Lankamuslim.org

10 ஆயிரத்துக்கும் அதிகமான நியமனங்கள் முஸ்லிம் எவருக்கும் நியமனம் வழங்கப்படவில்லை

leave a comment »

அண்மையில் வடமாகாணத்தில் 100 முஸ்லிம் இளைஞர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டது இதை தொடர்ந்து அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வேலை வாய்ப்பு வழங்கும் விடயத்திலும் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாக சிலர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர் இது தொடர்பாக தெளிவு படுத்தியுள்ள அமைச்சர் 100 முஸ்லிம் இளைஞர்களுக்கு நான் விவசாயதிணைக்களத்தில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுத்ததாகக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கடந்த 21 வருடங்களில் வட மாகாணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஆனால் இவற்றில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் எவருக்கும் நியமனம் வழங்கப்படவில்லை. தற்போது வடக்கில் இருந்து வெளியேற்ற அந்த ஒரு இலட்ம் மக்கள் சார்பில் 100 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டபோது அதைத் தாங்கிக் கொள்ள முடியாத சில சக்திகள் இது பற்றிய தப்பபிப்பிராயங்களை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பங்களை தோற்று விக்க முயல்வது கவலைக்குரியதாகும். என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்

உண்மையில் அந்த நியமனத்தை வழங்கியது நான் அல்ல. 2010.10.28 இல் சமர்ப்பிக்கப்பட்ட இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவும் உள்ளூராட்சி அமைச்சர் அதாவுல்லாஹ்வும் கையெழுத்திட்டுள்ளனர். வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவும் பொருட்டு வடக்கு இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான செயலகம் எனும் பெயரில் தனியான செயலகம் ஒன்று யெற்பட்டு வந்தது. அந்த செயலகத்தை மூடுவதோடு அந்த செயலகத்தில் கடந்த 7 வருடங்களாக தொண்டர்களாக பணியாற்றிய உத்தியோகத்தர்களை அவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த மாகாணத்திலேயே நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு நியமிப்பது என்றே இவ் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை அமைச்சரவையும் அங்கீகத்திருந்தது. அதனடிப்படையில் அந்த செயலகத்தின் அலுவலகம் 2010 ஆம் ஆண்டு இறுதியில் மூடப்பட்டு அவர்கள் அனைவரையும் வடமகாணத்திலே வேறு வெற்றிடங்களுக்கு நியமித்தது. அவர்களுக்குத்தான் அண்மையில் நியமனம் வழங்கப்பட்டது.

கடந்த 21 வருடங்களில் வட மாகாணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நியமனங்கள் வழங்கப்பட்டன.ஆனால் இவற்றில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் எவருக்கும் நியமனம் வழங்கப்படவில்லை. தற்போது வடக்கில் இருந்து வெளியேற்ற அந்த ஒரு இலட்ம் மக்கள் சார்பில் 100 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டபோது அதைத் தாங்கிக் கொள்ள முடியாத சில சக்திகள் இது பற்றிய தப்பபிப்பிராயங்களை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பங்களை தோற்று விக்க முயல்வது கவலைக்குரியதாகும்.

இந்த விடயத்தில் நான் அமைச்சரவைக்குப் பத்திரம் சமர்ப்பிக்கவுமில்லை. நான் மீள்குடியேயற்ற அமைச்சராக இருக்கின்றபோது இதனைச் செய்யவுமில்லை. இந்த விடயத்தை முழுக்க முழுக்க கையாண்டது ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையே ஆகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 31, 2011 இல் 6:19 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: