Lankamuslim.org

One World One Ummah

11 பேருடன் சடலத்தை காணவில்லை: போலிச் செய்தி அமைச்சர் டக்ளஸ்

leave a comment »

சென்னையிலிருந்து விமானம் மூலம் கொண் டுவரப்பட்ட இறந்தவரின் சடலத்தை பொறுப்பெடுத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு வந்த அவரது 11 உறவினர்கள் பத்து நாட்களாக காணாமல் போயிருக்கிறார்கள் என்ற செய்தியை டிசம்பர் மாதம் 29ஆம் திகதி உதயன் பத்திரிகையின் முன்பக் கத்தில் பார்த்த பின்னர் அதுபற்றி தாம் விசாரணை களை மேற்கொண்ட போது இது ஒரு தவறான செய்தி என்பதை தெரிந்து கொண்டேன். இது போன்ற செய்திகளை சில விஷமிகள் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் போர்வையில் பரப்பி நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை உண்டுபண்ண எத்தனிக்கிறார்கள். என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் சில அரசியல் சக்திகள் அரசியல் இலாபம் திரட்டுவதற்காக மக்க ளிடையே இதுபோன்ற போலியான வதந்திகளை கிளப்பி- மக்களை அச்சுறுத்துவதற்கும் எத்தனிக்கிறார்கள்.

அரசியலில் செல்லாக்காசாக மாறிக் கொண்டிருக்கும் இந்த சக்திகள் குட்டையை கிளப்பிவிட்டு வேடிக் கைப் பார்த்து சுயலாபம் தேடுவதற்கும் முயற்சி செய்கின்றனர். கடந்த காலத்திலும் இந்த சக்திகள் இத்தகைய போலிப் பிரசாரங்கள் மூலம் சுயவியாபாரத்தை மேம்படுத்துவதற்கும் அதன் மூலம் பணம் திரட்டுவதற்கும் எத்தனித்த எத்தனையோ நிகழ்வுகளை எமது மக்கள் நன்கு அறிவார்கள். தமிழ் மக்கள் இத்தகைய பொய் பிரசாரங்களை நம்பி ஏமாந்துவிடமாட்டார்கள்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள்- கடத்தல்கள் போன்றவை தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது என்ற தப்பபிப்பிராயத்தை வெளிநாடுகளில் பரப்புவதன் மூலமும் சுய பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான பொய் காரணங்களை காட்டி வெளிநாடு செல்ல எத்தனிப்பவர்களுக்கு உதவும் முகமாகவே இத்தகைய போலி செய்திகளும்- வதந்திகளும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரப்பப்படுகின்றன.

11 பேர் காணாமல் போன செய்தி கிடைத்தவுடன் விசாரணைகளை செய்து உண்மையை வெளிப்படுத்துவேன் என்ற அச்சத்தில்- இந்த போலி செய்தியை வெளியிட்டவர்கள் இப்போது மெளனமாகியிருக்கிறார்கள். ஒரு தவறான செய்தியை வெளியிட்ட இப்பத்திரிகை அதனை திருத்தி உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துக் கூறும் பத்திரிகா தர்மத்தை கடைப்பிடிப்பது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 31, 2011 இல் 6:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: