக்களின் அங்கீகாரத்துடனேயே இந்தத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

மக்கள் விரும்பாத ஒரு தீர்வை ஏற்படுத்தி, நாம் அதனை அமுலாக்குவது முடியாத காரியம் என் றும் கூறினார். அரசாங்கம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை கொடுக்க தயக்கம் காட்டுவதனால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் உண்மை நிலை என்ன? என்று ஒரு ஆசிரியர் ஜனாதிபதியிடம் கேட்டபோது .

நிச்சயமாக நாங்கள் பொலிஸ் அதிகாரங் களை கொடுக்க முடியாது. அப்படி பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பென்தர பாலத்தைக் கடந்து தென் னிலங்கைக்கு போக முடியாத சூழ் நிலை உருவாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, காணி விடயத்தில் பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள சட்டங்களே தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றதென்றும், அது பிரச்சினைக் குரிய விடயமல்ல என்றும் கூறியுள்ளார் .

இலங்கை ஒரு தேசமாக இருப்பதை உறுதி செய்யும் அரசியல் மற்றும் அரசமைப்பு நடவடிக்கைகளை சிபாரிசு செய்வதற்காகவே பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது பாராளுமன்றத்தெரிவுக்குழு தமிழர் பிரச்சினைக்கு மாத்திரம் அல்ல, நாட்டின் ஏனைய மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் என்று எதிர்பர்கப்படுகிறது.

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 31, 2012 இல் 9:17 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: