Lankamuslim.org

One World One Ummah

ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் !!

with 5 comments

இலங்கையில் ஜிஹாத் அமைப்புகள் இருக்கிறது, உருவாகிவருகின்றது, பயிற்சி பெறுகின்றார்கள், பாகிஸ்தானில் 2000 பேர் சென்று பயங்கர ஆயுத பயிற்சி பெற்று வந்துள்ளார்கள், ஆயுதங்களை வைத்துள்ளார்கள் என்று அடிக்கடி இலங்கை, இந்திய ஊடகத் துறை ஜிஹாத்துடன் தொடர்பு படுத்தி செய்திகை பதிவு செய்து வந்ததை நாம் அறிவோம் இந்த போலி ஜிஹாத் செய்திகளை முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் புலிகளும் புலிசார்பு ஊடகங்களும்தான்.

ஆனால் புலிகள் ஆயுத தளத்தில் அழிக்கப்பட்ட பின்னரும் , தமிழ் ,சிங்கள ஊடகங்களிலும் இஸ்லாமிய அமைப்புகளை பயங்கரவாதத்துடன் எப்படியாவது இணைத்து விடவேண்டும் என்ற முனைப்புடன் தமிழ் ,சிங்கள ஊடகங்களில் தொடந்தும் பொய் பிரசாரங்கள் மேற்கொள்ளபட்டு வருகின்றமையை நாம் அறிவோம் இப்படியான தகவல்கள் வெளியாவதற்கு இலங்கை முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒரு சிலரும் காரணமாக இருகின்றார்கள் என்பதையும் நாம் அறிவோம் அந்த வகையில் இன்றும் முஸ்லிம்கள் தொடர்பான முற்றிலும் பொய்யான தகவகளை வழங்கும் வலைத்தளம் என்று பெயர் பெற்ற ஒரு தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியை இங்கு தருகிறோம் :

இலங்கையில் செயல்பட்டு வருகின்ற முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் குறித்து அமெரிக்கா சேகரித்து வைத்திருக்கின்ற தகவல்கள் மிகவும் அதிர்ச்சி ஊட்டுபவையாகவும், அதே நேரம் சுவாரஷியமானவை ஆகவும் உள்ளன.

புலனாய்வுப் பிரிவில் அதிகாரி தரத்தில் உயர் பதவி வகித்தவரான முஸ்லிம் ஒருவரே தூதரகத்துக்கு இத்தகவல்களை 2004 ஆம் ஆண்டு ஜனவரி ஜூன் 01 ஆம் திகதி வழங்கி இருக்கின்றார்.

இத்தகவல்களில் மிக முக்கியமானவை வருமாறு:

-*கொழும்பை தளமாக கொண்டு முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் நான்கு செயல்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்கா ஜம்தி இஸ்லாம், தௌஹித் ஜமாத், தப்லீக் ஜமாத், ஜமாதி முஸ்லிம் ஆகியனவே நான்கும். கொழும்பில் உள்ள பல்கலைக்கழகங்களை தளமாக கொண்டு செயல்படுகின்றது ஸ்ரீலங்கா ஜம்தி இஸ்லாம். உலக முஸ்லிம் இளைஞர்கள் பேரவை என்கிற அமைப்பு இந்த இயக்கத்துக்கு நிதி வழங்குகின்றது. அத்துடன் பாகிஸ்தான், சவூதி அரேபியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள பாடசாலைகளில் முஸ்லிம் இளைஞர்கள் கல்வி கற்கின்றமைக்கு இப்பேரவை நிதி அனுசரணை வழங்குகின்றது.

இந்த இளைஞர்கள் கல்வியை நிறைவு செய்து நடு திரும்பிய பின்னர் கொழும்பில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெரும்பாலும் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

தப்லீக் ஜமாத் இயக்கத்துக்கு இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், இந்தியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கிளைகள் உள்ளன. இலங்கை வருகின்ற வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களுக்கு இவ்வியக்கத்தோடு தொடர்புகள் உள்ளன.

ஜமாதி முஸ்லிம் இயக்கம் மிகச் சிறிய குழு. முறையான அளவில் வளர்ச்சி காணவில்லை.

*கிழக்கு இலங்கையில் உள்ள முஸ்லிம் தீவிரவாத குழுக்களை பாகிஸ்தானிய அமைப்பாளர்கள் வந்து சந்தித்து இருக்கின்றார்கள். ஜிஹாத், ஒசாமா, சதாம் .. என்று பெயரிடப்பட்ட முகாம்களில் இக்குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு தற்காப்புப் பயிற்சிகள் கற்பிக்கப்பட்டு உள்ளன.

ஆனால் சுடுகலன்களை இயக்குகின்ற பயிற்சிகள் வழங்கப்பட்டனவா? என்பது தெரியவில்லை. புனிதப் போராட்டங்களில் ஈடுபட முஸ்லிம் இளைஞர்களில் ஒரு தொகையினர் வெளிநாடு சென்றும் இருக்கின்றனர். ஏனையோர் வேலை செய்கின்றமைக்கு அல்லது கல்வி கற்கின்றமைக்கு சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படுகின்றனர். சவூதியை தளமாக கொண்டு இலங்கையில் இயங்குகின்ற உலக முஸ்லிம்கள் இளைஞர்கள் பேரவை என்கிற அரச சார்பற்ற அமைப்பு நிதி உதவிகளை வழங்கி இந்நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இலங்கையில் சூடானிய பிரஜை ஒருவர் இப்பேரவையை நிர்வகிக்கின்றார்.

* இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழுக்களின் தோற்றத்துக்கு பிரதான காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு வந்த தாக்குதல்கள். நாடாளுமன்ற தேர்தலில் அண்மையில் ஆறு ஆசனஙகளை வென்றிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஐ. எஃப். யு (Islamic Unity Foundation) என்கிற அமைப்பின் பேராதரவு உள்ளது.இவ்வமைப்பில் இராணுவ, புலனாய்வு, சமய மற்றும் அரசியல் பிரிவுகள் இருக்கின்றன.

இவ்வமைப்பின் அரசியல் பிரிவு தலைவர்தான் அமீர் அலி. இவர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி உள்ளார். இவ்வமைப்பிடம் ஆயுதங்கள் உள்ளன. ஏராளமான வட்டாரங்களில் இருந்து ஆயுதங்களைப் பெறுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா அண்மையில் மட்டக்களப்பில் இருந்து பின்வாங்கியபோது அவரிடம் இருந்து ஒரு தொகை ஆயுதங்களை வாங்கி இருக்கின்றனர் அல்லது கைப்பற்றி இருக்கின்றனர்.

இந்தியாவில் இருந்தும் ஆயுதங்கள் இவர்களுக்கு கடத்தப்படுகின்றன. இவ்வமைப்பைச் சேர்ந்த இலங்கை உறுப்பினர்கள் இந்தியாவின் காஷ்மீரில் இராணுவ பயிற்சிகள் பெற்று இருக்கின்றார்கள். காஷ்மீரில் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கவும் கூடும். இந்தியாவின் பாதாள உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் இவ்வமைப்பினருக்கு தொடர்புகள் இருக்கக் கூடும். ஆனால் இலங்கையில் உள்ள முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்பதில் நம்பிக்கை இல்லை.

*புலிகளிடம் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்க திருகோணமலையில் பிரதான மூன்று முஸ்லிம் இராணுவ குழுக்கள் இயங்குகின்றன. நொக்ஸ், ஒசாமா குழு, ஜெட்டி குழு என்பனவே மூன்றும். இவற்றுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு உள்ளது. அம்பாறையில் முஜாஹதீன் ஆயுத குழு உள்ளது. இதில் ஆயுதம் தரித்த போராளிகள் 150 பேர் வரை உள்ளார்கள். திருகோணமலையில் இயங்கி வருகின்ற ஒசாமா குழுவை விட இது பலம் வாய்ந்தது.

*இலங்கையின் பாதாள உலக கோஷ்டிகளுக்கும் முஸ்லிம் தீவிரவாத குழுக்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் நிலவுகின்றன. போதைப்பொருள், ஆயுத மற்றும் மனிதக் கடத்தல்களுடன் இத்தொடர்புகள் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. கொழும்பின் மிகப் பயங்கரமான பாதாள கோஷ்டி மாளிகாவத்தை பகுதியில் உள்ளது. இப்பாதாள கோஷ்டி கருணாவால் கைவிடப்பட்ட ஆயுதங்களை பெற்று கிழக்கு முஸ்லிம் குழுக்களுக்கு விற்று உள்ளது என நம்பப்படுகின்றது. இந்த ஆயுதங்களில் தன்னியக்க துப்பாக்கிகள், கிளேமோர் குண்டுகள், மோட்டார்கள் ஆகியனவும் அடக்கம்.

*கிழக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சுக்கான கட்டிடம் தூதரகத்துக்கு மிக அணித்தாக புதிதாக வாடகைக்கு பெறப்பட்டு உள்ளது. அமைச்சர் அதாவுல்லா. புதிதாக நியமனம் பெற்று இருப்பவர். கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு உதவுவதே அமைச்சின் பிரதான நோக்கங்களில் ஒன்று.

அதாவுல்லாவிடம் இருந்து அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகள் இது வரை வெளிப்படவில்லை. ஆனால் இவருக்கு பண்டா குழு என்கிற பாதாள உலக கோஷ்டியுடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இக்கிரிமினல் குழுவில் 50 – 60 பேர் வரை உள்ளார்கள். இவர்கள் கிழக்கு மாகாணத்துக்கு பணம், பாதுகாப்பு கொடுக்கின்றார்கள். இக்குழுவினர்தான் அதாவுல்லாவுக்கு பாதுகாப்பு சேவைகள் வழங்குகின்றனர். இக்குழுவினர்தான் ஒசாமா தீவிரவாத குழுவுக்கு பயிற்சிகள், போரியல் உபாயங்கள் சொல்லிக் கொடுத்து இருக்கின்றார்கள்.

இது தொடர்பான முந்திய எமது கட்டுரை:

மிக மோசமான இஸ்லாமிய அடிபடைவாதிகளால் பிரச்சினைகள் விரைவில் வரலாம் !!

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 31, 2012 இல் 8:24 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

5 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. மீண்டும் ‘ஜிஹாத்’ காய்ச்சல்!

    -பைஸ்-

    டெங்குக் காய்ச்சல், எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பற்றி பெரும்பாலான ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்க ஒரு சில சிங்கள, ஆங்கில பத்திரிகைகளுக்கும் இணையத் தளங்களுக்கும் மாத்திரம் “ஜிஹாத் காய்ச்சல்’ பிடித்திருக்கிறது. “கிழக்கில் ஜிஹாத்” எனும் பெயரில் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இயங்குகின்றன. அவர்கள்தான் அங்கு நடைபெறும் குற்றச் செயல்களுக்குக் காரணமாக அங்கு இருக்கிறார்கள். புலிகளை ஒழித்தாயிற்று. இனி இவர்களைத்தான் ஒரு கை பார்க்க வேண்டும்…” என்றெல்லாம் இந்த ஊடகங்கள் புதிய கதைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. ஜூன் 21ம், 28ம் திகதிகளில் வெளிவந்த “லக்பிம நியூஸ்’ ஆங்கில வார இதழின் செய்திகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    “உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிய நிலையில், தற்போது கிழக்கில் இயங்கிவரும் ஜிஹாத் ஆயுதக் குழுக்கள் மீது அரசாங்கம் கவனத்தைச் செலுத்தியுள்ளது. புலனாய்வுத் தகவல்களின் படி கிழக்கில் 500 ஜிஹாத் ஆயுததாரிகள் உள்ளனர். கிழக்கில் நடைபெற்று வரும் பல்வேறு குற்றச் செயல்களின் பின்னணியில் இவர்களே இருக்கின்றனர். 15 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குழுக்களுக்கு முஸ்லிம் தலைவர்களே உதவியும், பாதுகாப்பும் அளித்து வருகின்றனர். தற்போது புத்தளத்திலுள்ள சில முஸ்லிம் அரசியல் வாதிகளும் இந்த ஆயுதக் குழுக்களுக்கு பணமும், ஆயுதமும் வழங்குவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் இந்த ஜிஹாத் ஆயுததாரிகள் கொழும்பில் இயங்கிவரும் முஸ்லிம் பாதாளக் குழுக்களுக்கும் ஆயுதங்களை விநியோகித்து வருகின்றனர்.

    கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி, சம்மாந்துறை, அக்கரைப்பற்று கல்முனை, மூதூர், கிண்ணியா ஆகிய பிரதேசங்களிலேயே இந்தக் குழுக்கள் இயங்குகின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா அணியினரிடமிருந்து இந்தக் குழுக்கள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்துள்ளன. இவ்வாறான 13 குழுக்கள் கிழக்கில் இயங்கி வருகின்றன. ஜிஹாத், உஸாமா, முஜாஹித் என்பன அவற்றில் சிலவற்றின் பெயர்களாகும். முஸ்லிம் அரசியல்வாதிகளே இந்த ஆயுதக் குழுக்களின் இருப்புக்கு உதவி வருகின்றனர். சில அரசியல்வாதிகள் தமது சொந்த அரசியல் நலன்களுக்காக இவர்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள். இவற்றில் சில குழுக்களை முஸ்லிம் வியாபாரிகளும், ஹாஜியார்மார்களும் நடத்தி வருகின்றனர்.”

    லக்பிம நியூஸின் மேற்படி செய்தியைத் தழுவி “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணையத்தளம் வெளியிட்ட தகவல் பின்வருமாறு அமைந்திருந்தது. “இந்திய அதிகாரிகளின் தகவல்படி, இலங்கையிலும் இந்தியாவிலும் ஜிஹாத் குழுக்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான்போன்ற வெளிநாடுகளின் நிதியுதவி மற்றும் ஆலோசனைக்கிணங்க செயற்பட்டுவரும் தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களைக் கண்டுபிடிக்கும் இலங்கையின் நடவடிக்கைக்கு இந்தியா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் நிலவும் காணிப்பிரச்சினையை முன்னிறுத்தி தமிழர்களுக்கும் ஜமாஅத்தினருக்குமிடையில் ஆயுத மோதலைத் தோற்றுவிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”

    ஜூன் 28ஆம் திகதி வெளிவந்த “லங்காதீப’ பத்திரிகையில் “காத்தான்குடிப் பிரதேசத்தில் 18 ஆயுதக் குழுக்கள் இயங்குவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பெருந்தொகையான ஆயுதங்களைக் கொண்டுள்ள இக்குழுக்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, நாட்டில் அமைதி நிலவிக் கொண்டிருக்கின்ற இக்காலப்பகுதியில் இந்த ஊடகங்களுக்கு ஏன் மீண்டும் “ஜிஹாத் காய்ச்சல்’ தொற்ற வேண்டும்? கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டு அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கின்ற நிலையில் அங்குள்ள சட்டவிரோத ஆயுதங்களைக் களைவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

    அந்தவகையில், கடந்த 19.06.2009 அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றை பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர். காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா போன்ற அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பதில் பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலக, கிழக்கு மாகாண பாதுகாப்புப்படை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஸ்ரீநாத் ராஜபக்­, விஷேட அதிரடிப்படை பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் கருத்து வெளியிட்ட மேற்படி அதிகாரிகள் முஸ்லிம் பிரதேசங்கள் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோத ஆயுதப் பாவனை அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆயுதங்களை உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன் ஜூலை 2 ஆம் திகதிக்கு முன்னர் தாமாக வந்து ஆயுதங்களைக் கையளிப்போருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும், பள்ளிவாசல்கள் ஊடாக பொலிஸ் நிலையத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கலாம் எனவும் மேற்படி அதிகாரிகள் குறிப்பிட்டனர். உண்மையில், குறித்த பிரதேசங்களில் பாவனையிலுள்ள சட்டவிரோத ஆயுதங்கள் குறித்தே பாதுகாப்புத் தரப்பினர் மேற்படி கூட்டத்தை ஒழுங்கு செய்ததுடன், மேற்படி அறிவித்தலையும் விடுத்தனர். மாறாக, எந்தவொரு இடத்திலும் கிழக்கிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஆயுதக்குழுக்கள் இயங்குகின்றன என்றோ அல்லது “ஜிஹாத்’ எனும் பெயரில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இருக்கின்றன என்றோ குறிப்பிட்டிருக்கவில்லை. இந்நிலையில், மேற்படி நிகழ்வையும், அறிவித்தலையும் வேண்டுமென்றே தவறாக அர்த்தப்படுத்தி தமது ஊடகங்களின் மீது கவனயீர்ப்பைப் பெற வேண்டுமென்பதற்காகவே குறித்த ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.

    புலிகள் அழிக்கப்பட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நாட்டிலுள்ள எல்லா ஊடகங்களும் செய்திப் பஞ்சத்தில் தவிக்கின்றன என்பது உண்மைதான். அதற்காக இல்லாத ஒன்றை எழுதி ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழியைப் போடுகின்ற இந்த செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையில் இன முரண்பாடு இந்தளவு தூரம் கூர்மை பெறுவதற்கு நாட்டின் தமிழ், சிங்கள, ஆங்கில தேசிய ஊடகங்கள் பெரும் பங்கு வகித்திருக்கின்றன என்பதில் முVற்றுக் கருத்திருக்க முடியாது. ஆனால், யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இனங்களிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என சகலரும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், ஊடகங்கள் இவ்வாறு நடந்து கொள்வது கவலையளிக்கிறது.

    தமிழர்களை சிங்களவர்களும், சிங்களவர்களை தமிழர்களும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் வகையிலான ஒரு விரும்பத்தகாத சூழலை ஊடகங்களே இந்நாட்டில் ஏற்படுத்தின. அதனைத்தான் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் மீது தோற்றுவிப்பதற்கு இவ் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. இந்நிலையில் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அரசியல் மற்றும் சமூகத் தலைமைகளின் கடமையாகும். இந்த நாட்டில் 45.000 இற்கும் மேற்பட்ட சட்ட விரோத ஆயுதங்கள் புழக்கத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு கிழக்கு மாகாணமும் விதிவிலக்கல்ல. ….. ஆனால், அவை ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் குழுவாகப் பயன்படுத்தப்பட்டன என்பதில்தான் மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன.

    சர்வதேச நாடுகளில் உள்ளதைப் போல் போன்றதோ அல்லது இலங்கையில் தோன்றிய சிங்கள, தமிழ் ஆயுதக் குழுக்களைப்போன்றோ இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் எந்தவொரு கோரிக்கையும் முன்னிறுத்திப் போராடுவதற்கான ஆயுதக் குழுக்கள் தோற்றம் பெற்றிருக்கவில்லை. பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் அரசுடன் இணைந்து பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க போராடினார்களே தவிர, இந்த நாட்டு அரசுக்கு எதிராக அவர்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவில்லை.

    இந்நிலையில், இந்த நாட்டில் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு முஸ்லிம் இளைஞர்கள் வழங்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டுவதை விடுத்து, அவர்களை இந்த நாட்டின் துரோகிகளாக சித்தரிக்க முனைவதும், முஸ்லிம் சமூகத்தின் மீது சிங்களவர்களும், தமிழர்களும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் சூழ்நிலையைத் தோற்றுவிப்பதும் விசனத்துக்குரியது. எனவேதான், இந்த ஊடகங்களின் தவறான அறிக்கையிடல் குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவூட்டும் பிரசாரங்களை கிழக்கு மாகாணத்திலுள்ள சமூக நல அமைப்புக்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இன நல்லுறவை சீர்குலைக்க முற்படும் இவ்வாறான ஊடகங்களைத் தோலுரித்துக் காட்டி, முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும். அன்ரன் பாலசிங்கமும், கிங்ஸ்லி ரொட்ரிகோவும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் குறித்து கருத்து வெளியிட்டபோது எவ்வாறு நாம் ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி அவர்களது கருத்துக்களை பிழை என்று ஏற்க வைத்தோமோ அதேபோன்று சமகாலத்திலும் அனைவரும் ஒருமித்துக் குரலெழுப்ப வேண்டும். இல்லையேல், இன நல்லுறவு துளிர் விடத்தொடங்கும் இக்காலப் பகுதியில் அதற்கான சந்தர்ப்பத்தை நாம் தவறவிட வேண்டியேற்படும்.

    (நன்றி : எங்கள் தேசம் – ஜூலை 01- 15)

    RASMIN

    ஜனவரி 31, 2012 at 9:45 பிப

  2. Suitable article

    Shoukie

    ஜனவரி 31, 2012 at 10:13 பிப

  3. அல்லாஹ் என்றும் பாதுகாவலன்

    zimer

    ஜனவரி 31, 2012 at 11:43 பிப

  4. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோல்விகண்ட பின்னர் பொதுவாகவே ஊடகங்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்தான் ‘செய்தி’ களுக்கான பஞ்சம். செய்திகள் இல்லாத நிலையில் சிங்கள, தமிழ் ஊடகங்களின் பார்வை முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது.

    இலங்கையிலிருந்து இயங்கும் சிங்கள ஊடகங்கள் பற்றிதான் நமது பார்வை குவிந்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து இயங்கும் தமிழ் ஊடகப் பயங்கரவாதம் குறித்து நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சிங்கள அச்சு, இலத்திரனியல் ஊடகங்களை விழுங்கிவிடும் அளவு புலம்பெயர்ந்த தமிழ் பயங்களரவாத இணைய ஊடகங்களின் செல்வாக்கு வியாப்பித்துள்ளது.

    இவ்வாறான தமிழ் ஊடகங்களின் செய்தி அப்பாவி தமிழ் மக்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் குறித்த தவறான அபிப்பிராயத்தை உருவாக்கும். இன நல்லிணக்கத்திற்கு சவாலாக அமையும். குறிப்பாக தமிழ் பிரதேசங்கள் சூழ அமைந்திருக்கும் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாககூட அமையலாம்.

    இந்நிலையில் சிங்கள, தமிழ் ஊடகங்களின் பொய்யான பரப்புரையை முறியடிக்க முஸ்லிம் சமூகமும் தன்னை தயார்படுத்துவது அவசியம். இதுதொடர்பில் முஸ்லிம் மீடியா போரம், முஸ்லிம் கவுன்சில், அகில இலங்கை உலமா சபை மற்றும் முஸ்லிம் சார்பு ஊடகங்களுக்கு பாரிய கடமைப்பாடு உள்ளது.

    முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானதும், இஸ்லாத்திற்கு எதிரானதுமான பிரச்சாரங்களை எதிர்கொள்ளவும், ஏனைய சமூகங்களுக்கு இதுதொடர்பில் விளக்கம் ஊட்டவும், சிங்கள – தமிழ் ஊடகங்களின் செயற்பாட்டை கண்காணிக்கவுமென முஸ்லிம் சமூகம் ஒரு பொறிமுறையை உருவாக்குவது குறித்து இவ்வேளையிலாவது சிந்திப்பது சிறந்ததாக இருக்குமென்பது எமது நம்பிக்கையாகும்..!

    jaffna muslim

    பிப்ரவரி 1, 2012 at 12:06 முப

  5. யாழ் மாநகர சபையில் விந்தன் என்னும் இனவாதி கக்கியவைகளை, மறுத்து திரித்து எழுதிய தமிழ் பயங்கரவாதிகளின் ஊடகம்தான், இந்த கட்டுரையையும் கிறுக்கியுள்ளது.

    சகோதரர் அதாவுல்லாஹ் அவர்கள், பகிரங்கமாக வட, கிழக்கு இணைப்பை அண்மையில் எதிர்த்திருந்தார். அதனால், அவரையும் பாதாள உலக கோஷ்டியுடன், ஓர் இணைப்பை ஏற்படுத்தி இருக்கிறது, இந்த ஓநாய் ஊடகம். இந்த கோமாளித்தனமான அபத்தங்களை வாசிக்கும்போது, சிரிப்புத்தான் வருகிறது.

    அடுத்தது, ஜமாத்துக்களின் பெயர்களை, சரியாக உச்சரித்து எழுதி இருக்கிறது. முஸ்லிம் இணையங்களை அடிக்கடி நோட்டம் விடும் அனுபவம் இருக்கிறதுபோல!

    காலம் காலமாக சிங்கள மக்களுடன் மோதி, மூக்கு உடைபட்டதுதான் மிச்சம்! இப்போது, முஸ்லிம்களை சிங்கள மக்களின்மேல் விரோத மனப்பான்மையை தூண்டிக்கொண்டிருக்கிறது. இவர்கள் வெற்றி பெறப் போவதில்லை.

    முஸ்லிம்கள் இணைப்பையோ போலிஸ், காணி அதிகாரங்களுக்கோ அனுமதி அளிக்கப் போவதில்லை. இது போன்று, இன்னும் முஸ்லிம்களுக்கு எதிரான கிறுக்குத்தனமான எழுத்துக்கள் வரும், போகும். இதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

    எந்தப் பிரச்சனைகளையும் அரசிடம், முஸ்லிம்கள் பேசித் தீர்க்கப்பட வேண்டுமேயொழிய, தமிழ்ப் பிரிவினைவாதிகளைப்போல் நாம் செயல்படக்கூடாது.

    இந்த கட்டுரையில் உள்ள அபத்தங்கள், இந்த தமிழ்ப் பயங்கரவாத ஊடகத்தைவிட பாதுகாப்பு அமைச்சுக்கு நன்கு தெரியும்.

    மும்மொழிகளிலும் எமது ஊடகப் பலத்தை ஊக்குவித்து, இப்படிப்பட்ட இனவாத நச்சுக் கருத்துக்களுக்கு சமாதி கட்டுவதே, இன்றைய எமது சகோதரர்களின் இன்றியமையாத கடமை!

    – Namo namo maatha

    namo namo matha

    பிப்ரவரி 1, 2012 at 5:32 முப

  6. முஸ்லிம் சமூகமே முஸ்லிம் சமூகம் என்ற பொதுவான சமூக உறவுக்கான சமாதான சகவாழ்வுக்கான ஒற்றுமையை கட்டி காப்பதட்கான இலக்கில் இருந்து விலகி தௌஹீத் சமூகம்,தப்லிக் சமூகம், சலபி சமூகம்,ஜமாஃஅத்தே இஸ்லாமி சமூகம்,இஃவான்கள் சமூகம் என்பதாக சிந்திக்க தொடங்கி கொடுக்கல்வாங்கள்,தொழில்,திருமண உறவு,வியாபாரம்,ஏன் ஸகாத்,ஸதகா கொடுப்பதில் கூட நம்ம இயக்கதவரா என்று பார்து கொடுக்கும் நிலை அதிகரித்து எங்கும் எதிலுமே இயக்கவேறுபாடையும் இயக்க நலனை நிறுத்துவதில்லும் உறுதியாக இருந்து கொண்டு ஏனைய இயக்கங்ககளை எப்படி எல்லாம் மாட்டி வைக்க முடியுமோ எப்படி எல்லாம் சிக்க வைக்க முடியுமோ எப்படி எல்லாம் சீரழிக்க வழிவகை செய்ய முடியுமோ அத்தகைய காரியங்களில் கட்சிதமாக திறைமறைவில் ஈடுபட்டு முஸ்லிம்களே முஸ்லிம் இயங்கங்களை காழ்புணர்வுகாரணமாக தீவிரவாத கும்பலாக நன்கு மிக திறமையாக சோடித்து உரிய இடங்களுக்கு முறைபாடுகள் செய்கையில் காரியங்களை கட்சிதமாக அரங்கேற்றுகையில் ஏனைய சமூகத்தவர் அந்த விடயத்தை இன்னும் பெரிதாக ஊதி பெருக்கி சொல்லும் நிலமை உருவாகி இருக்கிறது ஈராக்,ஆப்கான் என உலகில் சின்னாபின்னமாகி கிடக்கும் முஸ்லிம் தேசங்கள் எல்லாம் சின்னாபின்னமாக முதல் காரணகர்தாகளாக இருந்து எதிரிக்கி கை கொடுத்து உதவியது அந்த தேசத்திலேயே வாழ்ந்த முஸ்லிம் சகோதரர்களில் ஒருசாரார்தான் அதேபோன்றுதான் இலங்கையிலும் முஸ்லிம்களின் வாழ்வு சீரழிந்து முஸ்லிம்களிடையே குலப்பங்கள் உருவாகி முஸ்லிம்களின் அழிவுக்கு முதல் காரணமாகபோவதும் இலங்கை முஸ்லிம்கலிடையே உள்ள இயக்க வெறியும் ஏனைய இயக்கங்களை அழித்தொழிக்க எதையும் செய்ய துணியும் காழ்புணர்வுகளுமே!!! ஆக நமது எதிர்கால நிலமை எமது இயக்க வெரியர்களின் செயட்பாடுகளிலேயே முதன்மையாக தங்கி இருக்கிறது!!! இதட்கு தீர்வுகான சமூகத்தில் உள்ள நன்மனம் படைத்த ஒற்றுமையைவிரும்பும் இஹ்லாஸ் உள்ள மக்களின் செயட்பாடுகள் ஓங்க வேண்டும் மக்களைடையே தஸ்கியத்துன் நப்ஸ்குறிய உள்ள பரிசுத்ததுகுறிய உழைப்புகள் செய்ய பட்டு சமூகத்தில் உள்ள ஒற்றுமைக்கௌ பங்கமான விடயங்களுக்கு திர்வுகள் காணபட வேண்டும்

    Mohammed Hiraz

    பிப்ரவரி 1, 2012 at 9:06 பிப

  7. 2012 best joke

    niyazcader121

    பிப்ரவரி 1, 2012 at 10:46 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: