Lankamuslim.org

அரசு, தமிழ் கூட்டமைப்பு பேச்சு ஜனவரி 17 இல் முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணி தயாராகி விட்டதா ?

leave a comment »

முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணியை உருவாக்க எந்த ஏற்பாடுகளையும் காணமுடியவில்லை:   அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வாவும் பேச்சுநடத்தித் தீர்மானிப்பார்கள் என பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கும் அரசாங்கக் குழுப் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இரு தரப்புக்குமான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது ஆரம்பிக்கும். அடுத்த மாத இறுதி வாரத்தில் மூன்று நாட்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

அதேவேளை அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான அடுத்த கட்டப் பேச்சின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சின் கலந்துகொள்ளும் என்றும் அதற்கான வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு வழங்கியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் துணை பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ஆனால் அந்த தகவல் சரியாக இருந்தால் முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கும் தனித்தரப்பு என்பது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து அரசுடன் பேசுவது அல்ல மாறாக முஸ்லிம் தரப்பு கூட்டு முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டு அந்த கூட்டு முன்னணி முஸ்லிம் தனித்தரப்பாக பேச்சில் பங்கு கொள்ளவேண்டும் என்பதுதான் முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணி உருவாக்கப்படுமா ?? அகில இலங்கை ஜம்இயதுல் உலமா , மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஆகியன அதற்கு என்ன பங்காற்றப்போகிறது ??

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 30, 2011 இல் 11:42 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: