Lankamuslim.org

One World One Ummah

யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனதிற்கு எதிராக வழக்கு தொடருவோம் : அமைச்சர் ரிஷாத்

leave a comment »

வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனமே தடையாக உள்ளது என கைத்தொழில் மூதலீட்டு அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்திற்கு எதிராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் மீள்குடியேற்றப்படும் முஸ்லிம்களை பழைய அகதி என்று பிரித்து யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்தினரால் எந்தவித நிவாரணமும் வழங்ப்படாதுள்ளது என அமைச்சர் றிசாட் தெரிவித்துள்ளார் .

இலங்கையில் பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் என்ற வேறுபாடு இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில், யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனம் மாத்திரம் ஏன் அகதிகளை பழைய அகதி, புதிய அகதி என பிரிக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இதன் மூலம் வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் சதியினையே யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனம் மேற்கொள்வதாக அமைச்சர் றிசாட் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 30, 2011 இல் 7:53 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: